டெல்லி: இன்றைய தேதிக்கு சாதாரணமாக மாதம் 20,000 சம்பாதிப்பவர்கள் கூட, விமானத்தில் பறக்கிறார்கள்.
விமான பயணிகள் எண்ணிக்கை ஒரு நாட்டில் அதிகரிப்பதைக் கூட பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தர வளர்ச்சிக் குறியீடுகளாகப் பார்க்கிறார்கள்.
இந்த சூழலில், சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம் ஒரு முக்கிய விவரத்தை வெளியிட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
எல்லாரும் வீட்ல இருந்து வேலை பாருங்க.. சோஹோ கார்ப்ரேஷன் முன்னெச்சரிக்கை!

கொரோனா வைரஸ்
இந்த ஒரு வைரஸ், ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் சுமாராக 80 நாடுகளில் பரவி இருக்கிறது. சுமார் 90,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், சுமார் 3250 பேர் இறந்து இருக்கிறார்கள். இத்தனை கொடிய கொரனா வைரஸ் தான் இப்போது விமான போக்குவரத்திலும் பிரச்சனையைக் கிளப்பி இருக்கிறது.

113 பில்லியன் டாலர்
இந்த கொரோன வைரஸ் பரவுவதால், உலகம் முழுக்க, விமான பயணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மேற்கொண்டு கொரோன வைரஸ் பரவினால், விமான சேவை நிறுவனங்கள், சுமார் 113 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் சந்திக்க வேண்டி இருக்கும் என சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம் சொல்லி இருக்கிறது.

பெரிய நஷ்டம்
இந்த 113 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு என்பது, உலக பொருளாதார சிக்கலின் போது இழந்த தொகைக்கு இணையானது எனவும் சொல்லி இருக்கிறது சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம். அதோடு கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் இருந்தால் கூட விமான சேவை நிறுவனங்கள் சுமார் 63 பில்லியன் டாலர் நஷ்டம் சந்திக்க வேண்டி இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது.

விமான சேவை பங்குகள்
இந்த கொரோன பாதிப்பால், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் காணத் தொடங்கி இருக்கின்றன. இந்த அதீத ஏற்ற இறக்கத்தில், விமான சேவை நிறுவன பங்குகளும் தப்பிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் இருந்து செயல்படும் இண்டிகோ நிறுவன பங்குகள் விலை 14 சதவிகிதமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் விலை 24 சதவிகிதமும் சரிந்து இருக்கின்றன.

வரிச் சலுகைகள்
நிறைய விமான சேவை நிறுவனங்கள், தங்கள் செலவுகளைக் குறைக்க பல உடனடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. விமான சேவை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடர்ந்து செய்ய, சுருக்கமாக நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்க, என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள்.

அரசு சலுகை
இந்த நேரத்தில் விமான சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள், செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் மற்றும் ஸ்லாட் ஒதுக்கீடு போன்றவைகளில் ஏதாவது சலுகை கொடுப்பதைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது சர்வதேச விமான போக்குவரத்துச் சங்கம். இவர்கள் கோரிக்கையை எந்த நாடாவது நிறைவேற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.