நெட்டிசன்களை பயமுறுத்தும் குக்கீஸ்.. தகவல் திருட்டு முதல் தகவல் விற்பனை வரை..!!

By என். சொக்கன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு துணிக்கடைக்குள் நுழைந்து ஜீன்ஸ் தேடுகிறீர்கள். அதில் ஒரு ஜீன்ஸ் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், அதன் விலை மிகவும் கூடுதலாக இருக்கிறது. 'அப்புறம் பார்க்கலாம்' என்று அதை வைத்துவிட்டு வெளியில் வருகிறீர்கள்.

 

சிறிது தொலைவில் ஓர் உணவகம். அங்கு நுழைந்து, 'ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி' என்கிறீர்கள்.

சிறிது நேரத்தில் காஃபி வருகிறது. அந்தக் கோப்பையில் நீங்கள் சற்றுமுன் பார்த்த அந்த ஜீன்ஸின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது, அதற்குக் கீழ் 'முந்துங்கள், இந்த ஜீன்ஸ் விரைவில் விற்றுத் தீர்ந்துவிடும்' என்று ஓர் அறிவிப்பு.

அதைப் பார்த்ததும் உங்களுக்கு அதிர்ச்சி, 'நான் அந்தக் கடையில் ஜீன்ஸ் பார்த்தது இந்த ஹோட்டல்காரருக்கு எப்படித் தெரியும்?' என்று திகைக்கிறீர்கள்.

இது தினமும் உங்கள் வாழ்க்கையில் நடக்கிறது.. இதற்குக் காரணம் குக்கீஸ்..

இந்த வேலைக்கு ஐடி வேலை தேவலாம்..!! பாதுகாப்பா இருக்கலாம்..!

இணையதளம்

இணையதளம்

உண்மை வாழ்க்கையில் பெரும் திகைப்பை அளிக்கிற இந்தக் கதை உங்களுடைய இணைய வாழ்க்கையில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, ஓர் இணையத்தளத்தில் நீங்கள் பார்த்த ஜீன்ஸோ, புத்தகமோ, மிக்ஸியோ, குக்கரோ அதற்குச் சற்றும் தொடர்பில்லாத மற்றொரு இணையத்தளத்தில் உங்களுக்குத் தென்படுகிறது.

இது தான் குக்கீஸ்

இது தான் குக்கீஸ்

இது எதேச்சையாக நடக்கிற விஷயம் இல்லை. அந்த இரு இணையத்தளங்களும் இன்னும் பலபல இணையத்தளங்களும் ஒன்றாக இணைகிற ஒரு பொதுப்புள்ளி இருக்கிறது, அந்தப் புள்ளியுடன் நீங்களும் வலுவாக இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதைச் சாத்தியமாக்குவது, 'குக்கீஸ்' (Cookies) எனப்படும் தொழில்நுட்பம்.

இணையத்தளங்கள்
 

இணையத்தளங்கள்

குக்கீஸ் என்றதும் 'இதை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கு' என்று யோசிக்கிறீர்களா? கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பல இணையத்தளங்களில் நாம் முதன்முறையாக உள்நுழையும்போது குக்கீஸைப் பயன்படுத்த அனுமதி கோருவார்கள். நாமும் அதை முழுக்கப் படிக்காமல் 'சரி' என்கிற பொத்தானை அழுத்திவிடுவோம். அந்தக் குக்கீஸ்தான் இது.

தனிநபர் தகவல் சேகரிப்பு

தனிநபர் தகவல் சேகரிப்பு

அடிப்படையில் குக்கீஸ் என்பவை சிறு எழுத்துக்கோப்புகள் (text files). இவற்றில் உங்களைப்பற்றி, அதாவது, ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தைப் பார்க்கிறவர் யார் என்பதைப் பற்றிய தனித்துவமான தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றைக்கொண்டு அந்த இணையத்தளம் உங்களை ஒவ்வொருமுறையும் சரியாக அடையாளம் கண்டுகொள்கிறது.

மளிகைக்கடை

மளிகைக்கடை

இதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நீங்கள் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறீர்கள், அங்கு வருகிற ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து வரவேற்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

ஆனால், ஆயிரக்கணக்கானவர்களுடைய பெயர்களை நீங்கள் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? அதற்காக நீங்கள் ஒரு வழி கண்டுபிடிக்கிறீர்கள்: உங்கள் கடைக்கு வருகிற ஒவ்வொருவருடைய தோளிலும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி, அதில் அவருடைய பெயரை எழுதிவிடுகிறீர்கள்.

பெயர் விபரம்

பெயர் விபரம்

அதன்பிறகு, யார் உங்களுடைய கடைக்கு வந்தாலும் அவர்களுடைய தோளை எட்டிப்பார்த்தால் போதும், 'வணக்கம் திரு. வாசுதேவன்' என்றோ, 'திருமதி. சுமிதா, நல்லாயிருக்கீங்களா?' என்றோ நீங்கள் அவர்களைச் சரியாக வரவேற்கலாம்.

அனைத்து விபரங்கள்

அனைத்து விபரங்கள்

அந்த ஸ்டிக்கரில் நீங்கள் பெயரை மட்டும்தான் எழுதவேண்டும் என்று இல்லை. பெயர், வயது, சைவமா, அசைவமா, பிடித்த இனிப்புப்பண்டம், தொலைபேசி எண் என்று பல விஷயங்களை நீங்கள் எழுதலாம்.

 அல்ஃபோன்சா மாம்பழம்

அல்ஃபோன்சா மாம்பழம்

அவற்றைப் பயன்படுத்தி இன்னும் நுட்பமாக நீங்கள் அவர்களை வரவேற்கலாம், 'வாங்க மிஸ்டர் கண்ணன், உங்களுக்குப் பிடிச்ச அல்ஃபோன்சா மாம்பழம் இப்பதான் வந்திருக்கு, ஒரு கிலோ போடட்டுமா?' என்று கேட்கலாம்.

இணையத்தில் சாத்தியம்.

இணையத்தில் சாத்தியம்.


கற்பனை நன்றாகதான் இருக்கிறது. எனினும், உண்மையில் எந்தக் கடையும் வாடிக்கையாளர்களுடைய தோளில் அப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டமுடியாது. ஆனால், இணையத்தில் அது சாத்தியம்.

 குக்கீஸ் டேட்டா சேகரிப்பு

குக்கீஸ் டேட்டா சேகரிப்பு

நீங்கள் செல்கிற பெரும்பாலான இணையத்தளங்கள் அதுபோன்ற ஸ்டிக்கர்களை உங்கள்மீது, அதாவது, உங்களுடைய கணினியில் கண்களுக்குத் தெரியமான தொழில்நுட்பம் மூலம் ஒட்டிவிடுகின்றன, அதில் உங்களைப்பற்றிய பல தகவல்களைத் திரட்டுகின்றன. பிறகு அவற்றை வைத்து உங்களுக்குத் தனிப்பயனான (Personalized) சேவை வழங்குகின்றன. அந்த ஸ்டிக்கர்களைத்தான் குக்கீஸ் (Cookies) என்கிறோம்.

அச்சம்

அச்சம்

இதைக் கேட்டதும் குக்கீஸை நினைத்து உங்களுக்குள் ஓர் அச்சம் வரலாம், இணையத்தளங்கள் நம்மைப்பற்றித் தகவல் திரட்டி அதை நமக்கு எதிராகப் பயன்படுத்துமோ என்கிற பதற்றம் உண்டாகலாம்.

நோக்கம் முக்கியம்

நோக்கம் முக்கியம்

ஆனால், பல தொழில்நுட்பங்களைப்போல் குக்கீஸும் அடிப்படையில் நல்லது தான். அதை வைத்து இணையத்தளங்கள் என்ன செய்கின்றன என்பதை வைத்துதான் அது நல்ல நோக்கத்துக்குப் பயன்படுகிறதா தீய நோக்கத்துக்குப் பயன்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க இயலும்.

புத்தகம்

புத்தகம்

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஓர் இணையத்தளத்துக்குச் சென்று நான்கு புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், அந்த நான்கு புத்தகங்களையும் நினைவில் வைத்திருந்து பின்னர் நீங்கள் அவற்றை மொத்தமாக வாங்குவதற்கு உதவுவது கூடக் குக்கீஸ்தான். அந்த வசதி இல்லாவிட்டால் நீங்கள் இரண்டாவது புத்தகத்தைத் தேர்ந்தெடுத்ததும் முதல் புத்தகம் காணாமல் போய்விடும்.

குக்கீஸ் வகை

குக்கீஸ் வகை

இதுபோல் இணையத்தில் நம்மை அடையாளம் கண்டு நமக்கேற்ற சேவையை வழங்கும் பல வசதிகளைக் குக்கீஸ்தான் சாத்தியப்படுத்துகின்றன. இவற்றை First-party Cookies என்கிறார்கள். அதாவது, ஓர் இணையத்தளத்தால் வைக்கப்பட்டு அந்த இணையத்தளத்தால் மட்டும் பயன்படுத்தப்படும் குக்கீஸ்.

3ஆம் தரப்புக் குக்கீஸ்

3ஆம் தரப்புக் குக்கீஸ்

மாறாக, ஓர் இணையத்தளத்திலிருந்து இன்னோர் இணையத்தளத்துக்குச் செல்லும்போதும் நம்மைப்பற்றிய தகவல்கள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன என்றால், அது Third-party Cookiesஆல் சாத்தியப்படுகிறது.

 சகலமும் கிடைக்கும்

சகலமும் கிடைக்கும்


அதாவது, நாம் எந்த இணையத்தளங்களைப் பார்த்தோம், அங்கு எவ்வளவு நேரம் செலவிட்டோம், என்ன தேடினோம், இணையத்தைப் பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் கருவி என்ன என்பது போன்ற பல தகவல்கள் இணையத்தளங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பின்னர் அந்தத் தகவலை வைத்து நமக்கு ஏற்ற விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதன்மூலம், நாம் விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்கான வாய்ப்புக் கூடுதலாகிறது.

தில்லுமுல்லு வேலைகள்

தில்லுமுல்லு வேலைகள்

ஆனால், உண்மையில் குக்கீஸ் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் விளம்பரங்களைச் சரியாக முன்வைப்பதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது, அதை வைத்து வேறு ஏதாவது தில்லுமுல்லுக்கள் நடக்கின்றனவா? இந்தக் கேள்விக்கான பதிலை நம்மால் உறுதியாகச் சொல்ல இயலாது.

Browser கட்டுப்பாடுகள்

Browser கட்டுப்பாடுகள்

இதில் ஒரு நல்ல விஷயம், நம்முடைய கணினியில் எந்த மாதிரியான குக்கீஸ் வைக்கப்படவேண்டும், யார் வைக்கிற குக்கீஸை நாம் ஏற்போம் என்பவற்றை நம்முடைய உலாவியில் (Browser) நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

நம்முடைய உரிமை

நம்முடைய உரிமை

புதிதாக எந்த இணையத்தளத்துக்குச் செல்லும்போதும் அவர்களுடைய குக்கீஸை ஏற்பதா மறுப்பதா என்பது நம்முடைய தீர்மானம்தான். ஒருவேளை, இதில் நமக்கு ஐயமோ தயக்கமோ இருந்தால் இயன்றவரை Third-party Cookiesஐ மறுத்துவிடலாம்.

இது கிட்டத்தட்ட பிற நிறுவனங்களுக்கு நம்முடைய தகவலை விற்பனை செய்வது தான்.

செக் செய்யுங்கள்

செக் செய்யுங்கள்

உங்கள் கணினியில் இப்போது எத்தனை குக்கீஸ் உள்ளன, அவை யாரால் வைக்கப்பட்டவை, அவற்றில் என்னென்ன தகவல்கள் உள்ளன, அவை எத்தனை நாள் அங்கு இருக்கும் என்பது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள, உங்கள் Browserன் "Settings" அல்லது "Preference" பக்கத்துக்குச் சென்று "Cookies" என்று தேடுங்கள். வேண்டாத குக்கீஸை நீக்கும் வசதியும் அங்கு உள்ளது.

சிறு நகரங்களுக்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. தமிழ்நாட்டுக்கு யோகம் தான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cookies: How it works? how it impacts common man in India? - explained

Cookies: How it works? how it impacts common man in India? - explained நெட்டிசன்களைப் பயமுறுத்தும் குக்கீஸ்.. தகவல் திருட்டு முதல் தகவல் விற்பனை வரை.. என்ன நடக்கிறது?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X