கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
coronavirus:A timeline of the COVID-19 outbreak

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் போகிறது.

குறிப்பாக பலி எண்ணிக்கை 1,662 ஆகவும், இதுவே கொரோனாவினால் 68,786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி அதிவேகமாக பரவி வரும் இந்த கொரோனாவின் கொடூர தாண்டவத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், சீனாவில் இந்த தாக்குதலை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிசப்தமான உண்மை.

இந்தியாவிலும் தாக்கம்
 

இந்தியாவிலும் தாக்கம்

இந்த கொடூர தாக்குதல் ஒரு புறம் சீனாவை உலுக்கி வருகிறது எனில், மறுபுறம் சீனாவின் மொத்த தொழில்களும் முடங்கி போயியுள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரமும் மொத்தம் முடங்கி போயுள்ளது. சீனா தான் முடங்கியுள்ளது எனில், இதன் தாக்கம் உலக நாடுகளில் மொத்தமும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது இதன் எதிரொலி இந்தியாவிலும் தற்போது ஆரம்பித்துள்ளது.

வாட்சப்பில் பரவும் வதந்தி

வாட்சப்பில் பரவும் வதந்தி

வர்த்தகம் தான் சிறுக சிறுக முடங்கி போயுள்ளது எனில், மறுபுறம் மக்களை பயமுறுத்தும் ஆயுதமாக மாறி வருகிறது இந்த கொரோனா பற்றி வதந்திகள். இந்த கொரோனா பற்றிய வதந்திகள் வாட்சப் மெசேஜில் பரவி வருவதால், இது தவறான வதந்தியாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது இந்தியாவின் பொம்மை வர்த்தகளுக்கு பெருத்த அடியாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹோலி

இந்தியாவில் ஹோலி

இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான ஹோலி பண்டிகை வரவிருப்பதால், அதற்காக சீனாவிலிருந்து வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் கலர் பொடிகள் மற்றும், நீர் துப்பாக்கிகள், நீர் தெளிப்பான்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. சொல்லப்போனால் சீன பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதன் மூலம் இந்தியாவிலும் தொற்று ஏற்படும் என்றும் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இதனை நம்பியுள்ள சில்லறை வர்த்தகர்களின் வியாபாரமும் கேள்விக் குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கொரோனா பரவாது
 

இதன் மூலம் கொரோனா பரவாது

ஏனெனில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகளையும், நீர் தெளிப்பான்களையும் வாங்கினால் அதன் மூலம் கொரோனா பரவும் என்ற வதந்திகள் பரவி வருகின்றனவாம். இதனால் ஹோலி சம்பந்தமான பொருட்களும் விற்பனையாகவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் வியாபாரிகளோ ஹோலிக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொரோனா தாக்கத்திற்கு முன்பே இறக்குமதி செய்தது. ஆக இதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை என்று கூறினாலும், மக்கள் அதை நம்ப தயராக இல்லையாம்.

குழந்தைகளை ஈர்க்கும் பொம்மைகள்

குழந்தைகளை ஈர்க்கும் பொம்மைகள்

குறிப்பாக இந்த பொம்மைகள் குழந்தைகளை மிக எளிதில் ஈர்க்கும் என்பதால், மக்கள் தங்கள் குழந்தைகளை கொரோனா தாக்கிவிடும் என்ற அச்சத்திலேயே வாங்கி தருவதில்லையாம். ஆக தற்போது பொம்மை வியாபாரிகள் நாடு தழுவிய விழிப்புணர்வு திட்டங்கள் வேண்டும். இது பொம்மை விற்பனையை அதிகரிக்க உதவும். மேலும் இந்திய மக்களை ஆதாரமற்ற அச்சத்திலிருந்து இது காப்பாற்றும் என்றும் கூறியுள்ளனராம.

சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

சிக்கலை ஏற்படுத்தியுள்ளது

மக்களை எச்சரிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் இந்திய பொம்மை தொழிலாளர்களுக்கு இது அதிகமான சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. வர்த்தகர்கள் தங்களது தேவைக்காக சீனாவினை அதிகம் நம்பி இருப்பதால், சீனாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையினால் அது நிரப்பபட வாய்ப்பில்லை. அதிலும் தற்போது சீனா உற்பத்தியை மீண்டும் தொடராவிட்டால், நடுத்தர காலத்தில் அது மீண்டும் நெருக்கடியை தான் கொண்டு வரும் என்றும் கூறியுள்ளனர்.

மூன்று மாதம் வருகை இருக்காது மூன்று மாதம் வருகை இருக்காது

மூன்று மாதம் வருகை இருக்காது மூன்று மாதம் வருகை இருக்காது

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சீனா தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆக அதற்கு முன்பு கண்டெய்னர்களில் சரக்கு அனுப்பட்டது தான். மேலும் அதற்கு முன்பு அனுப்பட்ட கண்டெய்னர்கள் இந்தியாவினை அடைந்துள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இன்னும் மூன்று மாதங்களுக்கு வருகை இருக்காது என்று டாய் அசோசியேஷன் ஆப் இந்தியா துணைத் தலைவர் விபின் நிஜவன் கூறியுள்ளார்.

பாதிப்பு தான்

பாதிப்பு தான்

பொம்மை இறக்குமதியை பொறுத்த வரையில், சீனாவினையே அதிகம் சார்ந்திருப்பதால், இந்தியா மிகவும் பாதிக்கப்படக் கூடியது தான். உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான IMARC இந்தியாவின் பொம்மைகளின் சந்தை, 1.5 (இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி ரூபாய்) பில்லியன் டாலர்கள் என மதிப்பிடுகிறது. குறிப்பாக 2018 - 19ம் ஆண்டில் இந்தியா 2,127 கோடி ரூபாய் மதிப்புள்ள பொம்மைகளை இறக்குமதி செய்தது. அதில் கிட்டதட்ட 90% அதாவது 1,828 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்ப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

விலையும் அதிகரிப்பு

விலையும் அதிகரிப்பு

சீனாவில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், ஒவ்வொரு பொம்மை விலையும் 30 - 40% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு தங்களுக்கு போதிய சரக்கு கிடைக்காது என்பதால் பொம்மை விலைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இங்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனால் போதிய சரக்கு இல்லை என்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய பொம்மை துறைக்கு பாதிப்பு தான்

இந்திய பொம்மை துறைக்கு பாதிப்பு தான்

எப்படி எனினும் இந்திய பொம்மை துறைக்கு தற்போது பிரச்சனை தான். ஏனெனில் இது சிறு குறு உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும் நிச்சயம் இது பாதிக்கும். இது பொம்மைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் அதிக தேவையுள்ள இந்த காலத்தில் போதிய சரக்குகள் இல்லாததாலும், வாட்ஸ் அப்பில் பரவி வரும் செய்திகளாலும் புதிய ஆர்டர்கள் எடுக்கப்படவில்லை என்று கூறிவருகின்றன. ஆனால் சீனாவின் நிலை சரியாகும் வரையில் பொம்மைகளுக்குகாக அதிக செலவு செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronovirus impact: India’s toys business may hit due to coronovirus

India’s toy business peoples said No virus can spread through water spray or colour powders. Also Even though almost every pichkari and colour that we use are being imported from China. and All the stocks for Holi season are already in Indian warehouses. So don’t worry about coronavirus.
Story first published: Sunday, February 16, 2020, 11:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more