அட இது தான் நல்ல சான்ஸ்.. இந்த நல்ல வாய்ப்பை யூஸ் பண்ணுங்க.. CEA கிருஷ்ணமூர்த்தி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் கொடிய கொரோனாவால் 1,350 பேருக்கும் மேல் இறந்துள்ள நிலையில், தற்போது இன்னும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது இந்த கொடூர வைரஸ். இது ஒரு புறம் கவலையளிக்கும் விதமாகவே இருந்தாலும், மறுபுறம் சீனாவின் வர்த்தகம் முழுக்க முடங்கியுள்ளது என்றே கூறலாம்.

ஆக இந்த நல்ல வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் இது இந்தியாவுக்கு தனது ஏற்றுமதி விரிவாக்கம் செய்ய, இது சரியான நேரம் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்தியா சீனாவின் வர்த்தக பங்காளிகளில் முக்கியமான ஒரு நாடாகும். மேலும் அந்த நாட்டோடு மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை
 

இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை

சீனாவில் தற்போது நிலவி வரும் மிக மோசமான சூழ்நிலையில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளின் அடிப்படையில் இது எவ்வாறு வெளிப்படும் என்று சொல்வது மிகவும் கடினம். எனினும் கடந்த 2003ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் வெளிப்பட்ட போது இந்தியா அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

சீனா முறையை பின்பற்றலாம்

சீனா முறையை பின்பற்றலாம்

ஆனால் சீனாவின் கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வர்த்தகத்தினை விரிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. சீனா நிறைய பொருட்களை இறக்குமதி செய்கிறது. அந்த பாகங்களை ஒருங்கிணைத்து பின் அவற்றை பொருட்களாக உருமாற்றி ஏற்றுமதி செய்கிறது. சொல்லப்போனால் மொபைல் போன் உற்பத்தியில் இந்த முறையைத் தான் இந்தியாவும் உபயோகிக்கிறது.

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

ஆக இது ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்தியாவுக்கு ஒது ஒரு நல்ல வாய்ப்பைத் தான் வழங்குகிறது என்றும் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜிடிபி பற்றி பேசியவர், பொருளாதார ஆய்வறிக்கையில் அடுத்த ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பல ஆதாரங்களை தொகுக்கப்பட்டு அதன் மூலம் இது மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஏற்றம் இருக்கும்
 

ஏற்றம் இருக்கும்

மேலும் கிராமப்புற நுகர்வு மற்றும் மூலதன செலவினங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண்கள் சரிவு குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியன், இது போன்ற நிலையற்ற தன்மை தொடர்ந்து இருக்கும். ஆனால் அதே நேரம் பொருளாதாரத்தில் பச்சை தளிர்கள் இருக்கும் என்பது மறுக்க முடியாதவை என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CEA Krishnamurthy Subramanian said coronovirus outbreak provides opportunity for india to export

Coronovirus outbreak in china provides an good opportunity for india to exports, said CEA Krishnamurthy Subramanian
Story first published: Thursday, February 13, 2020, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?