ஐடி ஊழியர்களுக்கு இது போறாத காலம் தான்.. அசெஞ்சர் மட்டுமல்ல.. காக்னிசண்டிலும் 6% பேர் பணி நீக்கம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமீபத்திய காலமாக சர்வதேச சந்தையில் ஐடி நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த வாரத்தில் அசெஞ்சர் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

அசெஞ்சரில் பணி நீக்கம் செய்யப்படுவற்காக ஏமாற்று வேலைகள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அதை செய்தவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.

பொதுவாக ஒருவர் புதியதாக பணியில் சேரும் முன்னர் பணி அனுபவம் என்ன என கேட்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அதற்கு நாம் எங்கெங்கு பணிபுரிந்தோம்? எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தோம் என்ற பல விவரங்கலை கூற வேண்டியிருக்கும்.

 ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலம்.. பாதியாக குறைந்த வேலை வாய்ப்பு.. இனி எப்போது மீளும்? ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலம்.. பாதியாக குறைந்த வேலை வாய்ப்பு.. இனி எப்போது மீளும்?

ஏன் பணி நீக்கம்?

ஏன் பணி நீக்கம்?

தங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, போலியான நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் அனுபவக் கடிதங்களை பயன்படுத்தியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் கிடதட்ட 1000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

பணியமர்த்தல் உண்டு

பணியமர்த்தல் உண்டு

எப்படியிருப்பினும் நிறுவனம் புதிய பணியமர்த்தலை தொடரும் என்றும், சரியான திறன் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்தும் என்று அசெஞ்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்துள்ளது. தற்போது அசெஞ்சரில் போலியான ஆவணங்கள் கொடுத்து இணைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவைக்கு மத்தியில் மோசடி

தேவைக்கு மத்தியில் மோசடி

கடந்த ஒன்றரை வருடங்களில் நிறுவனங்களில் தேவை அதிகரித்த நிலையில், திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருந்து வந்தது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டவர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து இணைந்துள்ளனர்.

காக்னிசண்ட்டிலும் இப்படி தான்

காக்னிசண்ட்டிலும் இப்படி தான்

எப்படியிருப்பினும் மோசடி வேலையில் ஈடுப்பட்ட பலரும் தற்போது நிறுவனத்தினை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அசெஞ்சர் மட்டும் அல்ல, காக்னிசண்ட் நிறுவனத்திலும் 6% ஊழியர்கள் செப்டம்பர் காலாண்டில் பணி நீக்கம் (involuntary attrition) செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

involuntary attrition involuntary attrition

involuntary attrition involuntary attrition

இந்த involuntary attrition என்பதும் பணி நீக்கத்திற்கு இணையதாக கூறலாம் என்றும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜேஷ் நம்பியார் தெரிவித்துள்ளார். இது பின்னணி சரிபார்ப்பு சரியாக செய்யப்படாத நிலையில் இந்த involuntary attrition விகிதம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஏன் இந்த பிரச்சனை?

ஏன் இந்த பிரச்சனை?

வழக்கமாக நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு முன்பு, பின்னணியினை சரிபார்ப்பதில்லை. குறிப்பாக கொரோனா தொற்று நோய் ஏற்பட்ட காலத்தில் தேவை அதிகம் இருந்தது. இதன் காரணமாக ஆன்லைனில் போலி ஆவணங்கள் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக தற்போது அனைவரையும் கடுமையான சோதனைகள் செய்ய அழைப்பு விடுக்கிறது. இதன் காரணமாக பலரும் தற்போது பணி நீக்க சிக்கலில் இருந்து வருகின்றனர்.

அதிகரிக்கும் பிரச்சனை

அதிகரிக்கும் பிரச்சனை

ஏற்கனவே ஐடி நிறுவனங்களில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றது. குறிப்பாக நிலவி வரும் மந்த நிலையால் ஒப்பந்தங்கள் சரிவு, வருவாய் சரிவு, இதன் காரணமாக நிறுவங்களின் செலவு குறைப்பு நடவடிக்கை, மூன்லைட்டிங் பிரச்சனை என பல காரணிகள் ஓடிக் கொண்டுள்ளன. தற்போது போலி ஆவணங்கள் இது நிறுவனங்களுக்கு ஒரு புறம் பிரச்சனை என்றாலும், மறுபுறம் ஊழியர்களையும் களையெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cognizant says is sacked 6% employees in September quarter amid to failed background checks

It has been reported that 6% of the employees of Cognizant have been fired (involuntary attrition) in the September quarter.
Story first published: Thursday, November 10, 2022, 11:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X