புனே: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் பல நிறுவனங்களும், தொழில்சாலைகளும் மூடப்பட்டு வருகிறது.
அதிலும் இந்தியாவின் கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகிறது.
உலகளவில் மிக கடுமையாக அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து விலக்கம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து சற்று விலக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இது வங்கிகளின் வேலை மற்றும் சுகாதார வசதிகளை பாதிக்கும் என்றும் புனே கலெக்டர் கிஷோர் ராம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார். தொழில்களின் ஒரு பகுதியாக தொற்று நோய் குறித்து சில குழப்பங்கள் உள்ளன.

அத்தியாவசியமானவை எது?
மேலும் தொழில் சாலைகளின் வகையை அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்தியுள்ளோம். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் அவற்றின் செயல்பாடுகளைத் தொடருபவர்கள். எழுபது சதவீத வங்கிகள் மற்றும் சுகாதார தொடர்பான நெட்வொர்க்குகள், புனேவை தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப துறையால் பராமரிக்கப்படுகின்றன.

ரத்த தான முகாம்களுக்கு அனுமதி
ஆக இவ்வாறு முக்கிய துறைகளில் 25% ஊழியர்களில் நாங்கள் செயல்பட அனுமதிக்கிறோம். அதே போல ரத்ததான முகாம்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. நகரத்தில் இரத்த பற்றாக்குறை இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 15 பேர் பங்கேற்கலாம் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு
கடந்த சனிக்கிழமையன்று புனேவில் 42 வயதான பெண்ணுக்கு கொரோனா தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர் எங்கும் பயணம் செல்லவில்லை. அவரை சார்ந்தவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.