அக். முதல் கோவிட் வேக்சின் ஏற்றுமதிக்கு அனுமதி.. மத்திய அரசு முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரித்து வரும் இதேவேளையில், மக்களுக்கு எப்போதும் இல்லாமல் வேக்சின் அதிகமாகக் கிடைத்து வருகிறது. சமீபத்தில் மோடியின் பிறந்த நாளில் கூட ஓரே நாளில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 2 கோடி பேருக்கு வேக்சின் அளிக்கப்பட்டது, ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது குறித்து ப.சிதம்பரம் உட்படப் பலர் விமர்சனம் செய்தனர்.

 

இந்திய மக்களுக்கு முழுமையாக வேக்சின் அளிக்காத நிலையில், அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் இருந்து கோவிட் வேக்சின் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..?!

கோவிட் வேக்சின்

கோவிட் வேக்சின்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான வேக்சின் உற்பத்தி தளங்கள் அதிகமாக இருந்த போதிலும் போதுமான வேக்சின் மக்களுக்குக் கிடைக்காமல் இருந்த நிலையில் மத்திய அரசு வேக்சின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இதனால் படிப்படியாக மக்களுக்கு வேக்சின் கிடைக்கத் துவங்கியது. ஆனாலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு அளிக்கும் வேக்சின் அளவில் பெரிய குழப்பம் இருந்தது.

3வது கொரோனா அலை

3வது கொரோனா அலை

ஆனால் கடந்த 3 வாரங்களாகப் பெரும்பாலான மக்களுக்கு வேக்சின் கிடைத்து வருவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இதேவேளையில் தான் 3வது கொரோனா அலைக்கான சாத்தியகூறுகள் அதிகரித்துள்ளது, அக்டோபர் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று அளவு அதிகரிக்கும் எனச் சில கணிப்புகள் வந்துள்ளது.

வேக்சின் ஏற்றுமதிக்கு ஒப்புதல்
 

வேக்சின் ஏற்றுமதிக்கு ஒப்புதல்

மத்திய அரசு இந்தியாவில் போதுமான வேக்சின் தேவையைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் உபரியாக இருக்கும் வேக்சின்-ஐ வெளிநாடுகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வேக்சின் ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு நீக்கப்பட உள்ளது.

COVAX - சர்வதேச வேக்சின் திட்டம்

COVAX - சர்வதேச வேக்சின் திட்டம்

இதுகுறித்து மன்சுக் மாண்டவியா பேசுகையில், 2022ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் இந்தியாவில் வேக்சின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு COVAX - சர்வதேச வேக்சின் திட்டத்திற்கு இந்தியா கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக இந்தியா மற்றும் உலக நாடுகளின் வேக்சின் தேவையைப் பூர்த்தி செய்ய மைதிரி திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் வேக்சின் பகிர்வு அளவீடு

ஏப்ரல் வேக்சின் பகிர்வு அளவீடு

ஏப்ரல் 2021 வரையில் இந்தியாவில் சுமார் 66.3 மில்லியன் வேக்சின் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் 10.7 மில்லியன் வேக்சின் இந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டது. 35.7 மில்லியன் வேக்சின்-ஐ வேக்சின் உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக விற்பனை செய்தது. 19.58 மில்லியன் வேக்சின் COVAX திட்டத்திற்கு அளிக்கப்பட்டது.

300 மில்லியன் வேக்சின் உற்பத்தி

300 மில்லியன் வேக்சின் உற்பத்தி

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் வேக்சின் உற்பத்தி நிறுவனங்கள் 260 மில்லியன் வேக்சின் சப்ளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் இதன் எண்ணிக்கை 300 மில்லியன் வேக்சின் ஆக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

உபரி வேக்சின்

உபரி வேக்சின்

இந்த நிலையில் இந்திய சந்தை தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரித்து, உபரி வேக்சின்-ஐ மைதிரி திட்டத்தின் வாயிலாக COVAX வாக்குறுதியைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. மேலும் இந்தியாவில் பல புதிய வேக்சின் உற்பத்தி நிறுவனங்கள் வந்துள்ள நிலையில் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உள்ளது.

வேக்சின் இருப்பு உருவாக்குதல்

வேக்சின் இருப்பு உருவாக்குதல்

மேலும் மத்திய அரசு 3வது அலைக்கு முன்கூட்டியே தயாராகும் விதமாகப் போதுமான வேக்சின் இருப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய கோவிட் வேக்சின் உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மாதம் 160 மில்லியன் வரையில் வேக்சின் தயாரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை 200 மில்லியன் வேக்சின்-ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

மக்கள் கருத்து என்ன..?!

மக்கள் கருத்து என்ன..?!

இந்தியாவில் கொரோனா தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தாத நிலையிலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக வேக்சின் அளிக்கப்படாத நிலையிலும் இந்தியாவில் இருந்து வேக்சின் ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது சரியா..? covax வாக்குறுதியைக் காப்பாற்றுவதும் முக்கியம் என மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள். கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Covid19 vaccines export will start from October says Union Health Minister Mansukh Mandaviya

Covid vaccines export will start from october says Union Health Minister Mansukh Mandaviya
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X