டாடா-வை மிரட்ட வரும் சீனா BYD.. தீபாவளிக்கு புதிய அறிமுகம்.. சென்னை-தான் பேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா ஆட்டோமொபைல் சந்தைக்குள் நுழைய பல சீன நிறுவனங்கள் போட்டிப்போடு தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில், 2007ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குள் நுழைந்த BYD, 2016 சத்திமில்லாமல் ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் BYD இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் கார் வர்த்தகத் துறையில் புதிய புரட்சியை உருவாக்க வருகிறது. சீனாவில் டெஸ்லா-வை ஓரம்கட்டி நிறுவனம் தான் இந்த BYD, அப்போ டாடா மோட்டார்ஸ் நிலைமை என்ன..?

இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையைப் புரட்டிப்போட வரும் சீனாவின் BYD நிறுவனத்திற்கு அடித்தளமே சென்னை தான்.

எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்! எப்பவுமே இந்த பங்குகளுக்கு மவுசு தான்.. வாங்க ரெடியா இருங்க.. 3 பங்குகளை பட்டியலிடும் நிபுணர்கள்!

BYD நிறுவனம்

BYD நிறுவனம்

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான BYD, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்-ஐ அறிமுகம் செய்து இந்தியாவின் பிரதான EV சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.

 டெஸ்லா

டெஸ்லா

இந்த ஆண்டு எலக்ட்ரிக் வாகன விற்பனையில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா-வை சீனாவின் BYD முந்தியது மூலம் உலகளவில் பிரபலமானது. இதேபோல் BYD பல தடைகளைத் தாண்டி தனது உற்பத்தி பெரிய அளவில் உயர்த்தினாலும் விலையைச் சக போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் குறைவாகவே வைத்திருக்கும் காரணத்தால் அதிகளவிலான கார்களை விற்பனை செய்துள்ளது.

வாரன் பபெட்

வாரன் பபெட்

வாரன் பபெட் முதலீட்டில் இயங்கி வரும் சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் BYD, சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் வாகனங்களை அசெம்பிள் செய்யும் தொழிற்சாலைகளை வைத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து தான் இந்தியா வர்த்தகச் சந்தையில் இறங்க முடிவு செய்துள்ளது.

BYD நிறுவனம்

BYD நிறுவனம்

சீனாவின் BYD நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10000க்கும் அதிகமான கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. இந்தக் கார்களுக்கான உதிரிபாகங்கள் பெரும் பகுதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுச் சென்னை தொழிற்சாலையில் அசம்பிளி செய்யப்பட உள்ளது.

புதிய Atto3 SUV கார்

புதிய Atto3 SUV கார்

BYD நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் E6 MPV காரை அறிமுகம் செய்த நிலையில் புதிதாக Atto3 SUV காரை அறிமுகம் செய்து இந்தியாவின் பிரதான ஆட்டோமொபைல் சந்தைக்குள் நுழைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஹேட்ச்பேக், செடான் கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.

BYD பேட்டரி தொழில்நுட்பம்

BYD பேட்டரி தொழில்நுட்பம்

BYD நிறுவனத்தின் பிரபலமான Blade battery technology மூலம் இந்நிறுவன எலக்ட்ரிக் கார்கள் 450 முதல் 500 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட கார்களாக இருப்பதால் இந்திய சந்தையில் இது முக்கிய USP ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

E6 MPV கார்கள்

E6 MPV கார்கள்

கடந்த வரும் BYD நிறுவனம் அறிமுகம் செய்த E6 MPV கார்களைக் கார்பரேட் மற்றும் அதிகக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்தது. இந்தச் சிறிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களிடம் மட்டும் சுமார் 450 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் சுமார் 1000 கார்களை விற்பனை செய்யும் என BYD கணித்துள்ளது.

ஒரகடம்

ஒரகடம்

2007 ஆம் ஆண்டில், ஒரகடத்தில் மின்னணு பாகங்கள், பேட்டரிகள் மற்றும் மொபைல் போன்கள் தயாரிப்பதற்காக BYD இந்திய சந்தையில் நுழைந்தது. 2016 ஆம் ஆண்டு BYD நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அசெம்பிளி ஆலையில் இருந்து Olectra நிறுவனத்திற்குப் பேட்டரிகள் மற்றும் பஸ் சேஸ்களை வழங்குகிறது.

10000 எலக்ட்ரிக் வாகனங்கள்

10000 எலக்ட்ரிக் வாகனங்கள்

இதே ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தான் BYD அதன் பயணிகள் வாகனங்களை அசெம்பிள் செய்யும். இந்த ஆண்டு இறுதிக்குள், நிறுவனம் 100 பேரை வேலைக்கு அமர்த்தித் தயாரிப்புத் திறனை 10000 எலக்ட்ரிக் வாகனங்களாக அதிகரிக்க உள்ளது.

டீலர்ஷிப்

டீலர்ஷிப்

தற்போது BYD நிறுவனம் 12 நகரங்களில் 12 டீலர்ஷிப்கள் கொண்டு உள்ளன, அவை அடுத்த 6 மாதங்களுக்குள் 24 விற்பனை நிலையங்களுடன் 18 நகரங்களுக்கு விரிவடை திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதன் EV வாகனங்களின் விற்பனை பொறுத்து, BYD அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China BYD New EV atto3 SUV car launching on Diwali from Chennai factory

China BYD New EV atto3 SUV car launching on Diwali from Chennai factory டாடா-வை மிரட்ட வரும் சீனா BYD.. தீபாவளிக்கு புதிய அறிமுகம்.. சென்னை-தான் பேஸ்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X