விளாடிமிர் புதினை புகழ்ந்து தள்ளும் சீனர்கள்.. ஏன் தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு 2014ல் கிரிமியா-வை கைப்பற்றிய நிலையில் சுமார் 6 வருடத்திற்குப் பின்பு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது தற்போது கடுமையான தடைகளை விதித்து, உலக மக்கள் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், சீன மக்கள் மட்டும் விளாடிமிர் புதினை புகழ்ந்து வருகின்றனர்.

 

சீனாவில் என்ன நடக்கிறது.. உலகமே விளாடிமிர் புதினை திட்டி தீர்த்து வரும் வேளையில் சீன மக்கள் மட்டும் ஏன் புகழ்ந்து வருகின்றனர்.

பல்டி அடித்த சீன நிறுவனம்.. ரஷ்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு..?!

 சீன மக்கள்

சீன மக்கள்

சீன மக்கள் சமூகவலைத்தளத்தில் "புடின் தி கிரேட்," "சோவியத் ஒன்றியத்தின் சிறந்த தலைவர்" மற்றும் "இந்த நூற்றாண்டின் சிறந்த மூலோபாயவாதி." இது மட்டும் அல்லாமல் ரஷ்யாவின் போருக்கு எதிராக ரஷ்ய மக்கள் அந்நாட்டில் போராட்டம் நடத்திய மக்களைச் சீனர்கள் அமெரிக்காவால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் எனக் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.

 மேற்கத்திய நாடுகள்

மேற்கத்திய நாடுகள்

மேலும் வியாழன் அன்று விளடிமிர் புடினின் பேச்சு சீன மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு உள்ளது. புதின் அடிப்படையில் இந்த மோதலை மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்டதாகச் சித்தரித்தார்.

 விளாடிமிர் புதின்
 

விளாடிமிர் புதின்

இது சீன மக்கள் மத்தியில் பலராலும் பாராட்டப்பட்டு உள்ளது. மேலும் @jinyujiyiliangxiaokou என்பவர் வெய்போ தளத்தில் நான் ரஷ்யனாக இருந்தால், புடின் என் நம்பிக்கையாக இருப்பார், என் ஒளியாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

 ஆதரவு

ஆதரவு

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைப் பல கோடி மக்கள் கடுமையாக எதிர்த்தாலும், சீனாவில் pro-Russia, pro-war மற்றும் pro-Putin எனப் பல கூட்டம் சமுக வலைத்தளத்தில் இருக்கிறது. சீனர்களின் மனநிலை சரியா.. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தான் இந்த உக்ரைன் போரா..? உங்க கருத்தை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

 பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

ரஷ்யாவுக்கு ஆரம்பம் முதல் சீனா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் முன்னணி சமுக வலைத்தளமான Weibo-வில் #putin10000wordsspeechfulltext என்ற ஹேஷ்டேக் கீழ் வெறும் 24 மணிநேரத்தில் 1.1 பில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும் புதினின் பேச்சை சீனர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese cheering Russia's invasion of Ukraine, Weibo trending on Pro Russia, pro-Putin post

Chinese cheering Russia's invasion of Ukraine, Weibo trending on Pro Russia pro-Putin post விளாடிமிர் புதினை புகழ்ந்து தள்ளும் சீனர்கள்.. ஏன் தெரியுமா..?!
Story first published: Monday, February 28, 2022, 17:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X