ஊழியர்களின் இருப்பிடத்தை டிராக் செய்ய திட்டமிடும் நிறுவனங்கள்.. இனி யாரும் ஏமாற்ற முடியாது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பல மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம். ஹைபிரிட் மாடல் என பல கலாச்சாரங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனாவுக்காக இதனை அமல்படுத்திய நிறுவனங்கள் இதனை தற்போது நிரந்தரமாக்க திட்டமிட்டு வருகின்றன.

சில நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் சில நாட்கள், வீட்டில் இருந்து சில நாட்கள் என பரிந்துரை செய்துள்ளன.

ரஷ்யா போட்ட ஒரே போடு.. பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கு கொடுப்பது போல் கொடுக்க முடியாது.. ! ரஷ்யா போட்ட ஒரே போடு.. பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கு கொடுப்பது போல் கொடுக்க முடியாது.. !

மூன்லைட்டிங் பிரச்சனை

மூன்லைட்டிங் பிரச்சனை

எனினும் இத்தகைய சலுகைகளுக்கு மத்தியில் ஐடி துறையில் மூன்லைட்டிங் பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் பலவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

விப்ரோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் மூன் லைட்டிங் பிரச்சனைகளை சுட்டி காட்டி பணி நீக்கமே செய்துள்ளனர். இதுவே ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இருப்பிடம் டிராக் செய்யப்படுகிறதா?

இருப்பிடம் டிராக் செய்யப்படுகிறதா?

இந்த நிலையில் நிறுவனங்கள் பலவும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் போது, அவர்களின் இருப்பிடத்தை டிராக் செய்ய முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதன் மூலம் அட்ரிஷன் விகிதம், மூன்லைட்டிங் பிரச்சனையை தடுக்க முடியும் என நிறுவனங்கள் நினைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கள் பயன்பாடு

ஆப்கள் பயன்பாடு

எனினும் நிறுவனங்கள் இந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களை எந்த நேரத்தில் சந்திக்கிறார்கள், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள். அவர்களின் அலுவல் நேர என்ன என்பதை கண்கானிக்க பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதோடு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்போது அவர்களை டிராக் செய்ய முடியாது என்றும், இதற்கிடையில் தான் இத்தகைய ஆப்களை பயன்படுத்த திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டம்

உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டம்

இந்த தொழில் நுட்பம் மூலம் ஊழியர்களை கண்கானிப்பதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நிறுவனங்கள் எண்ணுகின்றன. இதன் மூலம் ஊழியர்கள் சேட்டிலைட் மூலம் நேரடியாக அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பார்கள் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதன் மூலம் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பணிபுரிகின்றனரா? என்பதை நிறுவனங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் நிலவரம்

இந்தியாவின் நிலவரம்

இந்தியாவினை பொறுத்தவரையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகம் வர கேட்டுக் கொண்டுள்ளன. எனினும் தொடர்ந்து பல நிறுவனங்களில் கலப்பின முறையில் பணியாற்ற கூறி வருகின்றன.

தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பெரியளவில் பணி நீக்க நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. பல நிறுவனங்களும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் இதுபோன்ற நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக? எந்தெந்த துறை?

எதற்காக? எந்தெந்த துறை?

இதன் மூலம் நிறுவனங்கள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மூன்லைட்டிங் பிரச்சனையை தடுக்க நினைக்கலாம். இதனால் ஊழியர்களை உன்னிப்பாக கவனிக்க நினைக்கலாம். இந்த அம்சமானது ஐடி துறையில் மட்டும் அல்ல, ஆட்டோமோட்டிவ், பார்மா, இன் ஜினியரிங், எலக்ட்ரானிக் பாகங்கள் தயாரிப்பு, சில்லறை விற்பனை மற்றும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

 

தனிப்பட்ட சுதந்திரம்?

தனிப்பட்ட சுதந்திரம்?

எனினும் இதில் ஊழியர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பது பறிபோகவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் எந்த நேரத்திலும் நிறுவனங்கள் உங்களை கண்கானிக்க முடியும். இந்த அம்சமானது பல வருங்டங்களாகவே இருந்து வந்தாலும், தற்போது நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

companies planning to track employee location at work in hybrid model

Many companies are reportedly trying to track the location of employees when they hybrid model work
Story first published: Sunday, December 11, 2022, 23:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X