காக்னிசன்ட்-ன் புதிய சிஇஓ ரவி குமார்.. முகேஷ் அம்பானி விட 4 மடங்கு அதிகம் சம்பளம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கௌதம் அதானி 80களின் துவங்கிய தனது வர்த்தகப் பாதையில் பல வருட விட முயற்சிக்குப் பின்பு தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து சுமார் 30 வருடத்திற்குப் பின்பு தான் இந்தியாவின் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளினார்.

இந்த 30 வருட பயணத்தில் கடந்த 5 வருட வளர்ச்சி மிகவும் முக்கியமானது என்றால் மிகையில்லை, தற்போது கௌதம் அதானி உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராகவும் உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா வரையில் பலர் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றாலும் ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியைப் போல் யாரும் பெரும் தொகையைச் சம்பாதிக்கவில்லை.

ஆனால் சம்பள அளவில் பார்த்தால் முகேஷ் அம்பானியை விடச் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் பல மடங்கு சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த முக்கியமான பட்டியலில் தற்போது கூடுதலாக ஒரு இந்தியர் சேர்ந்துள்ளார்.

முகேஷ் அம்பானி நல்ல நண்பர்.. மனம் திறந்த அதானி.. இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கார் பாருங்க! முகேஷ் அம்பானி நல்ல நண்பர்.. மனம் திறந்த அதானி.. இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருக்கார் பாருங்க!

 காக்னிசன்ட் நிறுவனம்

காக்னிசன்ட் நிறுவனம்

உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பிரையன் ஹம்ப்ரீஸ் பதவி-க்கு வந்துள்ள ரவி குமார், தற்போது முகேஷ் அம்பானியை விட அதிகமாகச் சம்பாதிக்க உள்ளார்.

ரவி குமார் யார்?

ரவி குமார் யார்?

கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டமும், செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்றவர் ரவி குமார். தற்போது காக்னிசன்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆண்டுக்கு 57 கோடி ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

2020-ல் முகேஷ் அம்பானி ஆண்டுக்கு 15 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று வந்த நிலையில், தற்போது ரவி குமார் முகேஷ் அம்பானியை விட நான்கு மடங்கு அதிகச் சம்பளதத்தைப் பெற்று வருகிற உள்ளார். முகேஷ் அம்பானி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு எவ்விதமான சம்பளத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி குமார் முக்கியப் பதவி

ரவி குமார் முக்கியப் பதவி

ரவி குமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார். இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து TransUnion மற்றும் மென்பொருள் சேவை அளிக்கும் Digimarc Corp இன் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

பிரையன் ஹம்ப்ரீஸ்

பிரையன் ஹம்ப்ரீஸ்

காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பிரையன் ஹம்ப்ரீஸ் சுமார் 4 வருடங்களாகப் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காக்னிசன்ட் சரியாகப் பணியாற்றியதாக நிலையிலும், 2022 ஆம் ஆண்டின் 3வது காலாண்டிலும் மந்தமான வருமானத்தைப் பெற்றுள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இதைத் தொடர்ந்து காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பிரையன் ஹம்ப்ரீஸ் நீக்கப்பட்டார். இதற்கிடையில் அக்டோபர் மாதம் இன்போசிஸ் தலைவர் மற்றும் சிஓஓ-வான ரவி குமார்-ஐ காக்னிசென்ட் அமெரிக்காஸ் பிரிவின் தலைவராகப் பணியில் சேர்ந்தார்.

சம்பளம்

சம்பளம்

இதைத் தொடர்ந்து தற்போது சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார், மேலும் ரவி குமார் joining bonus ஆக 6 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றுள்ளார். இதேபோல் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான காக்னிசென்ட் பங்குகளைப் பெற உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant's new CEO Ravi Kumar getting 4 times Mukesh Ambani Salary

Cognizant's new CEO Ravi Kumar getting 4 times Mukesh Ambani Salary
Story first published: Saturday, January 14, 2023, 19:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X