கொரோனாவினால் பலத்த அடி வாங்க போகும் ஸ்மார்ட்போன் துறை.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இன்று வரை 3,000 பேருக்கும் மேல் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக சீனாவில் மட்டும் இதுவரை 2,912 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

அதிலும் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ஹூபே மாகாணத்தில் தான் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பல நாடுகளில் தனது சாம்ராஜ்ஜியத்தினை பரப்பி வரும் கொரோனாவால் இத்தாலி, அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக-க்கு இப்படி ஒரு நெருக்கடியா? தலை விரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டம்!

தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு

தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்தியாவில், தற்போது ஸ்மார்ட்போன்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனெனில் சில்லறை வர்த்தகர்களிடையே பெரும்பாலான சீனா ஸ்மார்ட்போன்களின் இருப்பு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பு குறைவாகவே உள்ளது

இருப்பு குறைவாகவே உள்ளது

சீனாவின் முக்கிய ஸ்மார்ட்போன்களான ஜியோமி, ரியல்மி, டிசிஎல் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களின் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் சில்லறை வர்த்தகர்களிடையே கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் தவிர ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் இருப்பும் மிக மிகக் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வழக்கமாக கடைகளுக்கு அனுப்பும் சரக்குகளில் 10-20% மட்டுமே கடைகளுக்கு அனுப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஐபோன் ஸ்டாக் சில இடங்களில் இல்லை
 

ஐபோன் ஸ்டாக் சில இடங்களில் இல்லை

அதிலும் ஐபோன் இருப்பானது சுத்தமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 11 சீரிஸ் சுத்தமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. நிறைய சில்லறை விற்பனையாளர்களிடத்தில் ஐபோன் ஸ்டாக்குகள் இல்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர ஆப்பிளின் சில மாடல் வாட்சுகளும் ஸ்டாக் இல்லை என்றும் கூறப்படுகிறது.

டிவி இருப்பும் குறைவாகத்தான் உள்ளது

டிவி இருப்பும் குறைவாகத்தான் உள்ளது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன் எக்ஸ் ஆர் மற்றும் 7 இருப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதே போல டிசிஎல் மற்றும் ஜியோமி டிவிகள் இருப்பும் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே ஜியோமி ஏர் கண்டிஷர்கள் சந்தைகளில் நுழைவதை தாமதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விலை அதிகரித்துள்ளது

விலை அதிகரித்துள்ளது

சந்தையில் நான்காவது பிராண்டான ரியல்மி புதிய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதிலும் தாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பாக அதன் சி3 மற்றும் 5i ரக போன்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்து சில்லறை வர்த்தகர்கள் தரப்பில், உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளின் மீதான தள்ளுபடிகள் குறைந்து விட்டதாகவும், ஐபோன், மேக்புக் கணினிகள், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சில தயாரிப்புகள் தற்போது சில்லறை வர்த்தக கடைகளில் ஸ்டிக்கர் விலையில் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

சீனாவில் முடங்கியுள்ள சில நிறுவனங்கள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. எனினும் அவர்கள் தங்களது மொத்த உற்பத்தியில் 35 - 50% உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதன விளைவாக சில கூறுகளின் விலைகள் ஏற்கனவே சற்று உயர்ந்துள்ளன. இதனால் டிவி மற்றும் ஸ்மார்ட்போன், ஏசி உற்பத்தியாளர்கள் விலையை 5 -10% அதிகரிக்க கட்டாயபடுத்தியுள்ளன.

தெளிவான தகவல் எதுவும் இல்லை

தெளிவான தகவல் எதுவும் இல்லை

மேலும் சீனாவில் நிலைமை சீராகிவிட்டதா என்று தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் இது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது பற்றிய சரியான செய்திகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அடுத்த மாதம் எங்களுக்கு சரக்கு இல்லாத நிலை ஏற்படும் போல் இருக்கிறது என்று டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை

இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை

இது ஜியோமி இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீனாவில் நீட்டிக்கப்பட்ட பணி நிறுத்தம் காரணமாக மார்ச் மாத தொடக்கத்தில் டிவி வினியோக சங்கிலி சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். எனினும் இந்தியாவின் உள்ள தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

பற்றாக்குறை நிலவி வருகிறது

பற்றாக்குறை நிலவி வருகிறது

இதே ரியல்மி இந்தியா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சில முக்கிய உதிரிபாகங்கள் இருப்புக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளது. சீனாவில்; நிலவி வரும் முடக்கத்திற்கு மத்தியில் எங்களுக்கு தேவையான முக்கிய பாகங்கள் போதியளவு கிடைக்கவில்லை. எனினும் தற்போது அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் விரைவில் நிலைமை சரியாகும் என்றும் ரியல்மி தெரிவித்துள்ளது.

விரைவில் நிலைமை சீரடையும்

விரைவில் நிலைமை சீரடையும்

மேலும் தொழில் சாலைகளில் ஷிப்ட் கணக்கில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், திட்டமிட்டப்படி புதிய அறிமுகங்களும் கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் ரியல்மி தெரிவித்துள்ளது. இதே டிசிஎல் இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொருட்களை சேமிக்க தொடக்கம்

பொருட்களை சேமிக்க தொடக்கம்

சில சில்லறை விற்பனையாளர்கள் இடையூறு ஏற்படுமோ என்ற அச்சத்தால் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட டிவிக்களை சேமிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல் குளிர்சாதன பெட்டிகள் போன்ற சில தயாரிப்புகளில் சேமிக்க தொடங்கியுள்ளனர். சில்லறை விற்பனையாளர்கள் குறுகிய கால வினியோக தடைகளை எதிர்பார்த்து சரக்குகளை உருவாக்கி வருகின்றனராம்.

தென் கொரியாவிலும் பாதிப்பு

தென் கொரியாவிலும் பாதிப்பு

பெரும்பாலான நுகர்வோர் சம்பந்தமான எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், அவர்களுக்கு தேவையான முக்கியமான உதிரிபாகங்களுக்காக சீனாவினையே சார்ந்துள்ளனர். மேலும் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் அமைந்துள்ள தென் கொரியாவிலும் தற்போது இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அதன் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் உற்பத்தி பாதிப்பு

ஆப்பிள் உற்பத்தி பாதிப்பு

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து கிடைக்கவில்லை. இதனால் அதன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் முன்பை காட்டிலும் உற்பத்தி மிக குறைவு தான் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் ஏப்ரலில் தான் இந்த நிலைமை சீரடையும் என்றும், இதன் 50% வணிகம் பாதிக்கப்படலாம் ஆப்பிளின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona virus outbreak: Multiple Smartphone and electronic retailers stocks are very low in india

Most of the electronics and Smartphone producers are heavily dependent on china for manufacturing of finished products and important components. So some brands are running low at shops in India due to corona virus outbreak. Only there is supply 10 – 20% of the usual number have been sent to stores.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X