மார்ச் மாதம் கார் விற்பனை 51% சரிவு, அப்போ ஏப்ரல் மாதம்..?!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு விதித்தது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த விற்பனை சந்தையும் முடங்கியது, இதன் எதிரொலியாக மார்ச் மாதம் பயணிகள் வாகன விற்பனை பாதியாகக் குறைந்துள்ளது.

ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய அளவிலான தாக்கத்தை எதிர்கொண்டு இருந்த போது கொரோனா இதை மேலும் மோசமாக்கியுள்ளது என்பது தான் உண்மை.

21 நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு: இந்திய பொருளாதாரம்21 நாளில் 8 லட்சம் கோடி ரூபாய் பாதிப்பு: இந்திய பொருளாதாரம்

ஆட்டோமொபைல் சந்தை

ஆட்டோமொபைல் சந்தை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்கனவே மோசமான நிலையிலிருந்த நிலையில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் கார் விற்பனை சுமார் 18 சதவீதம் வரையில் சரிந்து 21.5 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இதேபோல் மார்ச் மாதம் கார் உற்பத்தியாளர்கள் வெறும் 10 லட்ச கார்களை மட்டுமே ரீடைல் விற்பனைக்கு அனுப்பியுள்ளது. இது கடவந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைவாகும்.

 

விற்பனை

விற்பனை

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் மாதம் கார் விற்பனை 51 சதவீதம் வரையில் சரிந்து 1,43,014 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதேபோல் வர்த்தக வாகனங்களின் விற்பனை 88 சதவீதம் சரிந்து 13,027 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதேபோல் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 40 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 8,66,849 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

 

மார்ச் 2020

மார்ச் 2020

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு 2020 மார்ச் மாதம் மிகவும் சவாலான காலம். ஏற்கனவே மந்தமாக இருந்த வாகன விற்பனை சந்தையில் கொரோனாவிற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டு மொத்த உற்பத்தி மற்றும் விற்பனையை முடக்கியது.

வர்த்தகம் மற்றும் விற்பனை முடங்கியதால் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாகனங்களின் விலையை நிர்ணயம் செய்வது கடினமாகியுள்ளது.

 

2,300 கோடி ரூபாய்

2,300 கோடி ரூபாய்

இந்திய ஆட்டோமொபைல் துறை முடங்கியுள்ள நிலையில் தினமும் 2,300 கோடி ரூபாய் அளவிலான Turnover பாதிக்கப்படுகிறது.

இப்படியிருக்கும் போது ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்காகக் கிட்டதட்ட நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் தற்போதைய மிகப்பெரிய பிரச்சனை.

 

ஏப்ரல் மாதம்

ஏப்ரல் மாதம்

மார்ச் மாதம் 10 நாட்களுக்கே 51 சதவீதம் சரிவு என்றால் ஏப்ரல் மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறையின் நிலை எப்படியிருக்கும் என்பதற்குச் சீனா தான் பதில்.

சீன கார் விற்பனையில் 92% சரிவு.. கொரோனா-வின் கொடூரம்..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Car sales halve in March due to COVID-19 outbreak

Vehicle sales in India fell to almost half in March from a year earlier, as the nationwide lockdown imposed to check the spread of the coronavirus pandemic brought production as well as dispatches to a standstill. Manufactures dispatched just over a million vehicles to dealerships last month, a 45% decline from a year earlier.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X