ஐடி நிறுவனங்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. குறைந்த பயண செலவு.. எகிறிய லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையா? உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என்பதை நாம் கேட்டிருக்க முடியும்.

ஆனால் அவரவர்களுக்கு பிரச்சனையை அவர்கள் மட்டுமே அறிய முடியும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயினால் ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிய புரிய கூறி வருகின்றன.

இது ஊழியர்களுக்கு மிக நல்ல விஷயம். இதனால் போக்குவரத்து செலவுகள் குறைந்துள்ளன. ஆனால் அதே சமயம் கம்யூனிகேஷன் தொடர்பான செலவினங்கள் அதிகரித்துள்ளனவே.

கவனிக்க வேண்டிய செலவினங்கள்?

கவனிக்க வேண்டிய செலவினங்கள்?

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியான ஒரு அறிக்கையில், ஐடி துறையில் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு சுவாரஸ்யமான போக்கினை காண்பதாக கூறப்பட்டுள்ளது. அது என்னவெனில் கடந்த ஜூன் காலாண்டில் அதன் பயண செலவு 86 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால் அதே சமயம் அதன் தகவல் தொடர்பான செலவினங்கள் 20 -30% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளன.

பயண செலவு எவ்வளவு?

பயண செலவு எவ்வளவு?

இந்த தரவுகள் நிறுவனங்களின் காலாண்டில் முடிவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த மூன்று நிறுவனங்களுக்கான மொத்த பயண செலவு ஜுன் 2019 காலாண்டில் 2,153 கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் இது கடந்த ஜூன் 2020ல் 500 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கொரோனா காரணமாக வீடுகளில் இருந்தே ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கம்யூனிகேஷன் செலவு

கம்யூனிகேஷன் செலவு

ஆனால் அதே நேரத்தில் சமூக இடைவெளியினை கடைபிடிப்பதற்காக வீடியோ கான்பிரன்சிங் மற்றும் கம்யூனிகேஷன் செலவுகள் 742 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 600 கோடி ரூபாயாக இருந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பு வரை, ஐடி நிறுவனங்களின் மூன்றாவது பெரிய செலவினமாக பயண செலவு இருந்தது.

இன்போசிஸ் லாபம் அதிகரிப்பு

இன்போசிஸ் லாபம் அதிகரிப்பு

ஆக மொத்தத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல விஷயம் செலவினங்கள் குறைவால், லாபம் அதிகரித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில் கடந்த ஜூன் 2019ல் 3,809 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம், ஜூன் 2020ம் காலாண்டில் 4,272 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.4% அதிகரித்துள்ளது.

இன்போசிஸ் செலவினங்கள்

இன்போசிஸ் செலவினங்கள்

விப்ரோ நிறுவனத்தின் பயண செலவுகள் ஜூன் 2019ல் 827 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ல் 116 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 86% குறைந்துள்ளது.

இதே கம்யூனிகேஷன் தொடர்பான செலவினங்கள் ஜூன் 2019ல் 127 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ல் 163 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 28.3% அதிகமாகும்.

டிசிஎஸ் நிறுவனத்தின் செலவு

டிசிஎஸ் நிறுவனத்தின் செலவு

டிசிஎஸ் நிறுவனத்தின் பயண செலவுகள் ஜூன் 2019ல் 934 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ல் 286 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 69.4% குறைந்துள்ளது.

 

இதே கம்யூனிகேஷன் தொடர்பான செலவினங்கள் ஜூன் 2019ல் 378 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ல் 460 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 21.7% அதிகரித்துள்ளது.

டிசிஎஸ் நிகரலாபம்

டிசிஎஸ் நிகரலாபம்

வரிக்கு பிறகான லாபம் ஜூன் 2019ம் காலாண்டில் 8,153 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ம் காலாண்டில் 7,049 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 13.5% குறைவாகும். கொரோனா காரணமாக இதன் வர்த்தகம் சற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் சற்று குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விப்ரோ செலவினங்கள் எவ்வளவு?

விப்ரோ செலவினங்கள் எவ்வளவு?

விப்ரோ நிறுவனத்தின் ஜூன் 2019ம் காலாண்டில் 392 கோடி ரூபாயாக இருந்த பயண செலவு, ஜூன் 2020ம் காலாண்டில் 98.5 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 74.9 சதவீதம் குறைந்துள்ளது.


இதே கம்யூனிகேஷன் தொடர்பான செலவினங்கள் ஜுன் 2019ல் 94.6 கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் 2020ல் 119 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 25.8% அதிகமாகும்.

விப்ரோ லாபம்

விப்ரோ லாபம்

விப்ரோ நிறுவனத்தின் லாபம் வரிக்கு பிறகு ஜூன் 2019ம் காலாண்டில் 2,014 கோடி ரூபாயாக இருந்த நிலையல், ஜூன் 2020ம் காலாண்டில் 2,192 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை விட 8.8 சதவீதமாகும். நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரிந்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: IT companies travel bills were down, but at this same time communication expenses were high

Coronavirus impact: IT companies travel bills were down, but at this same time communication expenses were high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X