உணவு, எரிபொருள் தான் ஆயுதமா.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. ஜி ஜின்பிங் எச்சரிக்கையால் குழப்பம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி 20 உச்சி மாநாடு நடந்து வருகின்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை போலவே சீனாவின் ஜி ஜின்பிங் கூறியது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாலமன் தீவில் சீனாவின் விளையாட்டு ஆரம்பம்.. எவ்வளவு கடன் கொடுக்க போகுது.. எதற்காக! சாலமன் தீவில் சீனாவின் விளையாட்டு ஆரம்பம்.. எவ்வளவு கடன் கொடுக்க போகுது.. எதற்காக!

உணவு, எரிபொருட்கள் ஆயுதமா?

உணவு, எரிபொருட்கள் ஆயுதமா?

போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே இந்தியாவும் சீனாவும் நடு நிலை வகித்து வருகின்றன. எனினும் மேற்கத்திய நாடுகள் சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குரல்கள் எழுந்தன. ஆனால். ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், உணவு மற்றும் எரிபொருட்கள் தான் ஆயுதமா? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

எதிர்க்க வேண்டும்

எதிர்க்க வேண்டும்

அது மட்டும் அல்ல உணவு மற்றும் எரிசக்தி பிரச்சனைகளை அரசியலாக்குதல், ஆயுதமாக்குதலை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இது பலநாட்டு தலைவர்கள் மத்தியில் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதே சமயம் மேற்கத்திய நாடுகளின் தடைக்கும் தனது எதிர்ப்பினை ஜி ஜின்பிங் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து?
 

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து?

இதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைனில் அமைதி திரும்ப பேச்சுவார்த்தை அவசியம். போர் நிறுத்தம் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியினை அமைக்க வேண்டும். இதனை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகின்றேன். இரண்டாம் உலகப்போர் பெரும் அழிவை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் உலக தலைவர்கள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது நமக்கான நேரம். அமைதியை கொண்டு வர நாம் தான் வழியினை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உலக வளர்ச்சிக்கு இந்தியா தேவை

உலக வளர்ச்சிக்கு இந்தியா தேவை

இந்தியா இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில், தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வரும் நிலையில், அது குறித்தான அதிருப்தியும் உலக நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுசூழல் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு என்பது உலக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

தடைகளை ஊக்குவிக்க கூடாது

தடைகளை ஊக்குவிக்க கூடாது

இந்தியா தற்போது வளரும் நாடுகளில் முன்னணியில் உள்ளது. இது வேகமாக வளர்ந்து வருகின்றது. ஆக இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதை தடுக்கும் எவ்வித நடவடிக்கையினையும், தடைகளையும் ஊக்குவிக்க கூடாது. ஆக பிரிவினையை ஒதுக்கி இந்த சமயத்தில் அமைதி, நல்லிணக்கம். பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஒண்றினைந்து செய்வதே இந்த தருணத்தின் தேவை என கூறியுள்ளார்.

உலக நாடுகள் ஆச்சரியம்

உலக நாடுகள் ஆச்சரியம்

உலக நாடுகள் பலவும் இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறி வந்த நிலையில், நரேந்திர மோடி, ஜி ஜின்பிங்கின் பேச்சானது உலக நாடுகளின் குற்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக உள்ளது எனலாம். குறிப்பாக பிரதமர் மோடியின் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு என்பது உலக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

இது எச்சரிக்கையா?

இது எச்சரிக்கையா?

இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதை தடுக்கும் எவ்வித நடவடிக்கையினையும், தடைகளையும் ஊக்குவிக்க கூடாது என்று கூறியிருப்பது, எந்த பிரச்சனை வந்தாலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Xi Jinping warns against using food, fuel as weapons: What did PM Modi say?

Chinese President Xi Jinping at G20 Summit, Are Food and Fuel Weapons? Xi Jinping also said that we must firmly oppose the politicization and weaponization of food and energy issues
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X