கோவிஷீல்டு.. மாநில அரசுக்கு ரூ.400.. தனியாருக்கு ரூ.600.. கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு 2,94,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலியானோர் எண்ணிக்கை 2,000 மேல். இந்தியாவில் மட்டும் மொத்தம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,82,570 பேராகும்.

 

இதற்கிடையில் நாட்டில் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் கோவிஷீல்டு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கே விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

 கொரோனா வேக்சின் பெற தனியார் மருத்துவமனைக்கு இனி அரசு உதவாது..! கொரோனா வேக்சின் பெற தனியார் மருத்துவமனைக்கு இனி அரசு உதவாது..!

சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

அரசுக்கும் தனியாருக்கும் இந்த விலை எனும் போது, இது அடுத்து மக்களுக்கு என்ன விலைக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. இது குறித்த எந்த தெளிவான அறிக்கையும் வரவில்லை. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதன் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்

தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்

எனினும் தான் தடுப்பூசியின் விலையானது தனியாருக்கு 1000 ரூபாய்க்கு வரலாம் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதனை குறைவாகத் தான் உள்ளது. இது மே 1 முதல் 18 வயதுக்குற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ள நிலையில் வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள்
 

கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுகோள்

தற்போது நிலைமை மோசமாக உள்ள நிலையில், ஒவ்வொரு கார்ப்பரேட்டுகளுக்கும், தடுப்பூசியை தனித்தனியாக சப்ளை செய்வது என்பது சிக்கலான ஒரு விஷயம். ஆக கார்ப்பரேட்டுகளும், தனி நபர்களும் அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் வாயிலாகவும், தனியார் சுகாதார அமைப்புகளின் வாயிலாகவும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

முன்னர் விலை நிலவரம்

முன்னர் விலை நிலவரம்

மேலும் 4 - 5 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி தாராள வர்த்தகத்தில் சந்தையில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார் பூனாவாலா. ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்துள்ள நிலையில், தடுப்பு மருந்தின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Covidshield to cost Rs.400 per dose for states, Rs.600 for private hospitals, Rs.150 for centre

Coronavirus impact.. covidshield to cost Rs.400 per dose for states, Rs.600 for private hospitals, Rs.150 for centre
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X