உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகமே இன்று கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன. சொல்லப்போனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அறிக்கை ஒன்று கூறியது.

இப்படி இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிப்பு, விற்பனை முடக்கம், ஏற்றுமதி செய்ய இயலாமை என பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்களின் கடன் அளவும் அதிகரித்துள்ளது.

உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. !

இந்த நிலையில் மணிகன்ட்ரோல் செய்தி ஒன்றில், நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய கடன் அளவு 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் அவர்கள் கொரோனா வைரஸினால் முடங்கிப் போன தங்களது வர்த்தகத்தினை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து நிதியினை உயர்த்த முயற்சித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து 900 சிறந்த நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. முன்னோடியில்லாத மொத்த உலகளாவிய கார்ப்பரேட் கடன் 12 சதவீதம் அதிகரித்து 9.3 டிரில்லியன் டாலராக இது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக நடுத்தர நிறுவனங்களில் இந்த விகிதம் உச்சம் தொட்டு வருகின்றது.

இது கடந்த ஆண்டே 8 சதவீதம் கூர்மையான உயர்வைக் கண்டது. இந்த நிலையில் இவைகள் பல நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் பங்குகளை திரும்ப வாங்குதல் மற்றும் டிவிடெண்டுக்காக நிறுவனங்கள் முன்பு கடன் வாங்கின. ஆனால் நடப்பு ஆண்டில் இது வேறு விதமாக இருக்கும். பல காரணங்களுக்காக இருக்கும். கொரோனா எல்லாவற்றையும் மாற்றியுள்ளது என Janus Henderson நிறுவனத்தின் போர்ட்போலியோ மேனேஜர் சேத் மேயர் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் கடந்த ஜனவரி மற்றும் மே வரையிலான காலத்தில் பத்திர சந்தைகள் மூலம் 384 மில்லியன் டாலர் திரட்டின. சமீபத்திய வாரங்களில் குறைந்த கடன் மதிப்புடைய நிறுவனங்கள் கூட நிதியினை திரட்டி வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மிகவும் நம்பகமான நிறுவனங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் கடன் சந்தைகள் மூடப்பட்டன. எனினும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளிடமிருந்து அவசரகால பெரு நிறுவன கடன் வாங்கும் திட்டங்களால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

புதிய கடன் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள், ஏற்கனவே கடந்த 2014ல் இருந்ததை விட கிட்டதட்ட 40 சதவீதம் அதிகம் கடன்பட்டுள்ளன. மேலும் கடன் வளர்ச்சியானது லாபத்தினையும் விஞ்சிக் காணப்படுகிறது.

இந்த லிஸ்டில் அமெரிக்கா கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனில் கிட்டதட்ட 3.9 டிரில்லியன் டாலர் கடன்பட்டுள்ளன. அதோடு சுவிட்சர்லாந்தினை தவிர, மற்ற மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கடன் விரைவான அதிகரிப்பைக் கண்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: worldwide corporate debt may increase in 2020

Debt issue.. Worldwide corporate debt may increase in 2020 amid coronavirus crisis
Story first published: Monday, July 13, 2020, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X