6,000 பேருக்கு வேலை.. 60,000 பேருக்கு டிரெய்னிங்.. சிட்டி குழுமம் கொடுக்கும் அதிரடி வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிட்டி குழுமம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் மிக வேகமாக படையெடுத்து வரும் கொரோனாவினால், இருக்கும் வேலையாவது இருக்குமா? இல்லையா என்பது தான்.

ஏனெனில் பொருளாதார ரீதியாக நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், செலவினைக் குறைக்கும் பொருட்டு பணி நீக்கம் என்னும் ஆயுதத்தினை கையில் எடுத்துள்ளன.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதற்கிடையில் தான் சிட்டி குழுமம், ஆசியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இது வேலையில்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல, அடுத்த மூன்று ஆண்டுகளில் 24 வயதிற்குட்பட்ட 60,000 இளைஞர்களுக்கு பயிற்சியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கு  பயிற்சியும் உண்டு

இளைஞர்களுக்கு பயிற்சியும் உண்டு

இந்த பயிற்சியானது ஆசிய பிராந்தியத்தில் உள்ள சில்லறை நிறுவனங்கள் மற்றும் வணிக கல்லூரிகளில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2023ம் ஆண்டளவில் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்காக, சிட்டி குழும அறக்கட்டளை 35 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையில்லை

பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலையில்லை

ஆசிய பசிபிக் பகுதியில் உலகின் மொத்த இளைஞர் பட்டாளத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இது சுமார் 700 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, அவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வேலையில்லாதவர்களாக உள்ளனர். அவர்களில் வெறும் 20% பேர் மட்டுமே வேலை செய்யும் உழைக்கும் வயதுடைய மக்களாகும். மேலும் ஆசிய பசிபிக் சமூகத்தில் பல இளைஞர்கள் குறைந்த வருமானம் உடையவர்களாக உள்ளனர் என்றும் சிட்டி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வருவாயில் முக்கிய பங்கு

வருவாயில் முக்கிய பங்கு

வட அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வருவாயில், ஆசிய பசிபிக் என்பது சிட்டி குழுமத்தின் மிகப்பெரிய பிராந்தியமாகும். 2020 வருவாய் அறிக்கையின் அடிப்படையில் உலக வருவாயில் 25% பங்களிப்பு செய்கிறது. அதெல்லாம் சரி சிட்டி குழுமம் வேலைகளை வழங்குகிறது சரி, அது என்னென்ன வேலைகள். வங்கிகள், பத்திர சேவைகள், அட்வைசரி, செக்யூரிட்டீஸ் சர்வீஸ் உள்ளிட்ட பல தளங்களில் வேலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதில் எத்தனை இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குகமோ தெரியவில்லையே.. எப்படியோ.. சிட்டு குழுமத்தின் இந்த பயிற்சியாவது கிடைத்தால் வருங்காலத்திற்கு நன்றாக இருக்கும்..பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Citi group plans to hiring 6,000 young peoples in asia

Citi group plans to hiring 6,000 young peoples in asia next 3 years
Story first published: Friday, September 18, 2020, 16:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X