சீனாவின் மீதான அமெரிக்காவின் அழுத்தம்.. பிராண்டை காப்பாற்ற ஹூவாயின் ஹானர் பிராண்ட் விற்பனை.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட விநியோக சங்கிலி தடையால், தங்களது பிராண்டை உயிர்ப்புடன் வைத்திருப்பது மிக அவசியம் என சீனாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனாவின் மீது அடுத்தடுத்த கட்டண விகிதங்களை உயர்த்தியதோடு, சீனாவின் ஹீவாய் நிறுவனத்தின் மீதும் தடை விதித்தார்.

மேலும் அமெரிக்கா தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்களிடம், ஹூவாயின் எந்த பொருளையும் வாங்க கூடாது என அமெரிக்கா கூறியது.

அமெரிக்காவால் பாதிப்பு

அமெரிக்காவால் பாதிப்பு

இதனால் சீனாவின் முன்னணி உலகளாவிய பிராண்டான ஹுவாயினை, மற்ற உலக நாடுகளுமே பயன்படுத்த சற்று யோசிக்கின்றன. மேலும் டரம்ப் அப்போது அமெரிக்காவினை மட்டும் அல்ல, மற்ற சில நாடுகளையும் இந்த பொருளை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க வலியுறுத்தியது கவனிக்கதக்கது. இதனால் ஹூவாயின் விநியோக சங்கிலி பெரிதும் பாதிக்கப்பட்டது.

 ஹூவாய் பாதிப்பு

ஹூவாய் பாதிப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைசிறந்த மொபைல் போன் விற்பனையாளராக மாறியது ஹூவாய். இதனால் உலகளாவிய விநியோக சங்கிலியிலிருந்து நிறுவனத்தினை துண்டிக்க அமெரிக்கா முயன்று வருவதாகவும் ஹூவாய் குற்றம் சாட்டியது. எனினும் அமெரிக்காவின் இந்த அதிரடி செயலால், ஹூவாயின் வணிகம் பல மாதங்களாகவே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவை உளவு பார்க்கிறதா?

அமெரிக்காவை உளவு பார்க்கிறதா?

உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க்கிங் சாதனங்களை வழங்கும் நிறுவனமான ஹூவாய், அமெரிக்காவின் எதிரான பிரச்சாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ஹூவாய் நிறுவனம் சீன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறினார். அதோடு ஹூவாயின் உபகரணங்கள் அமெரிக்காவை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஹூவாய்க்கு எதிரான நடவடிக்கை

ஹூவாய்க்கு எதிரான நடவடிக்கை

ஆனால் மறுதரப்பில் சீனா அரசாங்கமும், ஹூவாய் நிறுவனமும் இந்த குற்ற சாட்டை மறுத்தது. எனினும் அமெரிக்கா இதற்கான எந்தவொரு குற்றசாட்டுக்கும் ஆதாரத்தினை வழங்கவில்லை. எனினும் அமெரிக்க சந்தையில் இருந்து ஹூவாய் நிறுவனத்தினை தடை செய்யவும், அமெரிக்கா நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வதை தடுக்கவும் அமெரிக்கா அரசு நடவடிக்கை எடுத்தது.

ஹூவாயின் அதிரடி நடவடிக்கை

ஹூவாயின் அதிரடி நடவடிக்கை

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால், ஆரம்பத்தில் நிலைகுலைந்து போனது ஹூவாய் நிறுவனம். ஆனால் பிறகு இதுவே ஹூவாயின் உலகளாவிய விநியோக சங்கிலியை மேம்படுத்த வழிவகுத்தது. அமெரிக்காவின் இடத்தினை நிரப்ப, ஹூவாய் உலகளாவிய நாடுகளில் தனது வர்த்தகத்தினை விரிவுபடுத்த ஆரம்பித்தது. எனினும் அமெரிக்காவினை தொடர்ந்து, இன்னும் சில நாடுகளும் ஹூவாய்க்கு எதிராக நடவடிக்கையினை எடுத்தன.

ஹானர் மிகப்பெரிய போட்டியாளர்

ஹானர் மிகப்பெரிய போட்டியாளர்

ஆனால் மறுதரப்பில் வெற்றிகரமான வணிக போட்டியாளரை வீழ்த்துவதற்கான அமெரிக்காவின் விருப்பதால், இந்த தாக்குதல்கள் மேலும் தூண்டப்படுகின்றன என்றும் ஹூவாய் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் ஹூவாய் நிறுவனத்தின் முன்னணி பிராண்டான ஹானர், உலகளாவிய பிராண்டுகளான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாளர் என்றே கூறலாம்.

ஸ்மார்ட்போன் விற்பனையாளர்

ஸ்மார்ட்போன் விற்பனையாளர்

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளரான சாம்சங்கினை ஹூவாய் முந்தியது. எனினும் மூன்றாவது காலாண்டில், ஆப்பிளை தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது. ஹூவாயின் ஹானர் மொபைல் அதிக பட்ஜெட் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டது.

ஹானர் முக்கிய பங்கு

ஹானர் முக்கிய பங்கு

ஹூவாய் நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஹூவாய் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், ஹானர் மொபைல் வருடத்திற்கு 70 மில்லியன் போன்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மூன்றாம் காலாண்டில் மொத்தம் ஹூவாய் 51.9 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்துள்ளதாக தொழிற்துறை கண்கானிப்பாளர் ஐடிசி தெரிவித்துள்ளது.

மெதுவான வளர்ச்சி

மெதுவான வளர்ச்சி

சமீபத்திய வாரங்களில், ஹூவாய் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்களில் வழக்கத்திற்கு மாறாக, மெதுவான வருவாய் வளர்ச்சியினை பதிவு செய்கின்றது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பொருட்களை தடை செய்த பட்டியலில் சுவீடன் இணைந்தது. ஆனால் இதில் சற்றே ஆறுதல் கொடுக்கும் விஷயம் என்னவெனில், ஸ்வீடிஸ் நீதிமன்றம் மறு ஆய்வு செய்யக் கோரியுள்ளது தான்.

ஹானர் நிறுவனம் விற்பனை

ஹானர் நிறுவனம் விற்பனை

இப்படி ஒரு மோசமான நிலையில் தான், ஹூவாய் தனது முன்னணி பிராண்டான பட்ஜெட் போன் நிறுவனமான ஹானரை, உள்நாட்டு கூட்டமைப்பிற்கு விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

உண்மையில் ஹூவாய்க்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவையே இது சுட்டிக் காட்டுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s huawei sells off Honor mobile brand as US pressure bites

China updates.. China’s huawei sells off Honor mobile brand as US pressure bites
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X