சென்னை மக்கள் குஷி.. அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த இலக்கை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தின் வாயிலாகவே வேகமாக எட்டிவிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக வெளிநாட்டில் இருக்கும் முன்னணி உற்பத்தி மற்றும் சேவை துறை நிறுவனங்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல முக்கிய முயற்சிகளை செய்து வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தளத்தை அமைக்கவும், தொழில்துவங்கவும் சிறப்பான சூழ்நிலையை அமைத்துக்கொடுக்கவும், பல்வேறு ஒப்புதல்களை விரைவாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் உலக நாடுகளில் இருந்து அதிகப்படியான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி தளத்தை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது.

சென்னை மக்கள் குஷி.. அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு பெஸ்ட்:

தமிழ்நாட்டை பொருத்த வரையில் போக்குவரத்து, ஏற்றுமதி, திறன் வாய்ந்த ஊழியர்கள், பெரிய நிறுவனங்களுக்கு உதவிகரமாக பல லட்ச MSME நிறுவனங்கள் என தொழிற்துறைக்கு சாதகமான அனைத்து விஷயங்களும் உள்ளது மற்றொரு முக்கிய சிறப்பு. இதோடு சேர்த்து அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது அடுத்தடுத்த முதலீட்டு அறிவிப்புகள் மூலம் பலன் அளிக்கிறது.

சென்னையில் ஜப்பான் நிறுவனம்:

ஜப்பான் நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனம் சென்னையில் தனது முதல் Inflator தொழிற்சாலையை துவங்கி விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று தமிழ்நாடு அரசும், டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் கையெழுத்திட உள்ளது என டிவிட்டரில் சென்னை அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் ஜப்பான் பயணம்:

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் திரு. கென் பாண்டோ அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூர் Hi-P International:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் உட்பட சில நாடுகளுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க சுற்று பயணம் மேற்கொண்டு வரும் வேளையில், சிங்கப்பூர்-ஐ சேர்ந்த எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான Hi-P International, தமிழ்நாட்டில் பதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளதாகவும் இதன் மூலம் 700க்கும் அதிகமானோருக்கு இத்தொழிற்சாலையில் வேலைவாப்பு கிடைக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு:

சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் Hi-P International நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக டிவிட்டரில் சென்னை அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது. இப்புதிய உற்பத்தி தளத்தின் கட்டுமானம் எப்போது துவங்கும், எப்போது உற்பத்தி பணிகள் இப்புதிய தொழிற்சாலையில் துவங்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

சென்னை மக்கள் குஷி.. அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்பு..!

VOLTAS சென்னை:

வோல்டாஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஏசி தயாரிப்பு தொழிற்சாலைக்கு நிலத்தை சேர்வு செய்து கட்டுமான பணிகள் திருவள்ளூர் பகுதியில் விரைவில் துவங்க உள்ளது. இந்த தொழிற்சாலை சுமார் 150 ஏக்கரில் அமைய உள்ளது, இதற்காக 500 கோடி ரூபாய் முதலீட்டு உடன் சீன நிறுவன கூட்டணியில் வோல்டாஸ் தனது உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. இத்தொழிற்சாலை மூலம் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பாக்ஸ்கான் சென்னை:

தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் சென்னைில் மாபெரும் பாக்ஸ்கான் டவுன்ஷிப் அமைக்க உள்ளது. சுமார் 31 ஏக்கரில் 20000 ஊழியர்களுக்கான தங்குமிடம், மருத்துவமனை, பார்க், ரிடைல் கடைகள் என பல சேவைகள் இங்கு வர உள்ளது. இதற்கான பணிகளும் தற்போது துவங்கியுள்ளது என சென்னை அப்டேட்ஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai big news: Japan Daicel Safety Systems, Singapore Hi-P International investing in Tamilnadu

Chennai big news: Japan Daicel Safety Systems, Singapore Hi-P International investing in Tamilnadu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X