சென்னை டெக் நிறுவனம் பணிநீக்கம்.. 2% ஊழியர்கள் வெளியேற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையின் பெருமைக்குரிய Freshworks நிறுவனம் சர்வதேச அளவில் டெக் துறையில் நிலவும் மந்தநிலையின் காரணமாக நிறுவன மறுசீரமைப்பு மற்றும் ஊதிய அளவுகளில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் வாயிலாகச் சுமார் 60 இந்திய ஊழியர்கள் நிறுவன பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் உருவான Freshworks நிறுவனம் சென்னையில் சிறிய அளவில் துவங்கப்பட்டு இன்று பிரம்மாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது, இதேபோல் அமெரிக்காவில் நாஸ்டாக்-ல் Freshworks நிறுவனம் பட்டியலிடப்பட்டு உள்ளது.

Freshworks கிரீஷ் மாத்ருபூதம் எடுத்த முக்கிய முடிவு..! Freshworks கிரீஷ் மாத்ருபூதம் எடுத்த முக்கிய முடிவு..!

Freshworks நிறுவனம்

Freshworks நிறுவனம்

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும், முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றத்தின் காரணமாகவும் டெக் நிறுவனங்கள் தனது செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் தற்போது Freshworks நிறுவனமும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா, அமேசான், சிஸ்கோ-வில் துவங்கி, ஸ்விக்கி, சோமேட்டோ, OYO வரையில் பல முன்னணி நிறுவனங்கள் இந்தப் பொருளாதார மந்த நிலை காலத்தில் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் அதிகம் வளர்ச்சி அடையாத, லாபம் அளிக்காத பிரிவுகளையும் நிறுவனங்கள் மூடி வருகிறது.

2% ஊழியர்கள் பணிநீக்கம்
 

2% ஊழியர்கள் பணிநீக்கம்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் கிரிஷ் மாத்ருபூதம் தலைமையிலான Freshworks நிறுவனத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

5200 ஊழியர்கள்

5200 ஊழியர்கள்


இதேபோல் நிறுவனம் முழுவதும் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உள்ளது. Freshworks நிறுவனத்தின் தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 5200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பணி மாற்றம்

பணி மாற்றம்

இதேபோல் தற்போது ப்ராடெக்ட், மார்க்கெட்டிங், சேஸ் பிரிவில் இருக்கும் சில ஊழியர்களை முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்தி வரும் சப்போர்ட் மற்றும் பிர அணிகளுக்கு மாற்றியுள்ளதாக Freshworks நிர்வாகம் விளக்கம் கொடுத்தது.

கிரிஷ் மாத்ருபூதம்

கிரிஷ் மாத்ருபூதம்

இந்த நிலையில் Freshworks நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை வேறு பணிகளில் நிரப்ப காலி பணியிடங்கள் இல்லை.

உதவிகள்

உதவிகள்

இதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ், அவுட்பிளேஸ்மென்ட் சரிவீசஸ் போன்ற அனைத்து உதவிகளையும் நிறுவனம் அளிக்கும். மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் severance pay மற்றும் இதர செட்டில் மென்ட் அனைத்தையும் வழங்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

Freshworks நிறுவனம் இயங்கி வரும் இதே SAAS பிரிவில் உள்ள சேல்ஸ்போர்ஸ் சுமார் 2000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது, Zendesk நிறுவனம் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. Freshworks நிறுவனம் 3வது காலாண்டில் 128.8 மில்லியன் டாலர் அளவிலான தொகையை வருமானமாகப் பெற்றுள்ளது.

37 சதவீத அதிக வருவாய்

37 சதவீத அதிக வருவாய்

இது கடந்த நிதியாண்டு அளவீட்டைக் காட்டிலும் சுமார் 37 சதவீத அதிக வருவாய் ஆகும். இந்தப் பொருளாதார மந்த நிலையிலும் Freshworks வட அமெரிக்காவில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai based Freshworks layoff 2 percent employees Amid Strong growth in revenue

Chennai based Freshworks layoff 2 percent of employees Amid Strong growth in revenue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X