சீனா - தைவான் பிரச்சனை.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான்-க்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டிற்கு வருவது சீனாவிற்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்க்கும் வகையில் 21 சீனா ராணுவ விமானங்கள் தைவான் வான்வழி எல்லைக்குள் புகுந்தது.

இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றமான சூழ்நிலை நிலவினாலும் நான்சி பெலோசி எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தைவான் நாட்டிற்கு வந்து அமெரிக்கா தைவான் நாட்டிற்குத் துணையாக இருப்பதைத் தெரிவித்தார்.

இந்நிலையில் இரு முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தடாலடியாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தைவான் மீது வர்த்தக தடை.. சீனாவின் ஆட்டம் ஆரம்பம்..! தைவான் மீது வர்த்தக தடை.. சீனாவின் ஆட்டம் ஆரம்பம்..!

மோட்டோரோலா

மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய Razr 2022 மற்றும் Edge X30 Ultra இன் வெளியீட்டை அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியீடு நிகழ்ச்சியைச் சில மணிநேரத்திற்கு முன்பு ரத்து செய்தது. நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டதற்கான காரணத்தை மோட்டோரோலா தெரிவிக்காதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒன்பிளஸ்

ஒன்பிளஸ்

மோட்டோரோலா அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, ஒன்பிளஸ் நிறுவனமும் சீனாவில் OnePlus 10T ஐ வெளியிடப்போவதில்லை என்று கூறியது. ஒன்பிளஸ் நிறுவனம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தனது முக்கிய ஸ்மார்ட்போனான OnePlus 10T ஐ OnePlus Ace Pro ஆக அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது.

சீனா - தைவான்

சீனா - தைவான்

சீனா - தைவான் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மோட்டோரோலா மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் சீனாவில் நிலவும் பதற்றம் காரணமாக, வெளியீட்டு நிகழ்வுகளை ரத்து செய்திருக்கும் எனக் கருத்து நிலவுகிறது.

சீனா நடவடிக்கை

சீனா நடவடிக்கை

தைவான் நாட்டில் நான்சி பெலோசி-ஐ வரவேற்று அனுமதித்தது காரணமாகச் சீனா, தைவான் மீது வர்த்தகத் தடை விதிக்கத் துவங்கியுள்ளது. தைவான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மணல்-ஐ முதல் கட்டமாகத் தடை செய்யச் சீனா அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சீனா திடீரென எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் தைவான் உணவு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளது.

சீனா

சீனா

தைவான் மீது சீனா ராணுவ தாக்குதல் நடத்தினால் அடுத்த ரஷ்யா உருவாவது நிச்சயம். ஏற்கனேவே சீனாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கணிசமாக குறைந்த காரணத்தால் விநியோக சந்தையில் மிகப்பெரிய பிரச்சனை உருவானது. இந்த நிலையில் வல்லரசு நாடுகள் சீனா மீது வர்த்தக தடை விதித்தால் பெரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு உருவாகும்.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..! இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China - Taiwan tension: Motorola, OnePlus cancels China Smartphone launches

China - Taiwan tension: Motorola, OnePlus cancels China Smartphone launches சீனா - தைவான் பிரச்சனை.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X