பிட்காயின் டாலரை முழுங்கிவிடுமா.. கேட்டது யார் தெரியுமா..!!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சியின் தாக்கம் அமெரிக்காவில், பிரிட்டன் போன்ற பெரு நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் அதிகமாகவே உள்ளது.

 

கிரிப்டோகரன்சி மட்டும் அல்லாமல் அதைச் சார்ந்த பிளாக்செயின், WEB3 போன்றவை அடுத்தடுத்து பல துறையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராகி வரும் நிலையில் அரசுகளுக்கு மட்டும் அல்லாமல் பெரும் பணக்காரர்களுக்கும், பிரபலங்களுக்கும் பெரிய அளவிலான பயம் உருவாகியுள்ளது.

2வது நாளாக ஏற்றத்தில் சந்தை.. பெரும் நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள்.. ஏன்..!

அமெரிக்காவின் முன்னணி பாப் பாடகரான கார்டி பி தனது டிவிட்டர் கணக்கில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளார், இதற்குப் பதில் சொன்னது யார் தெரியுமா...?

கார்டி பி டிவீட்

கார்டி பி டிவீட்

கார்டி பி தனது டிவிட்டரில், 'கிரிப்டோ டாலரை மாற்றப் போகிறது என்று நினைக்கிறீர்களா?' எனப் பதிவிட்டார். அதாவது டாலருக்கு பதிலாகக் கிரிப்டோ தான் பயன்படுத்தப்படுமா என்பது தான் இந்தக் கேள்வியின் அர்த்தம், இது நடக்கும் என்பதை உணர்ந்து தான் தற்போது உலக நாடுகள் டிஜிட்டல் கரன்சி என்ற ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

ஜாக் டோர்சி

ஜாக் டோர்சி

இந்நிலையில் கார்டி பி-யின் டிவீட் பதிவான சில நிமிடத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் தலைவரான ஜாக் டோர்சி இதற்கு 'ஆம், பிட்காயின் கட்டாயம் டாலரை ரீப்ளேஸ் செய்யும்' எனப் பதில் அளித்துள்ளார். ஒமிக்ரான் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்துள்ள வேளையில் கார்டிபி மற்றும் ஜாக் டோர்சியின் இந்த டிவீட் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தை ஒன்று சேர்க்கும்
 

உலகத்தை ஒன்று சேர்க்கும்

இதுமட்டும் அல்லாமல் கார்டி பி டிவீட் உடன் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ஜாக் டோர்சி செய்ய மற்றொரு டிவீட்டும் பிரபலமாகியுள்ளது. பிட்காயின் பிரிந்து கிடைக்கும் நாடுகளை ஒன்று சேர்க்கும், அதைத் தொடர்ந்து மொத்த உலகத்தையும் ஒன்று சேர்க்கும் எனக் கூறியிருந்தார், இந்த டிவீட்டை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி உள்ளனர்.

கிரிப்டோகரன்சி மதிப்பு

கிரிப்டோகரன்சி மதிப்பு

கடந்த சில வாரங்களாகப் பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சியின் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது, குறிப்பாகப் பிட்காயின் 30 சதவீதமும், எதிரியம் 20 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் நேற்று டாலர் மதிப்புச் சரிவு மற்றும் கார்டிபி - ஜாக் டோர்சி டிவீட் வாயிலாகக் கிரிப்டோகரன்சியின் மதிப்பு மீண்டும் உயர துவங்கியுள்ளது.

பிட்காயின் மதிப்பு உயர்வு

பிட்காயின் மதிப்பு உயர்வு

இன்று கிரிப்டோ சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 49,216 டாலர், எதிரியம் 4,048.05 டாலர், ரிப்பிள் 0.9632 டாலர், சோலானா 179.37 டாலர், டெரா 92.46 டாலர், கார்டானோ 1.30 டாலர், போல்காடாட் 25.79 டாலர், ஸ்டெல்லார் 0.273 டாலர், பாலிகான் 2.54 டாலர், டோஜ்காயின் 0.17 டாலர், ஷிபாஇனு 3.70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. புதன்கிழமை டாப் 20 கிரிப்டோகரன்சியும் உயர்வுடன் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cardi B asks if Bitcoin will replace dollar, Jack Dorsey answer went crazy on twitter

Cardi B asks whether Bitcoin will replace dollar, Jack Dorsey answer went crazy on twitter பிட்காயின் டாலரை முழுங்கிவிடுமா.. கேட்டது யார் தெரியுமா..!!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X