ஐடி கம்பெனி கொடுத்த அதிர்ச்சி! கலக்கத்தில் ஊழியர்கள்! போராடும் யூனியன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி. இது இந்தியவின் மாய உலகம். டிஸ்கோ, பப், 1 லட்சம் சம்பளம் போன்ற பணக்கார உலகத்தை நம்மில் பலருக்குக் காட்டிய துறை.

 

மிக முக்கியமாக, இந்த ஐடி துறையால் தான் இன்று இந்தியா உலக அளவில் நிமிர்ந்து நிற்கிறது. இந்திய பொருளாதாரம் பன் மடங்கு அதிகரித்து இருக்கிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த ஐடி துறைகளில் அவ்வப் போது லே ஆஃப் என்பதும் சகஜம் தான். ஆனால் இந்த முறை ஒரு கம்பெனி, லே ஆஃப் எனச் சொல்லாமல், 18,000 பேரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கம்பெனி விவரம்

கம்பெனி விவரம்

அமெரிக்காவின் முன்னணி ஐடி கம்பெனியான காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் தான் அந்த கம்பெனி. கொரோனா வைரஸ் காலத்தில், எல்லா ஐடி கம்பெனிகளும் ப்ராஜெக்ட்களை பெற முடியாமல் தவிக்கும் பிரச்சனை தான் காக்னிசண்ட் கம்பெனிக்கும். ப்ராஜெக்ட் இல்லாததால் ஊழியர்களுக்கு முறையாக வேலை கொடுக்க முடியவில்லை.

18,000 பேர்

18,000 பேர்

எனவே காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் கம்பெனி, கடந்த 30 - 45 நாட்களாக, சுமார் 18,000 ஊழியர்களை பெஞ்சில் அமர வைத்து இருக்கிறார்களாம். இப்போது வரை பெரிய ப்ராஜெக்ட்கள் கிடைக்காததால், அத்தனை ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்ப காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் கம்பெனி வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாக கர்நாடகா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஐடி யூனியன்கள் குற்றம்சாட்டுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ராஜினாமா செய்யுங்கள்
 

ராஜினாமா செய்யுங்கள்

காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் கம்பெனி, ஊழியர்களை, கம்பெனி முன் வந்து லே ஆஃப் செய்யவில்லையாம். மாறாக ஊழியர்களை ராஜினாமா செய்யச் சொல்லி, கம்பெனி சொல்லிக் கொண்டு இருக்கிறார்களாம். கர்நாடகா ஐடி ஊழியர்கள் சங்கத்தினர்களோ, காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் ஊழியர்களைத் தொடர்பு கொண்ட ராஜினாமா செய்ய வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களாம்.

விதி மீறல் - தவறு

விதி மீறல் - தவறு

பொதுவாக, தொழிலாளர் நலச் சட்டங்கள் படி, ஒரு கம்பெனியில் 100 பேருக்கு மேல் வேலை பார்த்தால், நிர்வாகம் லே ஆஃப் செய்ய, தொழிலாளர் நலத் துறையினரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதே போல, ஊழியர்களை கட்டாயப்படுத்தி அவர்களை ராஜினாமா செய்யச் சொல்வதும் விதி மீறல் என்கிறது கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம்.

புகார் பதிவு செய்வோம்

புகார் பதிவு செய்வோம்

காக்னிசண்ட் டெக்னாலஜீஸ் கம்பெனியில் நடக்கும் லே ஆஃப் பிரச்சனை விதி மீறல் தொடர்பாக மாநில தொழிலாலர் நலத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது கர்நாடகா ஐடி ஊழியர்கள் சங்கம். அதோடு காக்னிசண்ட் டெக்னாலஜீ நிறுவனம் செய்யும் இந்த மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி இருக்கிறது.

தொடர்ந்து லே ஆஃப்

தொடர்ந்து லே ஆஃப்

கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவின் பல்வேறு ஐடி கம்பெனிகளில் தொடர்ந்து லே ஆஃப் நடந்து கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு மாநில ஐடி ஊழியர்கள் யூனியன்களும், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்திடம் பல்வேறு ஐடி கம்பெனிகளுக்கு எதிராக புகார் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படியோ ஊழியர்களுக்கு நீதி கிடைத்தால் சரி.

யார் சரி யார் தவறு

யார் சரி யார் தவறு

ஒரு பக்கம், கொரோனா வைரஸ் பிரச்சனையால் ப்ராஜெக்ட்கள் இல்லாமல் தத்தளிக்கும் ஐடி கம்பெனிகள். ஒரு கம்பெனியின் பார்வையில் ஆட்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மற்றொரு பக்கம் மாதா மாதம் செய்ய வேண்டிய செலவுகள் மற்றும் கடன் இ எம் ஐ தவணைகளோடு போராடும் ஊழியர்கள். மாத சம்பளம் வாங்கும் நம் பார்வையில் இருந்து பார்க்கும் போது கம்பெனி லே ஆஃப் செய்வது தவறு. அரசு தான் இந்த லே ஆஃப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant layoff problem karnataka IT employee union condemns it

Cognizant layoff problem is becoming a hot trend new. Karnataka IT employee union condemns it and they are about to register a complaint with the State Labor department.
Story first published: Saturday, July 4, 2020, 12:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X