வருவாய் இழப்பு.. மில்லியன்கணக்கான வேலைகள் பறிபோகலாம்.. அச்சத்தில் தொழில்துறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளுக்கு தற்போது பெரிய சவாலாக இருக்கும் கொரோனா வைரஸினால், உலகமே அதிர்ந்து போயுள்ளது எனலாம்.

 

இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் உலகமே முற்றிலும் முடங்கிபோயுள்ளது எனலாம். ரயில் போக்குவரத்து கிடையாது,. விமானம் கிடையாது. ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்திற்கு சரியான காரணம் இல்லாமல் போக முடியாது.

ஏன் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள். இது போன்ற நிலை தான் பல நாடுகளில் நிலவி வருகிறது. இந்தியாவிலும் இதே நிலை தான்.

1000 ஜிபி டேட்டா வெறும் 199 ரூபாய்க்கு! ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் அதிரடி!1000 ஜிபி டேட்டா வெறும் 199 ரூபாய்க்கு! ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் அதிரடி!

எங்களுக்கு தான் பெருத்த அடி

எங்களுக்கு தான் பெருத்த அடி

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் நாட்டின் 70% பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி போயுள்ளன என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது சில்லறை வர்த்தகத் துறை தான் என்கிறது ஒரு அறிக்கை. இல்லையில்லை எங்கள் துறையில் தான் பெருத்த அடி என்கிறது ஆடை உற்பத்தி துறை.

அரசின் உதவி வேண்டும்

அரசின் உதவி வேண்டும்

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு தங்கள் பக்கம் இருக்கும் இழப்பினை கூறி வருகின்றனர். இது குறித்து வெளியான அறிக்கையில், இந்திய சில்லறை விற்பனையாளார்கள் சங்கம் (RAI), இந்தியா ஆடை உற்பத்தியாளார் சங்கம் (CMAI), தேசிய உணவக சங்கம் (NRAI) உள்ளிட்ட பல முக்கியமான சங்கங்கள் அரசினை அவசரடியாக உதவிக்கு அழைத்துள்ளன.

1 கோடி பேர் வேலை இழக்கலாம்
 

1 கோடி பேர் வேலை இழக்கலாம்

இந்தியா ஆடை உற்பத்தியாளார் சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா, அரசாங்கம் உதவிக்கு வரவில்லை எனில் 1 கோடி வேலைகளை நாம் இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆடைத் தொழில் 80% அதிகமானவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத சிறு குறு நிறுவனங்களாக உள்ளன.

வணிகத்தினையே இழக்கலாம்

வணிகத்தினையே இழக்கலாம்

இன்னும் சொல்லப்போனால் 20% சிறு உற்பத்தியாளர்கள், பூட்டுதலுக்கு பின்பும் தங்கள் வணிகத்தினை நிறுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 60% வணிகர்கள் 40% வணிகத்தினை இழக்க நேரிடும் என்றும் மேத்தா கூறியுள்ளார். இதே போன்று சில்லறை வர்த்தக துறையில் 25% கடைகள் மட்டுமே திறக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

ஏனெனில் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் மூலதனத்தினை இழக்க நேரிடலாம் என்றும் சில்லறை விற்பனையாளார்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜகோபாலான் தெரிவித்துள்ளார். இதனால் பலர் தங்களது வேலையினை இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சில்லறை வர்த்தகத் துறையில் தங்களது வருவாயில் 30 -35% இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: retailers fear many million jobs losses as revenue fall up to 35 percent

CMAI president rahul Mehta said if the government doesn’t come to their aid, the textile industry would see over 1 cr job losses.
Story first published: Tuesday, April 14, 2020, 12:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X