உலக அளவில் மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனாவால், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பாதிப்பு என்னவோ ஏழை நாடுகளுக்கு தான் என்கிறது ஒரு ஆய்வு.
கொரோனா பரவல் தொடங்கி பல மாதங்கள் ஆகியுள்ளது. ஏன் இன்றோடு அதற்கு ஒரு வயது என்று பிறந்த நாளும் கொண்டாடப்படுவதாக, சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு சர்வதேச அளவில் பல நாடுகளும், நிறுவனங்களும், மக்களும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இதனால் தனி நபர்களின் வருமானம் குறைந்துள்ளதாக கருத்து கணிப்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பெங்களூருவினை அடிப்படையாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம், கொரோனா பெருந்தொற்று காரணமாக டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி இரு இலக்கில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் வணிகத்தில் 5 முக்கிய துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா & அனலிஸ்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் IoT உள்ளிட்ட 5 துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக கிளவுட் கம்ப்யூட்டிங் மிகப்பெரிய வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் இன்ஃபோசிஸ் 'கோபால்ட்' என்ற முதல் கிளவுட் பிராண்டாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிபுணர்களின் கணிப்பின் படி, நடப்பு ஆண்டில் நிறுவனம் நல்ல லாபத்தினை எதிர்பார்க்கிறது. இது 150 மில்லியன் டாலர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் சில செலவினங்களையும் நிறுவனம் எதிர்பார்க்கிறது. குறிப்பாக டிஜிட்டல் செயல்பாடுகளை ஊக்குவிக்க செலவினங்களையும் அதிகரிக்க வேண்டும் என்றும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
மறுபுறம் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், இன்ஃபோசிஸ் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் ஆரோக்கியமான வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதோடு இன்ஃபோசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் எண்ணிக்கை போன்ற செலவினங்களை குறைக்க பயனுள்ளதாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அமெரிக்கா வைத்த செக்.. ஹூவாயின் ஹானர் பிராண்ட் விற்பனை.. காரணம் என்ன?
மேலும் குறைந்த பயண மற்றும் விசா செலவுகள், செலவு குறைப்புகள், பில்டிங் செலவுகள், உள்ளிட்டவையும் வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.