சிவனேன்னு இருந்த கோகோ கோலா-வை 'காலி' செய்த ரொனால்டோ.. ரூ.29,337 கோடி நஷ்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புட்பால் உலகின் ஸ்டார் பிளேயர் ஆக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நபர். எந்த ஒரு இடத்திலும் மக்களுக்கும் தனது குடும்பத்திற்குத் தவறான உதாரணமாக இருக்கக் கூடாது என நினைப்பவர்.

Recommended Video

Cristiano Ronaldo செய்த செயலால் Coco Cola companyக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்

புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. மக்கள் தலையில் விழும் விலைவாசி உயர்வு..! புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. மக்கள் தலையில் விழும் விலைவாசி உயர்வு..!

உணவு பழக்கம், உடற்பயிற்சி எப்போதும் முக்கியம் என்பதை ஒவ்வொரு முறையும் மக்களுக்கு உணர்த்தி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூல்டிரிங்ஸ் தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா-வை பதம் பார்த்து உள்ளார்.

ஈரோ 2020 - கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஈரோ 2020 - கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஈரோ 2020 கால்பந்துப் போட்டித் தொடர் தொடர்பான ஒரு பிரஸ்மீட் லிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஜூவன்டஸ் அணி சார்பில் ஆடும் ரொனால்டோ இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதுபோன்ற கூட்டங்கள் நடப்பது பொதுவான ஒன்று தான் என்றாலும் நடந்தது வேறு

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகப் பிரஸ் மீட் டேபிளுக்கு வந்த ரொனால்டோ, தன் முன்பு இரண்டு கோகோ கோலா பாட்டில்களை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார், மனுசனுக்கு என்ன தோணுச்சோ தெரியல கோலா பாட்டில்களை அலேக்கா தூக்கி இடது கை பக்க மூலையில் தள்ளி வைத்து விட்டார்.

தண்ணீர் குடிங்க
 

தண்ணீர் குடிங்க

இதுமட்டும் இல்லாமல் ரொனால்டோ கோலாவுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மேலே தூக்கிக் காட்டி " தண்ணீர் குடிங்க" என்றும் செய்தியாளர்களிடம் கூறி விட்டுப் பிரஸ் மீட்டை ஆரம்பித்தார்.

நடந்தது என்னமோ இவ்வளவு தான், ஆனா இதன் எதிரொலி.. வேற லெவல்.

கோகோ கோலா ஸ்பான்சர்ஷிப்

கோகோ கோலா ஸ்பான்சர்ஷிப்

பொதுவாக விளையாட்டுப் போட்டிகளில் ஸ்பான்சர்ஷிப் மிகவும் முக்கியமானது, இந்த வகையில் தான் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கோகோ கோலா பாட்டில் விளம்பரத்திற்காக முன் வைக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ கோலா பாட்டிலை ஓரம்கட்டிவிட்டுத் தண்ணீர் குடிக்க மக்களிடம் சொன்னது கோகோ கோலா நிறுவனத்தைப் பதம் பார்த்துள்ளது.

கோகோ கோலா பங்குகள்

கோகோ கோலா பங்குகள்

கோகோ கோலா நிறுவன பங்குகள் நிலையான வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பவத்திற்குப் பின் தடாலடியாகச் சரிந்தது.

இதன் மூலம் 56.18 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட கோகோ கோலா பங்குகள் 55.24 டாலராகச் சரிந்தது.

29,337 கோடி ரூபாய் நஷ்டம்

29,337 கோடி ரூபாய் நஷ்டம்

வெறும் ஒரு டாலர் மட்டுமே சரிந்திருந்தாலும் இந்நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டத்தின் அளவு 4 பில்லியன் டாலர். அதாவது ஓரே நாளில் சுமார் 29,337 கோடி ரூபாய் அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளது கோகோ கோலா நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca cola lost $4 billion After Cristiano Ronaldo Moves Coca cola Bottle and 'Endorses' Water

Coca cola lost $4 billion After Cristiano Ronaldo Moves Coca cola Bottle and 'Endorses' Water
Story first published: Wednesday, June 16, 2021, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X