பிரான்சில் எல்லாமே ஷட் டவுன் ஆகப் போவுது.. நஷ்டமானலும் பரவாயில்லை.. வீட்டிலேயே இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் ஒன்று தான் பிரான்ஸ். பாரிஸை தலையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நாட்டின் மொத்த வருவாயில் சுற்றுலா துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.

 

அதிலும் கொரோனா பயம் காரனமாக அந்த நாட்டில் ஈபிள் கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் 72 மணி நேரத்தில் கொரோனாவின் தாக்கம் இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், அந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எல்லாமே ஷட் டவுன் செய்யுங்க

எல்லாமே ஷட் டவுன் செய்யுங்க

நாட்டில் மொத்தம் 67 மில்லியன் மக்களுக்கும் மேல் உள்ள பிரான்ஸ் நாடு, தனது மக்களை வீட்டினுள் உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்று கிழமை முதல் கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுது போக்கு வசதிகளை மூட அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அரசுக்கு இந்த வைரஸினை கட்டுபாடுத்த வேறி வழி தெரியவில்லை.

மொத்தம் பாதிப்பு

மொத்தம் பாதிப்பு

மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தாலேயே அன்றி, இதன் தாக்கம் மேலும் பரவாமல் தவிர்க்க முடியும் என்றும் பிரான்ஸின் பிரதமர் எட்வர்ட் பிலிப் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பாவில் நிலை கொண்டுள்ள கொரோனாவால் 91 பேர் இறந்து விட்டதாகவும், 4,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம்
 

கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம்

மேலும் பிரான்ஸில் அத்தியாவசியமற்ற அனைத்து இடங்களையும், குறிப்பாக உணவகங்கள், சினிமாக்கள், இரவு விடுதிகள் மற்றும் பல கடைகளை மூட முடிவு செய்துள்ளோம். ஏனெனில் எங்கள் இயக்கங்களை கட்டுபடுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இதனால் அதன் தாக்கத்தினையும் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம் விதிவிலக்கு

இதற்கெல்லாம் விதிவிலக்கு

இந்த விதிவிலக்கில் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் புகையிலை மருந்துகள் உணவு கடைகளுக்கு சில சலுகைகள் உண்டு. எப்படி எனினும் ஞாயிற்று கிழமையன்று கடுமையான விதிமுறைகளுடன் உள்ளாட்சித் துறைகள் கீழ் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் மூடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் திறப்பு எப்போது

மீண்டும் திறப்பு எப்போது

அரசு அறிவித்த பின்னரும் கூட பிலிப்பைன்ஸின் சில இடங்களில் பார்கள் நிரம்பியிருந்தன. கூட்டத்தினை தவிர்ப்பதற்கான அறிக்கைகள் இருந்த போதிலும் கூட, பார்வையாளர்களும் பொதுமக்களும் கூட்டமாக பொது இடங்களில் குழுமியிருந்தனர். இதனால் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் ஊழியர்களை தங்களது வீடுகளில் இருந்து பணி புரிய அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக இது போன்ற பல அதிரடியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததோடு மட்டும் அல்லாமல், மேற்கூறியவை அனைத்தும் இன்று முதல் மூடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எப்போது திறக்கலாம் என்றும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus outbreak: France will soon closes shops, restaurants and entertainment facilities

France will shut shops, restaurants and entertainment facilities today. And France government said 67 million people to stay home to help fight with corona virus.
Story first published: Sunday, March 15, 2020, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X