வேலைதேடுவோருக்கு இது மகிழ்ச்சியான செய்தி.. இனி நல்ல காலம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு இது மிக நல்ல விஷயம் என்றே கூறலாம்.

 

பணியமர்த்தல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் ஒன்று வேலை தேடுவோருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக, முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இன்று இருக்கும் நெருக்கடியான காலகட்டத்திற்கு மத்தியில், பலம் லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவுக்கு மத்தியில், நம்பிக்கையிழந்து காணப்படும் மக்கள், வேலையிழப்பு, அதிகரித்து வரும் வேலையின்மை, நிதி நெருக்கடி இப்படி பல காரணிகளால் மிக மோசாமாக நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர் என்றே கூறலாம்.

நம்பிக்கையளிக்கும் செய்தி

நம்பிக்கையளிக்கும் செய்தி

அப்பாடியானவர்களுக்கு இது நிச்சயம் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் எனலாம். ஏனெனில் அனுதினமும் வேலையின்மை அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், அதற்கு மத்தியில் பணியமர்த்தலும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படும் விஷயம் நம்பிக்கையளிக்கிறது தானே. இது குறித்து CareerNet நிறுவனம் Present Hiring Outlook in India and the Future of Work என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

பணியமர்த்தல் அதிகரிக்கும்

பணியமர்த்தல் அதிகரிக்கும்

இந்த ஆய்வில் 10ல் 8 நிறுவனங்கள் தீவிரமாக பணியமர்த்தி வருகின்றனவாம். இதே 6% நிறுவனங்கள் மீண்டும் பணியமர்த்தலை தொடங்கவில்லை என்று பதிலளித்துள்ளன.

இதில் வங்கி துறை, இ-காமர்ஸ் துறை, இன்சூரன்ஸ் & நிதி சேவை துறை, ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறையில் மற்ற துறைகளை காட்டிலும் பணியமர்த்தல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஹைதராபாத் தான் டாப்
 

ஹைதராபாத் தான் டாப்

குறிப்பாக இந்த பணியமர்த்தலில் ஹைதராபாத் நகரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு பதிலளித்தவர்களில் 100% பேர் தீவிரமாக பணியமர்த்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதே பெங்களூரில் 80% நிறுவனங்கள் பணியமர்த்தல் குறித்து ஆலோசித்து வருவதாகவும், 5% பேர் பணியமர்த்தலை தொடங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

டிஜிட்டல் திறன் வாய்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்

டிஜிட்டல் திறன் வாய்ந்தவர்களுக்கு முக்கியத்துவம்

இதனால் தொழில் நுட்பத்தின் தேவையானது நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. ஆக டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு தேவை அதிகம் உள்ளது. பணியமர்த்துபவர்களில் 69% பேர் தங்களது ஊழியர்கள் தொழில்நுட்ப அடிப்படையில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பவர்களாகவே தேர்தெடுக்கின்றன.

யார் யார் பங்கேற்பு?

யார் யார் பங்கேற்பு?

இந்த ஆய்வில் 80க்கும் மேற்பட்ட HR தலைவர்கள் மற்றும் 1,600க்கும் மேற்பட்ட பலவேறு துறையினை சார்ந்த ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். ஆக மொத்தத்தில் இந்த ஆய்வில் பணியமர்த்தல் என்பது மீண்டும் வேகமெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றது. கல்லூரி மற்றும் பல்கலைக் கழங்கங்கள் விர்சுவல் மூலம் பணியமர்த்தலை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதிலும் நேர்மறையான பார்வை தான்

இதிலும் நேர்மறையான பார்வை தான்

அதோடு கிக்/ஒப்பந்த தொழிலாளர்கள், ப்ரீலான்சர் பணியமர்த்தலும் வழக்கம் போல் இருக்கும் என்ற நேர்மறையான பார்வையே உள்ளது என்று கேரியர் நெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனமான அன்ஷூமன் தாஸ் கூறியுள்ளார்.

கேம்பஸ் மூலம் திட்டம்

கேம்பஸ் மூலம் திட்டம்

43% சிறு நிறுவனங்கள் (500 பணியாளர்கள் வரை உள்ள நிறுவனங்கள்) இந்த ஆண்டு பணியமர்த்தலை கேம்பஸ் மூலமாக திட்டமிடவில்லை என்றாலும், 59% நடுத்தர நிறுவனங்கள் (501 - 5000 ஊழியர்கள்), 64% பெரிய நிறுவனங்கள் (5001க்கும் மேற்பட்ட ஊழியர்கள்) கேம்பஸ் மூலமான பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CareerNet study says 8 out of 10 companies are actively hiring now

Job updates.. CareerNet study says 8 out of 10 companies are actively hiring now
Story first published: Wednesday, June 2, 2021, 18:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X