'குடி'மகன்-களுக்கு செக்.. மதுபானம் மீது தாறுமாறான வரி உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் காரணமாக மதுபான விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டு இருந்த நிலையில்ல தற்போது மாநில அரசுகளின் வருமானத்திற்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுபான விற்பனையை டெல்லி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மும்பை ஆகிய மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி தமிழ்நாட்டில் துவங்க உள்ளது.

 

மதுபான விற்பனை தடையால் ஏற்பட்ட வருமான சரிவை ஈடு செய்யும் வகையில் தற்போது மாநில அரசுகள் மதுபானத்தின் மீதான வரியை தாறுமாறாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தப் புதிய வரியின் பெயர் "ஸ்பெஷல் கொரோனா கட்டணம்"..!!

மாநில அரசுகள்

மாநில அரசுகள்

மாநில அரசுக்கு பல்வேறு வகையில் வருமானம் கிடைத்தாலும், அதிகளவிலான வருமானம் மதுபான விற்பனையில் இருந்து தான் கிடைக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயில் 15 முதல் 20 சதவீத வருவாய் மதுபான விற்பனை மூலம் கிடைக்கிறது. ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் மதுபான விற்பனை முற்றிலும் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், மதுபான விற்பனையைத் துவங்கியுள்ளது மாநில அரசுகள்.

 

அதிக வரி

அதிக வரி

திங்கட்கிழமை முதல் டெல்லியில் மதுபான விற்பனை துவங்கப்பட்ட நிலையில் 'குடி'மகன் மற்றும் 'குடி'மகள்கள் வரிசை கட்டி வந்து வாங்க துவங்கினர். ஆனால் மாநில அரசு மதுபானம் மீது "ஸ்பெஷல் கொரோனா கட்டணம்" பெயரில் சுமார் 70 சதவீத வரியை விதித்திருந்தது. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?

மாற்ற மாநிலங்கள்
 

மாற்ற மாநிலங்கள்

இதேபோல் ஆந்திரா பிரதேச மாநில அரசு 75 சதவீத வரியும், மேற்கு வங்காள அரசு 30 சதவீத வரியும், ஹரியானா மாநில அரசு இந்திய மதுபானங்கள் மீது கூடுதலாக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு மதுபானத்திற்கு 20 ரூபாயும் கூடுதல் வரியாக விதித்துள்ளது.

மேலும் ராஜஸ்தான் மாநில அரசும் ஹரியானா மாநிலத்தைப் போன்றே கூடுதல் வரியை அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு

தமிழ்நாடு

மே 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் மதுபானத்தின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக்-ல் விற்பனை செய்யப்படும் மதுபானம் மீது 15 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 180ml சாதாரண மதுபானத்தின் விலை 10 ரூபாயும், நடு மற்றும் உயர்தர மதுபானத்தின் விலை 20 ரூபாயும் அதிகரிக்க உள்ளது.

சுமார் 44 நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டில் மதுபானம் விற்பனை துவங்க இருப்பதால் விற்பனையில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மதுபான நிறுவனங்களின் பங்குகள்

மதுபான நிறுவனங்களின் பங்குகள்

ஏற்கனவே லாக்டவுன் காரணத்தால் மதுபான விற்பனை மோசமான நிலையில் இருந்த போது, தற்போது அனைத்து மாநிலங்களும் வரி உயர்த்தி வருகிறது, இதனால் விற்பனை பாதிக்கப்படும். இதன் எதிரொலியாக நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், யுனைடெட் ப்ரீவரிஸ், ராடிகோ கெய்தான் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 6 முதல் 8 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

மும்பை

மும்பை

மும்பை மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கொரோனா தொற்றும் அதிகமாகும் என்ற கணிப்பில் Mumbai Municipal Corporation புதன்கிழமை முதல் அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மட்டுமே திறக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cash-strapped states rush to raise taxes on alcohol 'Special Corona Fee'

After Delhi, Andhra Pradesh and West Bengal raised the duty on alcohol citing the Covid crisis, liquor companies fear other states will follow suit, further damaging the category already impacted by the lockdown and a cutback in discretionary spends.
Story first published: Wednesday, May 6, 2020, 14:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X