காண்டம் விற்பனை அமோகம்.. அதுவும் காலையிலேயே.. சென்னை மக்கள் டாப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் லாக்டவுன் கட்டுப்பாடுகளாலும், கொரோனா தொற்றுக்குப் பயந்து இந்திய மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளான காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், ஆடை என அனைத்தையும் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாகப் பெரு நகரங்களில் மக்கள் ஆன்லைன் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதன் வாயிலாக ஆன்லைன் டெலிவரி சேவையை அளிக்கும் டன்சோ நிறுவனத்தின் வர்த்தகம் 2020ல் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது உள்ளது. 2020ல் டன்சோ தனது வாடிக்கையாளர்கள் செய்துள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் டன்சோ அறிக்கை

அதிர்ச்சி அளிக்கும் டன்சோ அறிக்கை

2020ல் இந்திய மக்கள் அதிகளவில் காண்டம் வாங்கியுள்ளனர், பொதுவாகக் காண்டம் இரவு நேரத்தில் அதிகம் விற்பனையாகும், ஆனால் 2020ல் பகல் நேரத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று டன்சோ தெரிவித்துள்ளது.

மேலும் 2020ல் ரோலிங் பேப்பர் விற்பனை சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது என அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை டன்சோ தெரிவித்துள்ளது.

சென்னை 2வது இடம்

சென்னை 2வது இடம்

2020 டன்சோ ஆப்-ல் பெற்ற வர்த்தகத்தின் அடிப்படையில் இரவு நேரத்தை விடவும் பகலில் 3 மடங்கு அதிகக் காண்டம் விற்பனை செய்துள்ளது. மேலும் கடந்த வருட வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது ஹைதராபாத் 6 மடங்கு, சென்னை 5 மடங்கு, ஜெய்ப்பூர் 4 மடங்கு, மும்பை மற்றும் பெங்களூரு 3 மடங்க அதிக விற்பனை பதிவு செய்துள்ளது.

ரோலிங் பேப்பர் விற்பனை உச்சம்
 

ரோலிங் பேப்பர் விற்பனை உச்சம்

ரோலிங் பேப்பர் என்பது சிகரெட் செய்வதற்கானப் பிரத்தியேக பேப்பர், இந்தப் பேப்பர் மூலம் இதர பல பயன்பாடுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த லாக்டவுன் காலத்தில் பெங்களூர் மக்கள் சுமார் 22 மடங்கு அதிக ரோலிங் பேப்பரை வாங்கியுள்ளனர் என டன்சோ தெரிவித்துள்ளது.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள்

இதேபோல் 2020ல் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பெங்களூரு, புனே, கூர்கான் ஹைதராபாத் மற்றும் டெல்லியில் கருத்தடை மாத்திரைகளின் விற்பனை மிகவும் அதிகமாக உள்ளது என டன்சோ தெரிவித்துள்ளது.

மேலும் pregnancy test kits விற்பனை ஜெய்ப்பூரில் அதிகமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி

இதேபோல் டன்சோ தளத்தில் நகரங்கள் வாரியாக அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவையும் பட்டியலிட்டுள்ளது. இதன் படி பெங்களூர் மக்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவு சிக்கன் பிரியாணி. சென்னையில்

இட்லி, மும்பையின் தால் கிச்சடி, கூர்கான் ஆலு டிக்கி பர்கர், புனே மேகி ஆகிய உணவுகளை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர்.

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

இந்த லாக்டவுன் காலத்தில் மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதன் வாயிலாகக் காஃபி, டீ, பால் ஆகியவற்றின் விற்பனை டன்சோ தளத்தில் அதிகரித்துள்ளது. காண்டம் மட்டும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருளாகவும் உள்ளது.

குறிப்பாக டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர் மக்கள் டீ-யை விடவும் அதிகளவில் காஃபி-ஐ ஆர்டர் செய்துள்ளதாக டன்சோ தெரிவித்துள்ளது.

உடல்நலம் காத்தல்

உடல்நலம் காத்தல்

இதேபோல் இந்த லாக்டவுன் காலத்தில் இந்திய மக்கள் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதோடு டயட்-ஐ பின்பற்றும் பல quinoa மற்றும் kale உணவுகளை அதிகளவில் வாங்கியுள்ளனர்.

இதேபோல் பிரவுன் பிரெட், brocolli மற்றும் Avacado ஆகியவற்றையும் அதிகளவில் வாங்கியுள்ளனர்.

அதிகம் வாங்கப்பட்ட புத்தகம்

அதிகம் வாங்கப்பட்ட புத்தகம்

இதேபோல் டன்சோ தளத்தில் அதிகம் வாங்கப்பட்ட புத்தகம் ஸ்பென் ஆட்லர்-ன் Wild Himalaya, ரஸ்கின் பாண்டு-ன் Rhododendrons in the Mist, கவிதா தேவகனின் Ultimate Grandmother Hacks ஆகிய புத்தகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.

1 கோடி ரூபாய் வேண்டுமா.. ஸ்மார்ட் முதலீட்டு திட்டம்.. நிச்சயம் வெற்றி தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Condom sales 3x Higher in day time, rolling paper orders spike 22times in pandemic hit 2020

Condom sales 3x Higher in day time, rolling paper orders spike 22times in pandemic hit 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X