ரத்தக் களரியில் சீனா.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்தனை நாளாக உலக பொருளாதாரத்தை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் மந்தமாக்கிக் கொண்டு இருந்தது என்றால், இப்போது கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை பந்தாடிக் கொண்டு இருக்கிறது.

 

கொரோனா வைரஸ் என்கிற பெயரைக் கேட்டாலே ஆப்ரிக்கா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை எல்லா நாடுகளுக்கும் பதற்றமும் பயமும் தானே வந்து விடுகிறது.

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று சீனா மட்டும் இல்லாமல், உலக பொருளாதாரத்தின் பல இடங்களிலும் அடி பலமாக விழுந்து கொண்டு இருக்கிறது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹெச்யுஎல்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..!இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹெச்யுஎல்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..!

முதல் அடி

முதல் அடி

உலக பொருளாதாரத்தின் முக்கிய காரணிகளில் ஒன்று கச்சா எண்ணெய். அந்த கச்சா எண்ணெய் விலை தட தடவென சரிந்து கொண்டு இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 65 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது வெறும் 57 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஏன்..?

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான சீனா தன் விமானங்களை ரத்து செய்வது தொடங்கி சாலையில் பயணிக்க வேண்டாம் எனச் சொல்வது வரை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டு இருக்கிறது. இதனால் சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீனாவுக்கு எண்ணெய் தேவை குறைந்ததால், கச்சா எண்ணெய் வாங்க ஆள் இல்லாமல், கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டு இருக்கிறது.

இரண்டாவது அடி
 

இரண்டாவது அடி

கச்சா எண்ணெய்யைத் தொடர்ந்து அடுத்த அடி என்றால், அது சீன நாட்டுக்குள்ளேயே விழுந்த அடி தான். ஷாங்காய் காம்போசைட் தான் சீன பங்குச் சந்தையின் பெயர். கொரோனா வைரஸால், உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிற நெகட்டிவ் செண்டிமெண்ட் ஏற்கனவே சீனா பங்குச் சந்தை முழுக்க பலமாக பரவி இருந்தது.

பலத்த சரிவு

பலத்த சரிவு

இன்று காலை, ஷாங்காய் காம்போஸைட் வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே, அந்த கொரோனா வைரஸ் பயம் மற்றும் நெகட்டிவ் செண்டிமெண்டால், ஷாங்காய் சந்தை சரமாரியாக சரியத் தொடங்கி விட்டது. எவ்வளவு சரிந்து இருக்கிறது என்றால், இன்று ஒரே நாளில் 7.7 % சரிந்து இருக்கிறது. நேற்று மாலை 2,976 புள்ளிகளில் நிறைவடைந்த ஷாங்காய் காம்போசைட், இன்று மாலை 2,746 புள்ளிகளுக்கு நிறைவடைந்து இருக்கிறது.

பதற்றத்தில் முதலீட்டாளர்கள்

பதற்றத்தில் முதலீட்டாளர்கள்

சீனாவின் நிதி சந்தைகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள், இந்த கொரோனா வைரஸ் பதற்றத்தால், தங்கள் முதலீடுகளை வந்த விலைக்கு விற்றுத் தள்ளி இருக்கிறார்களாம். இதை ஆங்கிலத்தில் Sell Off என்பார்கள். இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பதற்றம் நிலவப் போகிறதோ தெரியவில்லை.

மூன்றாவது அடி

மூன்றாவது அடி

சீனாவில் விழுந்த அடி, அப்படியே ஆசிய கண்டம் முழுக்க பரவி இருக்கிறது.
1. சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி -2.33 %
2. ஜப்பானின் நிக்கி -1.01 %
3. சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -1.19 %
4. ஹாங்காங்கின் ஹேங் செங் 0.17 %
5. தைவானின் தைவான் வெயிடெட் -1.22 %
6. தென் கொரியாவின் கோஸ்பி -0.01 %
7. தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் -1.19 %
8. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -0.94 %
என எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே ரத்தக் களரி தான்.

இந்திய சந்தைகள்

இந்திய சந்தைகள்

கடந்த பிப்ரவரி 01, 2020 அன்று, பட்ஜெட் தாக்கல் செய்த போது ஒரே நாளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் இறக்கம் கண்டதை மறந்திருக்க மாட்டோம். அந்த 1,000 புள்ளிகள் இறக்கம், வெறுமனே பட்ஜெட்டுக்காக மட்டுமல்ல. அதை கொரோனா வைரஸுக்காகவும் என எடுத்துக் கொள்ளலாமா என்றும் தோன்றுகிறது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

கடந்த அக்டோபர் 30, 2019-க்குப் பிறகு ஒரு நாள் கூட 40,000 என்கிற சப்போர்ட்டை உடைத்துக் கொண்டு கீழே போகாத சென்செக்ஸ், பட்ஜெட் அன்று மட்டும் தன் 40,000 என்கிற வலுவான சப்போர்ட்டை இழக்கும் அளவுக்கு இந்த பட்ஜெட் அத்தனை மோசம் இல்லை.

கொரோனா வைரஸ் வீரியம்

கொரோனா வைரஸ் வீரியம்

அதுவும் 1,000 புள்ளிகள் இறக்கம் கண்டு 40,000 உடை படும் அளவுக்கு பட்ஜெட் நிச்சயம் மோசமாக இல்லை. இருப்பினும் சென்செக்ஸ் சரிந்து இருக்கிறது என்றால் இந்த கொரோனா வைரஸ் எவ்வளவு சீரியஸாக உலக பொருளாதாரத்தை பாதித்துக் கொண்டு இருக்கிறது என தெளிவாகப் புரியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

china shanghai composite market bleed 7.7 percent today

The chinese stock market shanghai composite bleed today around 7.7 percent due to corona virus negative sentiment in the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X