தைவான் மீது வர்த்தக தடை.. சீனாவின் ஆட்டம் ஆரம்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா- தைவான் மத்தியில் நீண்ட காலமாகவே பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், தற்போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான்-க்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டிற்கு வருவது சீனாவிற்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதை எதிர்க்கும் வகையில் 21 சீனா ராணுவ விமானங்கள் தைவான் வான்வழி எல்லைக்குள் புகுந்தது. இது இரு நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது, நான்சி பெலோசி தைவான் வருகையை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஜீ ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தைவான் மீது வர்த்தகத் தடை விதிக்கத் துவங்கியுள்ளது.

ரஷ்யா - சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..! ரஷ்யா - சீனா இனி அசைக்க முடியாது.. சைபீரியா டூ ஷாங்காய்.. விளாடிமிர் புதின் செம ஹேப்பி..!

சீனா அரசின் தடை

சீனா அரசின் தடை

சீனா அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தைவான் நாட்டின் மீது வர்த்தகத் தடை விதிக்கத் துவங்கியுள்ளது. இதில், முதல் தடையாகத் தைவான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மணல்-ஐ முதல் கட்டமாகத் தடை செய்யச் சீனா-வின் காமர்ஸ் அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

 தைவான்

தைவான்

இதேபோல் செவ்வாய்க்கிழமை சீனா திடீரென எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் தைவான் உணவு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் தைவான் நாட்டில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீ, உலர் பழங்கள், தேன், கோகோ பீன்ஸ், காய்கறிகள், 700 கண்டைனர்கள் மீன் ஆகியவை தடை பெற்று உள்ளது.

 தைவான் உணவு நிறுவனங்கள்
 

தைவான் உணவு நிறுவனங்கள்

இதேபோல் செவ்வாய்க்கிழமை சீனா திடீரென எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் தைவான் உணவு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் தைவான் நாட்டில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீ, உளர் பழங்கள், தேன், கோகோ பீன்ஸ், காய்கறிகள், 700 கண்டைனர்கள் மீன் ஆகியவை தடை பெற்று உள்ளது.

 தற்காலிக இறக்குமதி தடை

தற்காலிக இறக்குமதி தடை

மேலும் சீனா சுமார் 35 தைவான் நிறுவனங்களைத் தற்காலிகமாக இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா-வை எப்படிக் கட்டம் கட்டி முடக்கியதோ, அதேபோல் தற்போது சீனா தைவான் நாட்டை முடக்குகிறது.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

சீன அரசின் எதிர்ப்பு, அதிபர் ஜி ஜின்பிங் கண்டனத்தையும் தாண்டி செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான்-க்கு வந்துள்ளார். பெலோசியின் வருகை ஒரு சீனா கொள்கை மற்றும் மூன்று சீனா-அமெரிக்கக் கூட்டு அறிக்கைகளின் விதிகளைக் கடுமையாக மீறுவதாகச் சீன அரசு குற்றம்சாட்டுகிறது.

நான்சி பெலோசி

நான்சி பெலோசி

பெலோசி செவ்வாயன்று தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கிய பின்பு அவர் தைவான் நாட்டின் ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இந்தப் பயணம் தீவு நாடான தைவான் - அமெரிக்காவின் நீண்டகாலக் கொள்கைக்கு எந்த வகையிலும் முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி கூறினார்.

 சீனா - தைவான்

சீனா - தைவான்


1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாகப் பிரிந்தது. இதன் மூலம் தைவான் நாடு சுயாதீனமாகச் செயல்பட்டு வந்தாலும், சீனா தொடர்ந்து தனது சொந்த நாடாக உரிமைகோரி வருகிறது. இதற்குத் தைவான் தாங்கள் சுதந்திரமான நாடு என்ற கூறி வரும் வேளையில் அமெரிக்கா தைவான்-க்கு ஆதரவாக உள்ளது.

ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..! ரஷ்யா-வின் சாயம் வெளுக்க துவங்கியது.. அடிமடியில் பலத்த அடி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Govt begins trade sanctions against Taiwan Amid nancy pelosi visit

China Govt begins trade sanctions against Taiwan Amid nancy pelosi visit தைவான் மீது வர்த்தகத் தடை.. சீனாவின் ஆட்டம் ஆரம்பம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X