ஆபத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரெடிட் கார்டு கடன்கள்.. சிக்கலில் வங்கிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு கடன் வளர்ச்சியானது 3% எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றது.

இந்த காலகட்டத்தில் மொத்த நிலுவை தொகை 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது, வங்கியாளர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று பிசினஸ் டுடே தெரிவித்துள்ளது.

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..!நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா.. இந்த கட்டணங்கள் எல்லாம் உண்டு.. எச்சரிக்கையா இருங்க..!

மோசமான அறிகுறிகள்

மோசமான அறிகுறிகள்

வங்கிகள், சரியாக கடனை கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட, தற்போது கடனை திரும்ப செலுத்துவதில் தாமதப்படுத்திக் கொண்டிருப்பதாக அறிக்கை கூறியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் முதல் கார்டு வழங்கும் நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கார்டு நிறுவனத்தின் இதன் அறிகுறிகள் காணப்படலாம் என்றும் இந்த தரவுகள் கூறுகின்றன.

வாராக்கடன் விகிதம் அதிகரிப்பு

வாராக்கடன் விகிதம் அதிகரிப்பு

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கொடுப்பனவுகள் 2020 - 21ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் மொத்த வாரக்கடன் விகிதம் இரு மடங்காக அதிகரித்து 4.29 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை இஎம்ஐ செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும், மொத்த வாரக்கடன் விகிதம் அதிகரித்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

கடன் மறுசீரமைப்பு
 

கடன் மறுசீரமைப்பு

பெரும்பாலான வங்கிகள் வருமானம் அல்லது வேலை இழப்பு காரணமாக, தற்போது கடன்களை செலுத்த இரண்டு ஆண்டு மறுசீரமைப்பை வழங்குகின்றன. இந்த நிலையில் முன்னர் கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஆபத்தில் உள்ளதை காட்டுகிறது.

எதிர்மறையான வளர்ச்சி

எதிர்மறையான வளர்ச்சி

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிரெடிட் கார்டு வர்த்தகம் 3% எதிர்மறை வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால பகுதியில் 10 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பாதுகாப்பற்ற கடன்களில் அதிமான மக்கள் இயல்பு நிலையாக இருப்பதால், வங்கிகள் அதிக எச்சரிக்கையுடன் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடன் வளர்ச்சி அதிகரிக்கும்

கடன் வளர்ச்சி அதிகரிக்கும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பிரிவில் அதிக வளர்ச்சி காணப்பட்டாலும், அதிக எண்ணிக்கையிலான வாரக்கடன் காரணமாக வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை என்பது அதிக எண்ணிக்கையிலான வாரக்கடன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். எனினும் கடன் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் வங்கி கட்டுப்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டீபால்டர்கள் அதிகரிப்பு

டீபால்டர்கள் அதிகரிப்பு

இருப்பினும் பெரிய அளவிலான வாராக்கடன் விகிதமானது, தற்போதைக்கு அதிகம் வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான வங்கிகள் வலியுறுத்தப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டு கடன் மறுசீரமைப்பை அனுமதித்துள்ளன. எஸ்பிஐ ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 21.08 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மறுசீரமைப்புக்கு மாற்றியுள்ளது.

கொரோனா தாக்கத்தின் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான டீபால்டர்களை காணக்கூடும். இதனால் வாரக்கடன் மதிப்பும் சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit card loans worth over Rs.1 lakh crore at risk

RBI data said Credit card loans worth over Rs.1 lakh crore at risk
Story first published: Friday, October 30, 2020, 15:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X