44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடிவாங்கிய சீனாவின் பொருளாதாரம்.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: சீனாவின் பொருளாதாரம் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பலவீனமான நிலையில் அதன் பொருளாதாரம் இருந்தாலும், உலகின் ஒரே பாசிட்டிவ் வளர்ச்சி கொண்ட பெரிய பொருளாதார நாடு சீனாவாகத்தான் இருக்கும் என்பது உலக நாடுகளின் கணிப்பாகும். இது அந்நாட்டிற்கு நல்ல செய்தியாகும். ஏனெனில் உலகில் பெரிய நாடுகள் எதுவுமே பிளஸ் வளர்ச்சியை அடையவில்லை. மைனஸில் போய் கிடக்கின்றன.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் சரிவை சந்தித்த சீனாவின் உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக சீரடைந்து வருவதால், 2021 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராய்ட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம், 2020 ஆம் ஆண்டில் 2.1% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ்க்காக ஆய்வு செய்த 37 ஆய்வாளர்களின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பொருளாதாரம்

சீனா பொருளாதாரம்

சீனாவின் பெரும் தலைவரான மாவோ சேதுங்கின் கலாச்சாரப் புரட்சியின் இறுதி ஆண்டான 1976 ஆம் ஆண்டில் இப்படி ஒரு மெதுவான வளர்ச்சி இருந்த நிலையில் கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்கு பின் பொருளாதாரம் அதேபோன்ற சரிவை 2020ல் சந்தித்துள்ளது. எனினும் இந்த 44 ஆண்டுகளில் சீனா தான் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் உள்ள நாடாக வளர்ந்துள்ளது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துரிதமாக வளர தொடங்கியுள்ளது. நுகர்வோர் மெதுவாக கொரோனா அச்சங்களில் இருந்து மீண்டு வேண்டியவற்றை வாங்க தொடங்கியுள்ளனர். வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதுதான் மாற்றத்திற்கு காரணம். எனினும் எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு அதன் சந்தைகளை பாதித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவுடன் தொடர்ந்து நிலவும் பதட்டங்களும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அசைத்து பார்த்துள்ளது.

நான்காவது காலாண்டு
 

நான்காவது காலாண்டு

நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 5.8% உயரும், ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இது 4.9% ஆக உயரும் என்று கருத்துக் கணிப்பு கணித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் வளர்ச்சி 8.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் உலகம் பொருளாதாரம் சுகாதார நெருக்கடியிலிருந்து மீளத் தயாராக உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பெரிய மாற்றம் வரும்

பெரிய மாற்றம் வரும்

கவேகல் டிராகனாமிக்ஸ் ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில், "வலுவான ஏற்றுமதிகள் மற்றும் அதிகரிக்கும் உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை மேம்படுத்துவதால், நான்காவது காலாண்டில் ஏற்பட போகும் வளர்ச்சி ஒரு சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சிறந்த காலாண்டுகளில் ஒன்றாக இருக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் "வளர்ச்சி வேகம் 2021 ம் ஆண்டின் முதல் பாதியில் உச்சமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர். சீனா அதன் முதல் காலாண்டில் 6.8% அளவுக்கு சரிந்த நிலையில் தற்போது பொருளாதாரம் சீராக மீண்டு வருகிறது.

வரி நிவாரணம்

வரி நிவாரணம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்த ஆண்டு கடன்களை தற்காலிகமாக அதிகரித்து வழங்க சீனா அனுமதித்துள்ளது., பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் அதே நேரம் ஆபத்துக்களைத் தடுப்பதில் கவனம் செலுத்த தொடங்கியது சீனா. இதை சீனாவின் மத்திய வங்கித் தலைவர் யி கேங் கடந்த வாரம் உறுதிபடுத்தினார். அதிக நிதிச் செலவுகளை குறைத்தல், வரி நிவாரணம் மற்றும் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கும் வேலைவாய்ப்பை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள், வங்கிகளின் இருப்புத் தேவைகள் போன்ற நடவடிக்கைகளை சீன அரசாங்கம் எடுத்துள்ளது. இதன் மூலம் சீனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க முடியும் என்று வலுவாக நம்புகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's economic growth seen hitting 44-year low in 2020, bounce 8.4% in 2021: Poll

China's economy is now expected to expand by 2.1% in 2020, according to the median of 37 analysts surveyed by Reuters, down slightly from the 2.2% growth projected in the last poll in July.
Story first published: Tuesday, October 27, 2020, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X