1 கோடி பேர் வேலை இழப்பு.. அதிரவைக்கும் டெக்ஸ்டைல் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோன தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் நிலவி வரும் லாக்டவுன் மூலம் டெக்ஸ்டைல் துறை மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க உள்ளதாகவும், இதன் மூலம் இத்துறையில் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான Clothing Manufacturers Association of India தெரிவித்துள்ளது.

 

இதைத் தவிர்க்க டெக்ஸ்டைல் துறைக்கு அரசு உதவி கட்டாயம் தேவை, அதை விரைவில் திட்டமிட்டு அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது இந்த அமைப்பு.

3.15 லட்சம் கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் இந்திய ரீடைல் சந்தை..!

சிறு, குறு நிறுவனங்கள்

சிறு, குறு நிறுவனங்கள்

இந்திய டெக்ஸ்டைல் துறையில் சுமார் 80 சதவீத நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் குடிசை தொழிலாக மட்டுமே உள்ளது. இந்நிலையில் சுமார் 3,700 நிறுவனங்கள் 7 லட்ச ஊழியர்களுடன் Clothing Manufacturers Association of India (CMAI) அமைப்பில் உள்ளது.

இந்நிலையில் இந்த 3700 நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு என்ன செய்யப்போகிறது, சந்தை எப்படி இருக்கும் என்பது குறித்துப் பயத்துடனே இருப்பதாக அறிவித்துள்ளது.

அரசு உதவி

அரசு உதவி

CMAI அமைப்பின் தலைவர் ராகுல் மேத்தா கூறுகையில், "அரசிடம் இருந்து ஊதிய மானியம் அல்லது சந்தை மீட்டுக் கொண்டு வருவதற்கான சலுகை கொடுக்கவில்லை என்றால் நாட்டின் மொத்த டெக்ஸ்டைல் துறையில் குறைந்தபட்சம் சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் எனக் கணித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பிரச்சனை
 

மிகப்பெரிய பிரச்சனை

மேலும் கார்மென்ட் துறை முடங்கிவிட்டால் அதைச் சார்ந்துள்ள துணி தயாரிப்பு நிறுவனங்கள், நூல் தயாரிப்பு நிறுவனங்கள் என மொத்த சந்தையும் முடங்கிவிடும் அபாயம் உள்ளது.

தற்போது அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ள ஆர்டர்களை ரத்து செய்யக் கூடாது என்பதை உறுதி செய்வதது. இதைச் செய்துவிட்டால் கூடப் பிரச்சனைகளைச் சமாளித்துக்கொள்ள முடியும் என CMAI அமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

இந்தியாவில் இருக்கும் 1500 நிறுவனங்களில் CMAI அமைப்பு செய்துள்ள ஆய்வில் சுமார் 20 சதவீத நிறுவனங்கள் லாக்டவுன் காலத்திற்குப் பிறகு வர்த்தகம் சூடுபிடிக்கவில்லை என்றால் வர்த்தகத்தை மூட திட்டமிட்டுள்ளது. இதேபோல் 60 சதவீத நிறுவனங்கள் சுமார் 40 சதவீதம் அளவிலான வருமானம் பாதிப்பும் எனத் தெரிவித்துள்ளதாக இந்த அமைப்புக் கூறுகிறது.

சீனா

சீனா

கொரோனாவில் பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட வெளிவந்த நிலையில் சீனா தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தற்போது சீன வர்த்தகச் சந்தையில் உணவு மற்றும் இதர உற்பத்தி, சேவை வர்த்தகம் வேகமாக மீண்டு வருகிறது. ஆனால் ஆடை உற்பத்தி துறை சுமார் 59 சதவீத சரிவில் தான் இன்றும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona impact: 1 crore job cuts likely in textile industry

There could be as many as one crore job cuts in the textiles sector, which has been severely hit by the ongoing lockdown, if there is no support and revival package from the government, according to apparel industry body Clothing Manufacturers Association of India. With around 80 per cent of the garment industry mostly micro, small and medium enterprises.
Story first published: Wednesday, April 15, 2020, 8:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X