2019ல் அமெரிக்கா சீனா இடையில் ஏற்பட்ட வர்த்தகப் போரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், சீனாவுக்கும் சீன நிறுவனங்களுக்கும் பல நாடுகளில் வர்த்தகத் தடை, பாதுகாப்புத் தன்மை குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சீனா இதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பதில் அளித்து வருகிறது.
இதன் வாயிலாகக் கொரோனா பரவியதிற்குச் சீனா தான் காரணம் எனவும், அதைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கூறிய பல நாடுகள் ஆஸ்திரேலியாவும் ஒன்று.
ஆஸ்திரேலியாவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சீனா, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் வைன்-க்கு anti-dumping வரியாகச் சுமார் 212 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது வருகிற சனிக்கிழமை முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

வர்த்தக அமைச்சகம்
இதுகுறித்து சீனாவின் வர்த்தகம் அமைச்சகம் கூறுகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து விலை குறைவான வைன் இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் சீனாவின் வைன் உற்பத்தியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனாலேயே வரியை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

40% வைன்
தற்போது சீனா ஆஸ்திரேலிய வைன் மீது விதித்துள்ள 212% வரி மூலம் சீனாவில் தனக்கான வர்த்தகச் சந்தை முழுமையாகப் பாதிக்கும். இதனால் சீனாவில் ஆஸ்திரேலியா தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டும் என ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் சைமன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் மொத்த வைன்-ல் 40% சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சீனா - ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்குச் சீனா மிக முக்கியமான ஏற்றுமதி நாடாகும். ஆனால் டிசம்பர் மாத துவக்கத்தில் கொரோனா பரவியதிற்குச் சீனா தான் காரணம் எனவும், அதைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவும் இதற்கு ஒப்புதல் அளித்தது.

பல முக்கியப் பொருட்கள்
ஆஸ்திரேலியாவின் இந்தச் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பீப், பார்லி, கடல் உணவுகள், சர்க்கரை, டிம்பர் ஆகியவை ஆகியவற்றின் மீது தடை அல்லது வரி விதிப்பு விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய்
இதோடு ஆஸ்திரேலியாவின் அடுத்தகட்ட நெர்வொர் கட்டமைப்புப் பணியில் பங்கு பெறச் சீன நிறுவனமான ஹூவாய்-க்குச் சீனா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படிக் கடந்த 6 மாத காலகட்டத்தில் சீனா - ஆஸ்திரேலியா இடையே பல வர்த்தகப் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது.