கோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் இதைக் கட்டப்படுத்த வேண்டும் என இதைச் சாத்தியமாக்க உலகில் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து இயங்கவும், ஒத்துழைப்பு அளிக்கவும், உதவிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைத்து கொரோனா வேக்சின் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் மலிவான விலையில், அதேநேரத்தில் வெளிப்படையான வர்த்தக முறையில் பெற வேண்டும் என்பதற்காக Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) ஒப்பந்தத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

கோவிட் வேக்சின்: இந்திய அரசின் முயற்சிகளில் முரண்பாடு.. வல்லுனர்கள் குற்றச்சாட்டு..!

இந்தத் தளர்வுகளில் மிக முக்கியமானது intellectual property rights அதாவது அறிவுசார் சொத்து உரிமை கொள்கையைக் கொரோனா வேக்சின் மற்றும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் மீது தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான்.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்த உலக வர்த்தக அமைப்பின் (WTO) TRIPS கவுன்சில், அறிவுசார் சொத்து உரிமை கொள்கையில் பல விதிமுறைகள் அறிக்கைகள் தளர்வு அளிக்கத் தடையாக இருக்கும் அல்லது இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்தி விரைவாக மக்களுக்கு வேக்சினை கொண்டு சேர்க்க முடியாமலும் போகலாம் எனத் தெரிவித்துள்ளது.

உலகளவில் அனைவருக்குமான தேவை உள்ள நிலையில் WTO அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு கட்டாய / அரசு பயன்பாட்டு உரிமங்கள் மூலம் கொரோனா வேக்சின் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் பகிர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் 2021, மே 9ஆம் தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் அறிவுசார் சொத்து உரிமை கொள்கையைப் பாதுகாக்கவும், அதேசமயம் இந்தியாவிற்குச் சாதகமாகவும் இதை மாற்றப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

தற்போது அவசரப்பட்டு Patents Act, 1970 அல்லது வேறு ஏதேனும் சட்டதிட்டத்தில் மாற்றங்கள் செய்து அதிகாரம் வழங்கப்பட்டால், இந்தியாவிற்கே இது ஆபத்தாக மாறலாம். இதைச் சாத்தியமாக்க மத்திய அரசு அனைத்து விதமான பணிகளையும், பல சர்வதேச அமைப்புகளிடமும் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது.

இங்கு தான் அரசின் நிலைப்பாடு முரண்படுகிறது என அறிவுசார் சொத்து உரிமை வல்லுனர் கே.எம்.கோபாகுமார்.

TRIPS சட்டத்தில் தளர்வு அளிக்கப்படுவதன் மூலம் மோனோபோலி பிரச்சனையை உடைந்து கொரோனா வேக்சின், மருந்து ஆகியவற்றைப் பல நிறுவனங்களிடம் பகிரப்பட்டு உற்பத்தியையும், விநியோகத்தையும் அதிகரிப்பது தான் முக்கிய நோக்கம் இதைத் தான் மத்திய அரசும் கோரி வருகிறது.

ஆனால் மத்திய அரசு இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் தொழில்நுட்பத்தை நாட்டில் உள்ள அனைத்து மருத்து உற்பத்தியாளர்களிடம் பகிர்ந்து, உற்பத்தியை மேம்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது.

இதுதான் இங்கு முரண்படுவதாக அறிவுசார் சொத்து உரிமை வல்லுனர் கே.எம்.கோபாகுமார் கூறுகிறார்.

இதேபோல் ஐஐசி மெட்ராஸ் முன்னாள் மாணவர் பிரதீஷ், வழக்கறிஞர் ஸ்ரீராம், முகுந்த் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த குற்றச்சாட்டில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு மருத்துக்கு வெளிநாட்டு நிறுவனமான AstraZeneca பேட்டென்ட் பெற்றுள்ளது. ஆனால் அதை உரிமம் பெற்று இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதேபோல் இந்தியாவில் ICMR மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த உள் நாட்டுக் கொரோனா தடுப்பு மருத்தான கோவேக்சின்-ஐ பேட்டென்ட் பாதுகாப்புடன் உள்நாட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அளிக்க மத்திய அரசை எது தடுக்கிறது. எனப் பிரதீஷ் வாதாடியுள்ளார்.

மேலும் கோவேக்சின் மருந்து அரசின் முதலீடு மற்றும் அறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. பாரத் பயோடெக் தொழிற்சாலை மட்டும் தயாரிக்கும் காரணத்தால் போதுமான அளவிற்கு இதைத் தயாரிக்க முடியவில்லை. மத்திய அரசு கோவேக்சின் மருந்தின் தொழில்நுட்பத்தைத் தாராளமாகப் பேட்டென்ட் பாதுகாப்புடன் பகிரலாம் எவ்விதமான தடையுமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus | contradiction in India’s push for IPR waiver on Covid vaccines

Coronavirus | contradiction in India’s push for IPR waiver on Covid vaccines
Story first published: Thursday, May 13, 2021, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X