இந்தியாவுக்கு நல்ல செய்தி சொன்ன CII.. பொருளாதாரம் வளர்ச்சி காணுமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளாவிய வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.

இதுவரை நடப்பு ஆண்டில் எந்தெவொரு அறிக்கையானலும், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி காணும். சரிவடையும் என தொடர்ந்து அறிக்கைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

பல பொருளாதார நிபுணர்களும், இந்தியாவின் பொருளாதாரத்தினை மேம்படுத்த தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

பொருளாதாரம் மீளும்

பொருளாதாரம் மீளும்

இந்த நிலையில் தற்போது தான் தவிக்கின்ற வாய்க்கு தண்ணீர் கொடுப்பது போல சில அறிக்கைகள், இந்திய பொருளாதாரம் சற்று மீண்டு வந்து கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் மீண்டும் முன்னேறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சிஐஐ தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான சில அறிக்கைகள் கூட இதே போல் அடுத்த ஆண்டின் பிற்பாதியில் இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் என்றும் கூறியிருந்தது கவனிக்கதக்கது.

கடந்த ஆண்டைவிட சிறப்பாக இருக்கும்

கடந்த ஆண்டைவிட சிறப்பாக இருக்கும்

புதிய ஆண்டுக்குள் நுழைய நாங்கள் தயாராகி வருவதால் பொருளாதாரம் கடந்த ஆண்டை விட சிறந்த நிலையில் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால் மந்த நிலை நீக்கப்படும் என்றும் இந்த அமைப்பு நம்புவதாகவும், ஆக வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும் என்றும் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

நன்மைகள் இருக்கலாம்

நன்மைகள் இருக்கலாம்

இது குறித்து சிஐஐயின் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், அடுத்து வரும் மூன்றாம் காலாண்டில் ஜிடிபி விகிதமானது கடந்த காலாண்டை போலவே இருக்கக் கூடும். என்றாலும் அதன் பிறகு அடுத்து வரும் காலாண்டுகளில் மீள்ச்சி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஜிஎஸ்டி, திவால் நிலை சட்டம், ஆகியவற்றுடன் உள்ள சிக்கல் மெதுவாக தீர்க்கப்பட்டு வருவதால், தொழில் பொருளாதாரத்திற்கு கணிசமான நன்மைகளை அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

நிதித்துறைகள் வலுவடையும்

நிதித்துறைகள் வலுவடையும்

அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் மத்தியில் நிதித்துறைகள் வலுவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறுகிய காலத்தில் கொஞ்சம் வீழ்ச்சி கண்டாலும் நடுத்தர காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் உலகளாவிய வர்த்தக பதற்றங்கள், மானிட்டரி கொள்கைகளில் மாற்றம் உள்ளிட்ட பல மேம்பட்ட பரிமாற்றத்துடன் சேர்ந்து, அடுத்த நிதியாண்டில் சேர்ந்து படிப்படியாக மீட்கப்படும் என்றும் கிர்லோஸ்கர் கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும்

ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும்

அடுத்தடுத்த ஆண்டுகளில் 2 - 3 ஆண்டுகால இடைவெளியில் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை பாதையில் மாறுவதற்கு ஒரு வாய்ப்புள்ளது. இது தவிர வரி தளத்தை அதிகரிக்கவும், அதிக இணக்கத்தை உறுதிபடுத்தவும், ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கவும், எளிமைப்படுத்தவும், அதன் பாதுகாப்பை அதிகரிக்கவும் அவசியத்தையும் சேம்பர் பரிந்துரைத்தது. இதெல்லாவற்றையும் விட ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்திலும் விகிதங்களை மதிப்பாய்வு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CII report said Indian economy likely to rebound in 2020

India’s economy is expected to rebound in 2020. The government and RBI coupled with easing of global trade tensions.
Story first published: Monday, December 30, 2019, 17:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X