கிரெடிட் ஸ்கோர் குறைந்துள்ளதா.. எப்படி தனிநபர் கடன் வாங்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்பளதாரர்களுக்கு இன்று அவசர காலங்களில் ஆபத்பாந்தவனாக உதவுவது தனி நபர் கடன் தான். ஏனெனில் எந்தவித பிணையமும் இல்லாமல் வருமானத்தினை ஆதாரமாக கொண்டு கொடுக்கப்படும் கடன் இது தான்.

இது பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்கள் என்றாலும், இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் திருமணத்திற்காகவோ அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கவோ அல்லது மற்ற நிதி சார்ந்த தேவைகளுக்கோ தனிநபர் கடனையே நாடுகின்றனர்.

சிலர் நெருக்கடியான கடனை அடைக்கவும், வீட்டினை புதுப்பிப்பதற்கும் கூட தனி நபர் கடனையே நாடுகின்றனர். ஏனெனில் வீட்டுக் கடனுக்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது பர்சனல் லோன் வாங்குவது எளிது.

சென்னை உள்பட 25 விமான நிலையங்கள்.. பணமாக்குதல் திட்டம் மூலம் ரூ.20,782 கோடி நிதி திரட்ட திட்டம்! சென்னை உள்பட 25 விமான நிலையங்கள்.. பணமாக்குதல் திட்டம் மூலம் ரூ.20,782 கோடி நிதி திரட்ட திட்டம்!

பர்சனல் வாங்க முக்கிய அம்சம்

பர்சனல் வாங்க முக்கிய அம்சம்

எனினும் பர்சனல் லோன் வாங்க மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, கிரெடிட் ஸ்கோர் தான். ஆனால் இந்த கிரெடிட் ஸ்கோர் என்பது குறைவாக உள்ளவர்கள், எப்படி கடன் வாங்குவது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமே. இவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்குமா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் கேட்கப்படுகிறது.

ஆவணங்கள் சரியாக இருக்கிறதா?

ஆவணங்கள் சரியாக இருக்கிறதா?

உங்களது ஆவணங்கள் சரியாக இருந்தால் ஒரே நாளில்கூட கடன் கிடைத்துவிடும். தனிநபர் கடன் வாங்குவதற்கு வருமானத்தின் சான்றாக, நீங்கள் சம்பள அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவற்றை ஆவணங்களாக வழங்க வேண்டும். இது தவிர அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்க ஆவணங்கள் மற்றும் பான் கார்டுகள் தேவை. இதே சுயதொழில் செய்பவராக இருந்தால், அதற்கான ஆவணங்கள் கொடுப்பட வேண்டும்.

நிதி நிறுவனங்களில் வாங்கலாம்
 

நிதி நிறுவனங்களில் வாங்கலாம்

உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வங்கிகள் உங்களது கோரிக்கையை நிராகரிக்கலாம். இதனால் நீங்கள் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கலாம். இங்கு கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் தரப்படுகிறது. ஆனால் வட்டி விகிதம் வங்கிகளை விட அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் செலுத்தும் தவணைத் தொகையும் அதிகமாக இருக்கும்.

உத்தரவாத தாரராக மாறுங்கள்?

உத்தரவாத தாரராக மாறுங்கள்?

பர்சனல் லோனுக்கு நீங்களே உங்களின் உத்தரவாத தாரராக மாறலாம். இது கடன் வழங்குபவர்களுக்கு கடனை திரும்ப செலுத்த தவறினால், உத்திரவாததாரர் திரும்ப செலுத்தலாம் என்ற நிலையை உருவாக்கலாம். ஆக நல்ல கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை சரியாக திரும்ப செலுத்துபவராகவும், உங்களுக்கு நம்பிக்கையானவராகவும் இருப்பவர் மூலம் வாங்கலாம்.

கூட்டாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்களது துனை அல்லது நிலையான வருமானம் உள்ள ஒரு நபரை இணை விண்ணப்பதாரராக சேர்க்கலாம். இது குறைந்த வட்டி விகிதத்தில் தனி நபர் கடனைப் பெற உதவும்.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

உங்கள் சிபில் ஸ்கோரினை சரிபார்த்து அதில் உள்ள பிரச்சனைகளை களையவும். சில நேரங்களில் கடன் அறிக்கையில் பிழைகள் இருந்தாலும், உங்களது சிபில் எண் குறைவாக இருக்கும். ஆக கடன் அறிக்கையை சரியாக இருக்கிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

வருமான சான்றை கொடுங்கள்

வருமான சான்றை கொடுங்கள்

நீங்கள் வாங்கிய கடனை சரியாக செலுத்த தகுதியானவர் தான் என்ற நம்பிக்கையை, வங்கிகளுக்கு அளிக்க வேண்டும். ஆக வங்கிகளுக்கு உங்களது வருமான ஆதாரித்தினை காட்டலாம். ஆக இதனை வைத்தும் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்கலாம்.

கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துங்கள்?

கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துங்கள்?

எப்படியிருப்பினும் பாதுகாப்பற்ற கடனாக பார்க்கப்படும் பர்சனல் லோனுக்கு, முழுத்தகுதி என்பது கிரெடிட் ஸ்கோர் தான். ஆக அதனை அதிகரிக்க பிக்ஸட் டெபாசிட் போட்டு வைக்கலாம். கிரெடிட் கார்டினை பெற்று, அதனை சரியாக திரும்ப செலுத்தலாம். இதனை நீங்கள் சரியாக செலுத்தும் பட்சத்தில் உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can I get a personal Loan on low credit score; how to get?

Bank news updates.. Can I get a personal Loan on low credit score; how to get on PL?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X