என்னை மன்னிச்சிடுங்க.. ஊழியர்களுக்காக கண்ணீர் விட்ட CEO.. ஏன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக பணி நீக்கம் என்பது மிகபெரிய அளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன.

 

இது எப்போதும் இருப்பது தான் என்றாலும்., இதன் பின்னர் இருக்கும் அந்த ஊழியர்களின் வலி என்பது மிக கொடியது எனலாம். ஆக ஒரு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

லிங்க்ட் பக்கத்தில் CEO ஒருவர் தான் பணி நீக்கம் செய்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழும் காட்சி பார்ப்போரை கலங்க வைக்கிறது. எனினும் அவர்களை பணி நீக்கம் செய்யும் முன்பே இதனை யோசித்திருக்கலாமே என்ற எதிர்மறையாக கருத்தும் எழுந்துள்ளது. மொத்தத்தில் லிங்க்ட் இன் பக்கத்தில் இது ஒரு பெரிய விவாதித்தினையே தூண்டியுள்ளது.

8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..? 8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..?

கண்ணீட் விட்ட சிஇஒ

கண்ணீட் விட்ட சிஇஒ

ஹைப்பர் சோஷியல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிராடன் வாலேக், தனது ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்தார் என்று கூறும்போது கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட 14 மணி நேரத்திற்கு 13,000 லைக்குகளும், 2200 கமண்ட்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

 பிராடன் அப்படி என்ன தான் கூறினார்?

பிராடன் அப்படி என்ன தான் கூறினார்?

அவரின் பதிவில் இதனை பதிவிடலாமா? வேண்டாமா? என்று முன்னும் பின்னுமாக சென்றேன். நான் எங்கள் ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தது. கடந்த சில வாரங்களாகவே லிங்க்ட் இன்-ல் சில பணி நீக்கங்களை பார்த்து வருகின்றேன். அவற்றில் பெரும்பாலானவை பொருளாதாரம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இருந்தது. ஆனால் நம்முடையது? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

கடினமான முடிவு
 

கடினமான முடிவு

அதே பதிவில் தொடர்ச்சியாக அது என் தவறு, நான் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முடிவினை எடுத்தேன். அந்த முடிவிலேயே நீண்டகாலமாக இருந்தேன். இப்போது எங்களது குழு நாங்கள் தான் அந்த முடிவினை எடுத்தோம் என்று கூறுவார்கள். ஆனால் நான் தான் அதனை தலைமை தாங்கி எடுத்து சென்றேன்.

நான் தான் காரணம்

நான் தான் காரணம்

அதனால் ஏற்பட்ட தோல்விகளின் காரணமாக இன்று நான் பணி நீக்கம் செய்ய வேண்டியிருந்தது. நான் செய்த கடினமான செயல்களில் இதுவும் ஒன்று. இதுபோன்று எப்போதும் செய்ய கூடாது.

நான் ஒரு வணிக உரிமையாளராக இருந்து விட்டேன். அது பணத்தை மட்டுமே இயக்கும். யாரை பற்றியும் கவலைபடாது. அதுபோன்று நான் இன்று இருந்து விட்டேன். யாரை பற்றியும் கவலைபடவில்லை.

 

 சரியான முடிவு எடுக்கவில்லை

சரியான முடிவு எடுக்கவில்லை

ஆனால் உண்மையில் நான் அப்படி இல்லை. என்னை போன்று ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் 50 அல்லது 500 அல்லது 5000 பேரை பணி நீக்கம் செய்யவில்லை. அவர்கள் 1 அல்லது 2 அல்லது 3 பேரை பணி நீக்கம் செய்துள்ளனர். சரியான முடிவினை எடுத்திருந்தால் அவர்கள் இங்கே இருந்திருப்பார்கள்.

எனது ஊழியர்கள்

எனது ஊழியர்கள்

நான் எனது ஊழியர்களை விரும்புகிறேன் என்பதை கூட இது சரியான வழி அல்ல, அது எனக்கு தெரியும், ஆனால் என் இதயத்தில் இருந்து நான் என்ன செய்கிறேன் என்பதை அவர்கள் அறிவார்கள் என நம்புகிறேன்.. நான் எப்போது சிறந்த மக்களை பணியமர்த்துகிறேன். அவர்கள் நல்ல உள்ளம் கொண்ட மக்கள், நல்ல ஆத்மாக்கள். இந்த தருணத்தில் நான் என்னை குறைவாக நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CEO in tears after layoffs in LinkedIn post

CEO in tears after layoffs in LinkedIn post/என்னை மன்னிச்சிடுங்க.. ஊழியர்களுக்காக கண்ணீர் விட்ட CEO.. ஏன்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X