கோவிட்-19 மருந்து: எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி வரி குறைப்பு.. முழு விபரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 44வது ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் GOM ஜூன் 8ஆம் தேதி பரிந்துரை செய்த வரி தளர்வுகளை ஆய்வு செய்து கொரோனா மருந்து மற்றும் கொரோனா தொற்றைத் தடுக்கும், காப்பாற்றும் பல உபகரணங்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.

 

இப்படி எந்தெந்த பொருட்கள், மருந்துகள் மீது வரி குறைக்கப்பட்டு உள்ளது, இதன் பழைய வரி விதிப்பு என்ன போன்ற அனைத்து விதமான தகவல்களையும் இங்கே பார்ப்போம்.

அதிகப்படியான ஜிஎஸ்டி வரி

அதிகப்படியான ஜிஎஸ்டி வரி

கொரோனா தொற்று இந்தியாவில் கிட்டதட்ட 1.5 வருடம் முழுமையாக இருந்து வரும் நிலையில், இதுநாள் வரையில் மத்திய அரசு உயிர் காக்கும் கொரோனா மருந்து மற்றும் கொரோனா தொற்றைத் தடுக்கும், காப்பாற்றும் உபகரணங்கள் மீது நடைமுறைப்படுத்தியிருந்த ஜிஎஸ்டி வரி அளவீடு சாமானிய மக்களை அதிகளவில் பாதித்துள்ளது.

கோவிட் வேக்சின்

கோவிட் வேக்சின்

நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்றால் அது கோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காதது தான். கோவிட் வேக்சின் மீது தற்போது நடைமுறையில் இருக்கும் 5 சதவீத வரி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா மருந்து மீதான வரி
 

கொரோனா மருந்து மீதான வரி

Tocilizumab - 5 சதவீதத்தில் இருந்து 0% ஆகக் குறைப்பு

Amphotericin B - 5 சதவீதத்தில் இருந்து 0% ஆகக் குறைப்பு (இது கருப்புப் பூஞ்சை நோய் தீர்க்கும் மருந்து)

Heparin (Anti Coagulants) - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

ரெம்டெசிவிர் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

கொரோனா சிகிச்சைக்காக அரசு துறை அறிவிக்கும் பிற மருந்து - இனி 5 சதவீதம் மட்டுமே

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்புடைய கருவிகள்

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்புடைய கருவிகள்

மருத்துவத் தர ஆக்சிஜன் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்/ஜெனரேட்டார் (தனிநபர் இறக்குமதி உட்பட) - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

வென்டிலேட்டர்ஸ் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

வென்டிலேட்டர் மாஸ்க்/கனுலா/ஹெல்மட் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

BiPAP இயந்திரம் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

HFNC கருவி - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

டெஸ்டிங் கிட் மற்றும் இயந்திரம்

டெஸ்டிங் கிட் மற்றும் இயந்திரம்

தற்போது சந்தையில் கொரோனா ஹோம் டெஸ்டிங் கிட் வந்திருக்கும் நிலையில் இதற்கு வரி குறைக்கப்பட்டு உள்ளது.

கோவிட் டெஸ்டிங் கிட் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

இதர பரிசோதனை கிட் (D-Dimer, IL-6, LGH,..) - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

இதர கோவிட் கருவிகள் மற்றும் உபகரணங்கள்

இதர கோவிட் கருவிகள் மற்றும் உபகரணங்கள்

பல்ஸ் ஆக்சிமீட்டர் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

ஹேன்ட் சானிடைசர் - 18 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

வெப்பநிலை பரிசோதனை கருவி - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

கோவிட் மூலம் இறந்தவர்களை எறியூட்டும் பர்னேஸ் - 12 சதவீதத்தில் இருந்து 5% ஆகக் குறைப்பு

ஆம்புலன்ஸ் - 28 சதவீதத்தில் இருந்து 12% ஆகக் குறைப்பு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Covid and Black fungus medicine, medical equipment GST tax slashed: Check what got cheaper by How much

Covid and Black fungus medicine, medical equipment GST tax slashed: Check what got cheaper by How much
Story first published: Sunday, June 13, 2021, 12:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X