சீனா நிறுவனங்களை தெறிக்கவிடும் கொரோனா.. கவலைபடாதீங்க.. ஆறுதல் கூறும் சீனா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் கொடூர தாக்குதல் சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. ஒரு புறம் உயிர்பலி எனில், மறுபுறம் சீனாவின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

ஆட்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனா தாக்கம், இன்று பல நாடுகளில் பரவி வருவதால், அவற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவின் பாதிப்புக்கு பயந்து பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் சீனாவுடனான வர்த்தகத்தை உலக நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

"பிசினஸ் செய்றவங்க இந்த தப்ப பண்ணாதீங்க" அலிபாபா நிறுவனரின் அட்வைஸ்..!

கொரோனாவால் இறப்பு

கொரோனாவால் இறப்பு

சீனாவின் கொரோனா தாக்கத்தால் இதுவரை 900க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், 40,000 பேருக்கு மேல் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சீனாவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பொருளாதார ரீதியாக அந்த நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்திதுள்ளன.

வணிகத்தினை மேம்படுத்த உதவும்

வணிகத்தினை மேம்படுத்த உதவும்

இதனால் சீனா சென்ட்ரல் வங்கி, நிறுவனங்கள் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு 300 பில்லியன் யுவானை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் கொரோனாவுடன் போட்டி போட்டு எதிர்த்து போராடும் வணிகங்களுக்கு உதவ அடுத்த வாரம் ஊக்கமளிக்க உள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியிலான அச்சம்

பொருளாதார ரீதியிலான அச்சம்

இது பொருளாதார ரீதியாக மிக வீழ்ச்சி கண்டுள்ள இந்த சீனா நிறுவனங்களுக்கு மிக உதவும் என்றும் சீனா அரசு நம்புகிறது. இது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது. சீனாவின் மத்திய நகரமான வுகானில் தொடங்கிய இந்த கொரோனாவின் போராட்டம், தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஆக இது ஏற்கனவே மந்த நிலையில் உள்ள சீனா பொருளாதாரத்தினை பதம் பார்த்து விடும் எனவும் அஞ்சப்படுகிறது.

மறுகடன்

மறுகடன்

இதனால் சீனா அரசு பல மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பீப்பிள்ஸ் ஆப் சீனா திங்களன்று மறுகடன் வழங்கும் நிதியை வழங்குவதாகவும் கூறியுள்ளது. இது இந்த கொடிய வைரஸுடன் போராடும் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும். இது நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவளிக்கும் என்றும் கூறியுள்ளது.

நிதி உங்களுக்கு தான்

நிதி உங்களுக்கு தான்

இதே பீப்பிள்ஸ் ஆப் சீனாவின் துணை ஆளுனர் குய்கியாங் ஒன்பது பெரிய தேசிய வங்கிகளும், 10 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் உள்ள உள்ளூர் வங்கிகளும் சிறப்பு நிதியுதவிக்கும் தகுதி பெற்றுள்ளன என்றும் ஞாயிற்றுகிழமையன்று வெளியிடப்பட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்

நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்

மேலும் மேற்கூறிய இந்த 10 பகுதிகளில் ஹூபே மாகாணம், பெய்ஜிங், குவாங்டாங் மற்றும் நிதி மையமான ஷாங்காய் ஆகியவை அடங்கும். சீனா கூறும் இந்த நிதி ஊக்கமானது தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் உதவும் நிறுவனங்களுக்கு உதவுவதை ஊக்கமாகக் கொண்டுள்ளது என்றும் லியு கூறியுள்ளார்.

 நிதி வழங்கல் கண்காணிப்பு

நிதி வழங்கல் கண்காணிப்பு

மேலும் நிதி நிறுவனங்கள் விரைவாக மதிப்பாய்வு செய்து, விரைவில் கடன்களை வழங்க வேண்டும், அவை இரண்டு நாட்களுக்குள் நிதியை வெளியிடவேண்டும் என்றும் லியு கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் நிதியை பயன்படுத்துவதை மத்திய வங்கி கண்காணிக்கும், மேலும் விதிகளை மீறுவதற்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வீட்டிலேயே இருங்கள்

வீட்டிலேயே இருங்கள்

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவின் கொடிய தாக்குதல் மத்தியில், இந்த கொடிய தொற்றுதலைக் கட்டுபடுத்த சீனா நகரங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் குடிமக்கள் வீட்டிலேயே இருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளன. இது நிறுவனங்கள் மீண்டும் பணியைத் தொடங்குவதை தாமதப்படுத்தியுள்ளன. இது வருவாய் குறைவுக்கும் வழி வகுத்தள்ளன.

கடன்களை குறைக்க நடவடிக்கை

கடன்களை குறைக்க நடவடிக்கை

எப்படி இருப்பினும் சீனாவில் இந்த காலாண்டு வளர்ச்சியில் இது 2% வரை விழுங்கிவிடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தங்கள் அதரவை தெரிவிப்பதற்காகவும், பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காகவும் இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக தொழில்கள் மற்றும் சிறு மற்றும் நுண் நிறுவனங்களின் கடன்களை கண்மூடித்தனமாக குறைப்பதற்காக மத்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronovirus impact: china central bank said it will offer a $43 billion boost to help business

China’s central bank called financial institutions to avoid blindly cutting off loans from industries and small and micro enterprises in china.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X