கூகுள் உடன் கைகோர்க்கும் நெட்பிளிக்ஸ்.. புதிய பிளான் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ், கூகுள் மற்றும் என்.சி.பி யுனிவர்ஸல் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

தற்போது திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் வழக்கம் பலரிடம் குறைந்துவிட்டது என்றும் வீட்டில் இருந்துகொண்டே ஓடிடி மூலம் வசதியாக புதிய திரைப்படங்களை பார்த்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது திரைப்படங்களை கொடுப்பதில் அனைத்து ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

300 பேரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பிய நெட்பிளிக்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. ஏன்?

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது சப்ஸ்கிரைபர்களை அதிகளவில் இழந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தங்கள் நிறுவனத்தின் சப்ஸ்கிரைபர்களை அதிகரிக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது.

குறைந்த பிளான்

குறைந்த பிளான்

இந்த புதிய திட்டம் என்பது விளம்பரத்துடன் கூடிய குறைந்த கட்டண திட்டமாகும். இதுகுறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ டெட் சரண்டோஸ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது 'எப்போதும் போல் மற்ற பிளான்கள் விளம்பரம் இல்லாமல் இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் டெட் சரண்டோஸ் நிறுவனத்தின் ஓடிடியை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த விரும்புபவர்களுக்காக விளம்பரத்துடன் கூடிய புதிய பிளான் கொண்டுவர இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

கூகுள்
 

கூகுள்

இந்த குறைந்த கட்டண திட்டத்திற்காக விளம்பரங்களை சேகரிப்பதற்காக கூகுள் மற்றும் என்சிபி யுனிவர்சல் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த பிளான் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

ஓடிடி நிறுவனங்களில் அதிக கட்டணம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தான் உள்ளது என்று பொதுமக்கள் புகார் கூறி வரும் நிலையில் தற்போது இந்த புதிய கட்டண பிளானை நெட்பிளிக்ஸ் கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சப்ஸ்கிரைபர்கள்

சப்ஸ்கிரைபர்கள்

சமீபகாலமாக நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது. இது அந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை நெட்பிளிக்ஸ் இழக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பங்குகள்

பங்குகள்

இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து வரும் நிலையில் சப்ஸ்கிரைபர்களை அதிகரிப்பதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளம்பரங்களுடன் கூடிய குறைந்த கட்டண பிளானை கொண்டுவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளான் அமலுக்கு வந்தால் நிச்சயம் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can Netflix joined with Google? what is next plan?

Can Netflix joined with Google? what is next plan? | கூகுளுடன் கைகோர்க்கும் நெட்பிளிக்ஸ்: புதிய பிளான் என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X