தலைவிரித்தாடும் வேலையின்மை விகிதம்.. ஆபத்தில் இந்திய ஊழியர்கள்.. இனி என்னவாகுமோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாகவே இந்தியாவின் நெருக்கடியினை நாளுக்கு நாள் அதிகரிக்கும் விதமாக, வேலையின்மை விகிதம் குறித்த அறிக்கைகள் எதிர்மறையாக அதிகரித்து வருகின்றன.

Recommended Video

அல்லாடும் IIT, IIM & மற்ற கல்லூரி மாணவர்கள்! கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்!

இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ், மக்களிடையேயும், பொருளாதாரத்தினையும் தாக்கி வருகிறது. அதே நேரம் வேலையின்மை விகிதமும் அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியாக நகர்புற வேலையின்மை விகிதம் 30.9% ஆக அதிகரித்துள்ளதுள்ளது.

அதிகரித்து வரும் வேலையின்மை

அதிகரித்து வரும் வேலையின்மை

இதே ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமானாது 23.4% ஆக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் கண்கானிப்பு மையமான CMIE அறிக்கையின் படி, கடந்த இரண்டு வாரங்களாகவே இந்திய பொருளாதாரம் சீராகத் தான் உள்ளது. ஏப்ரல் 5-வுடன் முடிவடைந்த வாரத்தின் தரவு திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

இது மார்ச் நடுப்பகுதியில் 8.4% ஆக வேலையின்மை விகிதம், தற்போது 23% ஆக அதிகரித்துள்ளது. மேலும் தோராயமான கணக்கீட்டின் படி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 மில்லியன் மக்கள் வேலை இழந்திருக்கலாம் என்றும் இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளிவிவர ப்ரோனாப் சென் கூறியுள்ளார்.

வேலையின்மை அதிகரிக்கலாம்
 

வேலையின்மை அதிகரிக்கலாம்

எனினும் தற்போது கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலையின்மை விகிதம் இன்னும் அதிகமாக இருக்கலாம். இன்னும் சிறிது காலத்தில் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் சென் கூறியுள்ளார். பல பெரிய பொருளாதார நாடுகள் கூட, கொரோனா தொற்று நோயினால் பரவலான வேலை இழப்புகளை பதிவு செய்து வருகின்றன.

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையின்மை

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையின்மை

இதற்கு சிறந்த உதாரணமே அமெரிக்கா தான். கடந்த 15 நாட்களில் சுமார் 10 மில்லியன் அமெரிக்கா தொழிலாளர்கள் வேலையின்மை உதவிக்கான பலனுக்காக விண்ணபித்துள்ளனர். இப்படி இருக்கையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்கக் கூடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வருவாய் இழப்பு ஏற்படலாம்

வருவாய் இழப்பு ஏற்படலாம்

தொழிலாளர்களில் கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு சாதாரண தொழிலாளர்கள் ஆவர். ஆக வேலையின்மை தொடரும் பட்சத்தில் அவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். ஆக இவ்வாறு வருமான இழப்பினை சந்திப்பவர்கள் நுகர்வினை குறைவாக எடுத்துக் கொள்வர். இதனால் தேவை குறையும்.

பெரும் விளைவு

பெரும் விளைவு

ஆக தற்போது இதில் கவனம் செலுத்தப்படாவிட்டால், அது பொருளாதாரத்த்தில் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும். ஆக இது பெரும் விளைவை ஏற்படுத்தும் முன்னரே அதனை சரி செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலேயே வேலையின்மை தலைவிரித்தாட தொடங்கிய நிலையில் இந்தியா என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus pandemic: unemployment rate increased to 23.4 percent

CMIE report says India’s urban unemployment rate increased to 30.9%, even as overall rate rises to 23.4%, its indicating coronavirus pandemic impact on the economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X