சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை திட்டம்.. நித்தின் கட்கரி சொன்ன புதிய அப்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கு இணையாக இந்தியாவை உலகின் முன்னணி ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு விரைவில் 1 டிரில்லியன் டாலர் GDP கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் ஏற்றுமதிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான திட்டமாக விளங்கும் நிலையில் சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

 மாநில அரசுகள் தான் காரணம்.. நித்தின் கட்கரி அதிரடி..! #Petrol மாநில அரசுகள் தான் காரணம்.. நித்தின் கட்கரி அதிரடி..! #Petrol

நித்தின் கட்கரி

நித்தின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நித்தின் கட்கரி திங்கட்கிழமை தனது டிவிட்டர் கணக்கில் சென்னை - மதுரவாயல் மத்தியில் 5800 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 20.5 கிலோமீட்டர் டபுள் டெக்கர் சாலை திட்டம் டிசம்பர் 2024-க்குள் முடிவடையும்.

சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை

சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை

இதேபோல் இந்த 20.5 கிலோமீட்டர் சென்னை - மதுரவாயல் டபுள் டெக்கர் சாலை திட்டம் மூலம் சென்னை துறைமுகத்தில் சரக்கு நிர்வாகச் செய்யும் அளவு 48 சதவீதம் வரையில் அதிகரிக்கும். இது மட்டும் அல்லாமல் துறைமுகத்தில் சரக்குக் காத்திருப்பு நேரம் 6 சதவீதம் வரையில் குறையும் என்றும் நித்தின் கட்கரி கூறியுள்ளார்.

4 பகுதிகள்

4 பகுதிகள்

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் அமைய உள்ள இந்த டபுள் டெக்கர் சாலை திட்டம் 4 பகுதிகளாக முடிக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் மத்திய அரசு புதிதாக உருவாக்கிய Gati Shakti திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளது. இதனால் எவ்விதமான தாமதமுமின்றி இயங்கும்.

வழக்கு

வழக்கு

இத்திட்டத்திற்கான கட்டுமான டென்டர்கள் ஜூன் 2022 ல் அழைக்கப்பட்டது, 2012 துவங்கப்பட்ட இத்திட்டம் நீர்வளத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் வழக்குகள் காரணமாக நிறுத்தப்பட்டது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

இந்நிலையில் 2019ல் இத்திட்டத்தைத் துவக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்தின் ஒரு சாலை திட்டத்தை டபுள் டெக்கர் சாலை திட்டமாக மாற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நித்தின் கட்கரி கூறினார். இதைத் தொடர்ந்து 2022ல் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா-வை நடத்தினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai Port - Maduravoyal corridor Rs 5800-crore project completed by 2024: Nitin Gadkari

Chennai Port - Maduravoyal corridor Rs 5800-crore project completed by 2024: Nitin Gadkari
Story first published: Monday, October 3, 2022, 23:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X