இந்திய ஐடி ஊழியர்களுக்கு இது பெருத்த அடியாகத் தான் இருக்கும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் இந்திய ஐடி துறையும் சரி, மற்ற துறைகளும் சரி பொதுவாக தொடர் சரிவினையே கண்டு வருகின்றன, எனினும் குறிப்பிட்ட சில துறைகள் லாக்டவுனுக்கு பிறகு விரைவில் மீண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயல் நாட்டு வணிகங்களையே பெரும்பாலும் நம்பியுள்ள இந்த நிறுவனங்கள், தொடர்ந்து பெருத்த அடி வாங்கி வருகின்றன.

இந்தியாவின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கணிசமான பங்கினை வைத்துள்ள இந்த சேவை துறையானது, கணிசமான அளவு வீழ்ச்சி காணும் நிலையில் உள்ளது.

செலவுக் குறைப்பு நடவடிக்கை
 

செலவுக் குறைப்பு நடவடிக்கை

இந்த நிலையில் தான் பல நிறுவனங்கள் தங்களது செலவினைக் குறைக்க பணி நீக்கம், சம்பள குறைப்பு, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, எல்லாவற்றையும் விட புதிய பணியமர்த்தல் நிறுத்தி வைப்பு என பலவற்றையினையும் செய்து வருகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுமுறை அளித்தும் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றன.

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

ஏற்கனவே செலவு குறைப்புக்காக பல ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்த காக்னிசண்ட் நிறுவனம், தற்போது தனது வணிகத்தில் உள்ள செலவுகளை மேலும் குறைக்கலாம் என்றும் அதன் தலைமை நிதியதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய கரேன் மெக்லொஹ்லின் டிசிஎஸ் நிறுவனம் அதன் செலவுகளை திறம்பட செய்து வருவதாகவும், ஆனால் இதனை காக்ணிசன்ட் நிறுவனம் தொடர்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

மேலும் நாங்கள் டிசிஎஸ் அளவை எட்டுவோம் என்று நம்பிக்கை இல்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க வேலையை செய்கிறார்கள். டிசிஎஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் 92,322 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய சிறந்த சாப்ட்வேர் நிறுவனமாகும். கிட்டதட்ட 4,48,464 பேரினை இந்த சேவைக்காக பயன்படுத்தி வருகிறது.

காக்ணிசண்டில் எத்தனை பேர்
 

காக்ணிசண்டில் எத்தனை பேர்

இதே நியூஜெர்சியினை தலைமையிடமாகக் கொண்டுள்ள காக்ணிசன்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் 2019வுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டின் இறுதியில் அதன் வருவாய் 80,359 கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் சுமார் 2,92,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இது டிசிஎஸ்-போல் வருமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறியுள்ளார்.

செலவினங்களை குறைக்கலாம்

செலவினங்களை குறைக்கலாம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு காக்ணிசன்ட் நிறுவனம் செலவினங்களை குறைக்க, பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. கடந்த ஆண்டே பல மூத்த அதிகாரிகள் உட்பட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் இன்னும் செலவினங்களை குறைக்க இந்த நிறுவனம் டிஜிட்டல் அறிவுள்ள ஊழியர்களை பணியமர்த்தும் போது, இன்னும் செலவினங்களை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

இந்திய ஊழியர்களுக்கு தான் பாதிப்பு

அதிலும் நிறுவனம் தற்போதைக்கு செலவு குறைப்பு என்ற அஸ்திரத்தினை கையில் எடுக்கும் போது, அதன் முதல் வரிசையில் நிற்பது பணி நீக்கமே. ஆக மற்ற சகாக்களை விட, இந்திய ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஊழியர்களை இது பெரும் அளவு பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant may hiring of entry-level digitally skilled executives

Cognizant may reduce the use of expensive contractors. Also analyst said more hiring of entry-level digitally skilled executives offshore will help the company reduce costs.
Story first published: Sunday, June 7, 2020, 9:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X