சுழன்றடிக்கும் கொரோனா.. முடங்கிய பணியமர்த்தல்.. எதிர்பார்ப்பில் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்க மறுபுறம், வேலையின்மை, நிதி நெருக்கடி, வேலையிழப்பு என மக்களை வதைத்து வருகிறது.

 

எல்லாம் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால் வந்த வினை. சமீபத்திய நாட்களாக கொரோனாவின் எண்ணிக்கையானது லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றது. பலி எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகின்றது.

 திடீர் பண தேவையா..? பிஎப் பணத்தை 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி..?! திடீர் பண தேவையா..? பிஎப் பணத்தை 5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி..?!

இதற்கிடையில் ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலையினை இழந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் கட்ட பரவலினால் ஏற்பட்ட இழப்பினையே சரிசெய்ய இயலாத நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பரவல் மிக மோசமான நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இழப்பீடு செய்ய முடியாத அளவு இழப்புகளை கொடுத்து வருகின்றது.

கொரோனாவால் மோசமான ஆண்டு

கொரோனாவால் மோசமான ஆண்டு

இதற்கிடையில் மூன்றாம் கட்ட பரவலும் வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2020 தான் இதுவரை மோசமான ஆண்டாக இருந்த நிலையில், போகிற போக்கினை பார்த்தால் 2021 அதைவிட மோசமான ஆண்டாக மாறலாம் என எதிர்பார்க்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில ஆய்வு நிறுவனங்கள் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. அதில் வேலை வாய்ப்புகள் என்பது உள்ளன. ஆனால் நிறுவனங்கள் பணியமர்த்தலை தள்ளி வைத்துள்ளன என்று கூறுகின்றன.

பணியமர்த்தல் முடக்கம்

பணியமர்த்தல் முடக்கம்

முதல் கட்ட பரவலுக்கு பின்னர், தற்போது இரண்டாம் கட்ட பரவல் என்பது தற்காலிகமாக பணியமர்த்தலை முடக்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. நாக்குரி.காம் இது குறித்த அறிக்கையில், கோவிட் 2.0க்கு பிறகு வேலை சந்தையில் 15% சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் இது குறைவு தான் என இதன் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறியுள்ளார்.

கொரோனா காலத்திலும் சிறப்பான செயல்பாடு
 

கொரோனா காலத்திலும் சிறப்பான செயல்பாடு

கடந்த ஆண்டில் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தல் என்பது கடைசி முன்னுரிமையாக இருந்தது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் சில்லறை விற்பனை, லாகிஸ்டிக்ஸ், இ-காமர்ஸ் சேவைகள், விவசாயம் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டன. லாக்டவுன் காரணமாக இ-காமர்ஸ்களின் சேவை மக்கள் அவசியமானதாக இருந்தது. இதனால் இந்த துறைகள் சிறப்பாக செயல்பட்டன.

Attrition விகிதம் அதிகரிக்கும்

Attrition விகிதம் அதிகரிக்கும்

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக முடக்கம் குறித்து மக்கள் கவலைபடத் தேவையில்லை. ஏனெனில் பல்வேறு துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும். அடுத்த நிதியாண்டில் இந்த வேலை வாய்ப்புகள் நேர்மறையான வளர்ச்சியுடன் இருக்கும். குறிப்பாக Attrition விகிதம் 2 - 3% அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

சில்லறை வர்த்தகம்

சில்லறை வர்த்தகம்

லாக்டவுன் காரணமாக சில்லறை வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டு வர தொடங்கியுள்ளது. இது கடந்த செப்டம்பர் 2020 காட்டிலும் 15% பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. எப்படியிருப்பினும் முந்தைய ஆண்டை காட்டிலும் 50% குறைவாகும். கடந்த ஜூன் 2020ல் இருந்து நேர்மறையான வளர்ச்சி காணப்பட்டாலும், ஜூலை 2020ல் சற்று சரிவினைக் கண்டுள்ளதாக நாக்குரி தரவு மூலம் அறிய முடிகிறது.

கிளவுட் டெக்னாலஜி

கிளவுட் டெக்னாலஜி

தற்போது நாட்டில் லாக்டவுன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வருகின்றன. இதனால் கிளவுட் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ஏபிஐ, விர்சுவல் ரியால்டி, 5ஜி, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதாக தரவுகள் கூறுகிண்றன.

Array

Array

ஈ-காமர்ஸ் & லாகிஸ்டிக்ஸ் துறைகளை பொறுத்தவரையில், கொரோனாவின் காரணமாக இதன் தேவை இன்னும் அதிகரிக்கும். இது டெலிவரி மற்றும் சப்ளை செய்வதற்காக இன்னும் பணியாளர்கள் தேவைப்படும். லாகிஸ்டிக்ஸ் தேவையும் அதிகரிக்கும். இதன் காரனமாக இந்த துறைகளில் பணியாளர்கள் எண்ணிக்கையானது அதிகரிக்கும். அடுத்த சில மாதங்களில் ஒரு மாதத்தில் 2,00,000 - 3,00,000 அளவில் அதிகரிக்கலாம் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Array

Array

ஹெல்த்கேர் & பார்மா துறைகளை பற்றி விவரிக்கவே தேவையில்லை. ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இவர்களின் பங்கு தான் மிக முக்கியமானது. தற்போதுள்ள நெருக்கடியான நிலையை சமாளிக்க, புதிய பணியமர்த்தல் என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. அதே போல பார்மா துறையில் மருத்து உற்பத்தியிலும் தேவை அதிகரித்துள்ள நிலையில், பணியமர்த்தல் என்பது அதிகரித்துள்ளது.

லைஃப் சயின்ஸ் துறை

லைஃப் சயின்ஸ் துறை

லைஃப் சயின்ஸ் துறையில் நோய் எதிர்ப்பு, மரபணு பகுப்பாய்வு உள்ளிட்ட பல துறைகளிலும் பணியமர்த்தல் என்பது அதிகரித்துள்ளது. ஏனெனில் வருங்காலத்தில் இவர்களுக்கான தேவை என்பது இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்த்தில் இவர்களின் பங்கும் மிக முக்கியமானதே.

கல்வித் துறை

கல்வித் துறை

கல்வித் துறையானது கடந்த ஆண்டு முதல் கொண்டே மிகப்பெரிய தேவையை கொண்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் கல்வி குறித்த வளர்ச்சியானது அதிகரித்து வருகின்றது. ஆக இத்துறையில் தேவையானது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கான தேவை கணிசமான வளர்ச்சியினை எட்டியுள்ளன.

விவசாயத் துறை

விவசாயத் துறை

விவசாயத் துறையினை பொறுத்தவரையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், உற்பத்தியை மேம்படுத்தும் எந்தவொரு அம்சமும் வரவேற்கதக்கதாக இருக்கும். இதனால் இந்த துறையிலும் தேவை என்பது கணிசமாக இருந்து கொண்டே தான் இருக்கும். ஆக அதற்கேற்ப நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

காத்துக் கிடக்கும் சவால்கள்

காத்துக் கிடக்கும் சவால்கள்

சமீபத்திய அறிக்கை ஒன்றில், திறமைக்கான தேவைகள் என்றும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் திறமையானவர்கள் அந்தளவுக்கு இல்லை. ஆக ஊழியர்கள் அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதே நல்லதொரு வேலையை பெற வழிவகுக்கும் என்றும் ஐடி துறை சார்ந்த நிபுணர்கள் கூறியிருந்தனர். இது ஐடி துறை மட்டும் அல்ல, எந்தவொரு துறையானலும் நம் திறமையை வளர்த்துக் கொள்வதே, எப்படியான நெருக்கடியான நிலையையும் சமாளிக்க உதவும். ஏனெனில் கொரோனா காலத்தில் முடங்கியிருந்தாலும், இனி வரும் காலங்களில் முடக்கப்பட்ட பணியமர்த்தல் செய்யப்பட வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

COVID wave freezes hiring, but jobs boom coming years

COVID wave freezes hiring, but jobs boom coming years
Story first published: Tuesday, May 11, 2021, 20:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X