சித்ரா ராமகிருஷ்ணா விரைவில் கைது.. சிபிஐ-ஐ வறுத்தெடுத்த நீதிபதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு, என்எஸ்இ இணை இருப்பிட வழக்கில் டெல்லி நீதிமன்றம் சனிக்கிழமை முன்ஜாமீன் மறுத்துள்ளது.

 

இதன் மூலம் ஆனந்த் சுப்பிரமணியன் போலவே சித்ரா ராமகிருஷ்ணா-வும் விரைவில் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்.

NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!

 மெத்தனமாக

மெத்தனமாக

இதுமட்டும் அல்லாமல் சிபிஐ இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணை செய்வதில் மிகவும் மெத்தனமாக (lackadaisical) நடந்து கொண்டது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் சிபிஐ அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

கடந்த நான்கு ஆண்டுகளாக முக்கிய ஊழல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் நீதிபதி இன்றைய வழக்கு விசாரணையின் போது கூறினார். மேலும் FIR-ல் இருக்கும் பலர் சாதாரண மக்களைப் போல் சுதந்திரமாக இந்த 4 வருடம் இருந்துள்ளனர் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

 என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா
 

என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா

என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கை விசாரிக்கும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாகவும், விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் கூறினார்.

 செபி மீது குற்றச்சாட்டு

செபி மீது குற்றச்சாட்டு

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சந்தைக் கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)"மிகவும் அன்பாகவும் மென்மையாகவும்" நடந்து கொண்டதாகக் கூறி விமர்சனம் செய்தார் சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால்.

 NSE விக்ரம் லிமாயே

NSE விக்ரம் லிமாயே

இந்நிலையில் NSE இன் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விக்ரம் லிமாயே-வின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஜூலை 2022 இல் முடிவடைகிறது. இதன் மூலம் என்எஸ்ஈ-யின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கப் பணிகள் துவங்கியுள்ளது.

 புதிய தலைவர்

புதிய தலைவர்

இப்பதவியில் பணியாற்ற விருப்பமானவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க என்எஸ்ஐ கோரிக்கை வைத்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிவர்களிடம் IPO அனுபவம் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான அனுபவம் தேவை எனவும் என்எஸ்ஈ தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chitra Ramkrishna's bail dismissed; NSE invites applications for MD&CEO role

Chitra Ramkrishna's bail dismissed; NSE invites applications for MD&CEO role சித்ரா ராமகிருஷ்ணா விரைவில் கைது.. சிபிஐ-ஐ வறுத்தெடுத்த நீதிபதி..!
Story first published: Saturday, March 5, 2022, 20:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X