செலவினை குறைக்க அதிரடி திட்டங்களை தீட்டும் ஏர்பஸ்.. என்ன செய்ய போகிறது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்னும் கொடிய அரக்கனால் உலகமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், அதில் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் விமானத் துறையும் ஒன்றாகும்.

 

இதற்கிடையில் முன்னணி விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பெரும் இழப்பினை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து செலவினைக் குறைக்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல விமான நிறுவனங்கள் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சில நிறுவனங்கள் பணி நீக்கம் சம்பள குறைப்பு என நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விமானத்துறையில் முன்னணி நிறுவனமான ஏர்பஸுன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

இது குறித்து ஏர்பஸ்ஸின் தலைமை செயல் அதிகாரி கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த முழுமையான மதிப்பீட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் நிறுவனம் பெரும் நஷ்டத்தினை எதிர் கண்டு வருவதாகவும், அதுவும் கணிக்க முடியாத வேகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

உற்பத்தியை குறைக்க திட்டம்

உற்பத்தியை குறைக்க திட்டம்

அதுமட்டும் அல்ல, இந்த மாதம் உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியினை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான தொழில் கணிசமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தேவை குறையும். அதிலும் தற்போது புதிய விமானங்களை வாங்குவது பெரிதும் குறையும்.

நிதி அறிக்கை
 

நிதி அறிக்கை

ஆங்கில செய்தி ஒன்றில் வெளியான அறிக்கையின் படி, ஏர்பஸின் 1,35,000 ஊழியர்களை காப்பாற்ற ஆழ்ந்த பணி நீக்கங்களை கட்டுப்படுத்துமாறும், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் இந்த வாரத்தில் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதி அறிக்கைகளை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல வருடம் ஆகும்

பல வருடம் ஆகும்

எப்படி எனினும் விண்வெளித் தொழில் மீட்க பல ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை இடை நீக்கம் செய்வதற்கான போயிங் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஏர்பஸ் நிறுவனமும் பணி நீக்கம் செய்யப்போகிறதா என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை. ஆனால் செலவினை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Airbus plans to cost cut

Airbus CEO warns staffs it’s bleeding cash and cuts are needed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X